நடிகையோடு சர்ச்சை.. கௌதம் கார்த்திக்கின் நண்பன்! சின்ன மருமகள் சீரியல் கதாநாயகன் நவீன் யார் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் சமீபத்தில் தொடங்கி இருக்கும் சின்ன மருமகள் சீரியல் டிஆர்பியில் முன்னணி இடத்தில் இருந்து வருகிறது. இந்த வாரத்தில் இந்த சீரியல் டிஆர்பியில் டாப் 10 இடங்களுக்குள் வந்திருக்கும் நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் நடிகர் நவீன் பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.

அந்த வகையில் சின்னத்திரையில் நடிகர் நவீனுக்கு ஏற்கனவே அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதுவும் இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே என்று சீரியல் மூலமாக பல பெண்களின் இதயத்தை கவர்ந்திருந்தார். அதோடு அந்த சீரியல் முடிவடைந்த பிறகு இவர் சில வருடங்களாக சீரியலில் எதுவும் நடிக்காமல் இருந்த நிலையில் இப்போது மீண்டும் சின்ன மருமகள் சீரியலில் கதாநாயகனாக மாறி இருக்கிறார்.

 chinna marumagal serial actor naveen biography

இவர் பற்றி விரிவாக பார்க்கலாம். இதயத்தை திருடாதே என்ற சீரியல் பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அதில் இரண்டாவது பாகம் தொடங்கியது. இரண்டாவது பாகத்திலும் நவீன் தான் கதாநாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக அந்த சீரியலில் நடிகை பிந்து நடித்திருந்தார். இவர்கள் இருவரும் ஜோடியாக நடிக்கும் போது வெளியே செல்லும் இடங்களில் எல்லாம் புகைப்படங்கள் ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிட்டு வருவதை பார்த்து இவர்கள் இருவரும் காதலிக்கிறார்களா என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

ஆனால் இதற்கு இவர்கள் இருவருமே விளக்கம் கொடுத்திருந்தனர். அதில், நாங்கள் இருவரும் நண்பர்கள் தான் வெளியே சீரியலுக்காகவும், விளம்பரங்களுக்காகவும் தான் நாங்கள் அப்படி இருக்கிறோமே தவிர வேறு எதுவும் எங்களுக்குள் இல்லை என்று விளக்கம் கொடுத்திருந்தனர். அதுபோல நவீன் ஜூலை 1999 இல் சென்னையில் தான் பிறந்திருக்கிறார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் சரளமாக பேசுவாராம். அதனாலேயே இவர் 2004இல் இருந்து தமிழ் மற்றும் மலையாளத்தில் நடித்து வருகிறார். அதோடு பல குறும்படங்களில் நடித்த இவர் அதன் மூலமாகவே சினிமா வாய்ப்பு இவருக்கு கிடைத்திருக்கிறது. அதிலும் கௌதம் கார்த்திக்கும் இவரும் நல்ல நண்பர்களாம். இவர் கௌதம் கார்த்திக் உடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவும் செய்திருக்கிறார்.

ஆனால் அந்த திரைப்படம் திரைக்கு வரவில்லையாம். அதுபோல சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி திரைப்படங்களிலும் இவர் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆனால் கதாநாயகனாக வேண்டும் என்பதுதான் இவருடைய ஆசையாம். அதை தொடர்ந்து தான் இவருக்கு இதயத்தை திருடாதே என்ற சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதற்கு பிறகு பெரிய அளவில் இவருக்கு பிரபலம் கிடைத்திருந்த நிலையில் சினிமாவில் இவர் நினைத்த மாதிரி எந்த கேரக்டரும் அமையாமல் இருந்ததால் இவர் சீரியல்களில் நடிப்பதை நிறுத்தி வைத்திருக்கிறார். அந்த நேரத்தில் தான் அவருக்கு செய்தி வாசிப்பாளர் கண்மணியோடு திருமணமும் முடிவடைந்தது. இவர்களுடைய திருமணம் காதல் திருமணமா? என்ற கேள்வி ரசிகர்களுக்கு இருந்த நிலையில் அது குறித்தும் இவர்கள் இருவரும் விளக்கம் கொடுத்திருந்தனர்.

அதில் இந்த திருமணம் வீட்டில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணம் தான் என்று சொல்லி இருந்தனர். இப்போது இவர்களுக்கு சமீபத்தில் தான் ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த நிலையில் மீண்டும் சின்ன மருமகள் சீரியல் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் நவீனுக்கு சின்னத்திரையில் வரவேற்பு கிடைத்த தொடங்கி விட்டது. இன்னும் போக போக இந்த சீரியல் எப்படி இருக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+