எல்லை மீறி போறீங்க? இதுக்கு இல்லையா சார் எண்ட்? வரம்பு மீறும் சீரியல்கள்.. வியூஸ்க்காக இப்படியா?
சென்னை: பிரபல சேனலில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியலில் கதாநாயகனுக்கு கதாநாயகி எண்ணெய் தேய்த்து குளிக்க வைக்கும் காட்சி புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாக சீரியல்களில் டிஆர்பிக்காக ஒவ்வொரு வாரமும் கதையில் மாற்றம் செய்வது வாடிக்கை தான். ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் சில சீரியலில் டிஆர்பி அதிகரிக்க வைக்க வேண்டும் என்பதற்காக ஆபாச படங்களைப் போலவே சீரியலில் காட்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

திரைப்படங்களில் சென்சார் இருப்பதால் அங்கு பல காட்சிகள் டெலிட் செய்யப்படுகிறது. ஆனால் சீரியலில் சென்சார் பிரச்சனை இல்லை என்பதால் இஷ்டத்துக்கு இவர்கள் எடுக்கும் காட்சிகள் பார்க்கும் ரசிகர்களை நெளிய செய்கிறது. சீரியல்கள் என்றாலே குடும்பத்தினர் எல்லோரும் ஒன்றாக பார்ப்பதுதான்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிடித்தோ பிடிக்காமலோ சில சீரியல்களை பார்க்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. ஒரு வீட்டில் வயதானவர்கள் இருந்தால் அவர்கள் பார்க்கிறார்கள் அவர்களோடு சில நேரங்களில் குழந்தைகளும் அமர்ந்து சீரியல் பார்த்துக் கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் வீட்டிற்கு வந்து சாப்பிட வரும் கணவன்மார்களும் பிடிக்காவிட்டாலும் அந்த சீரியலை பார்க்கிறார்கள்.
இப்படி குடும்பத்தினர்கள் எல்லோரும் பார்க்கும் சீரியல்களில் முகம் சுளிக்க வைக்கும் ஆபாச காட்சிகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் பிரபல சேனலில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் என்ற பெயர் வைத்த சீரியலில் சில காட்சிகள் இருக்கிறது. அதில் கதாநாயகனுக்கு கதாநாயகி எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்கிறார்.
பிறகு அவரை குளிக்க வைக்கிறார். அப்போது கணவரும் மனைவிக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வைக்கிறார். இந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. இது சீரியலா அல்லது ஆபாச படமா? என்று கேள்விகள் குவிந்து வருகிறது. இந்த சீரியலின் கதைப்படி கதாநாயகி படித்து டாக்டர் ஆக வேண்டும் என்று ஆசையோடு இருக்கிறார்.
அவரை அந்த ஊரில் இருக்கும் பணக்கார ஒருவரின் மகனுக்கு பிடித்து விடுகிறது. தான் அந்த பெண்ணை காதலிக்கும் விஷயத்தை தன்னுடைய தந்தையிடம் சொல்கிறார். தந்தை அந்த பெண்ணோடு திருமண ஏற்பாடுகள் செய்கிறார். ஆனால் எனக்கு கல்யாணத்தில் விருப்பமில்லை என்று அந்த பெண் வீட்டில் சொல்கிறார். அதை யாரும் கேட்காமல் திருமண ஏற்பாடுகள் செய்கிறார்கள்.
இதனால் அந்தப் பெண் கலெக்டருக்கு போன் செய்து தனக்கு 18 வயது ஆவதற்கு முன்பு திருமணம் செய்ய முயற்சி செய்கிறார்கள் என்று சொல்லிவிடுகிறார். இதனால் திருமணமும் தடுத்து நிறுத்தப்படுகிறது. அதோடு குழந்தை திருமணம் செய்து வைக்க முயற்சி செய்ததற்காக கதாநாயகனின் அப்பாவை போலீசில் அரெஸ்ட் செய்கின்றனர்.
இதனால் கதாநாயகன் எங்க அப்பா ஜெயிலுக்கு போக காரணமாக இருந்தவர்களை நான் பழி தீர்ப்பேன் என்று இருக்கிறார். இந்த விஷயங்கள் எல்லாம் கதாநாயகனின் அத்தைக்கு தெரிகிறது. அந்த அத்தை பொண்ணுதான் கதாநாயகனை கல்யாணம் செய்ய வேண்டும் என்று இருக்கிறார். ஆனாலும் இதே கதாநாயகி தமிழ் செல்விக்கு 18 வயது முடிவடைந்ததும் கதாநாயகனோடு திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள்.
திருமணத்திற்கு பிறகு படிக்க வேண்டும் டாக்டராக வேண்டும் என்ற லட்சியத்தை மூட்டை கட்டி ஓரமாக வைத்துவிட்டு தன்னுடைய கணவரை எப்படி மயக்குவது? அவரோடு எப்படி ஊர் சுற்றுவது? என்று கதாநாயகி பிளான் போட்டு அதற்காக முயற்சியிலே இருக்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் வில்லி திருமணத்தை தடுத்து நிறுத்தியது கதாநாயகி தான் என்ற உண்மையை உடைத்து விடுகிறார்.
பாக்கியலட்சுமி: பாக்யா பற்றி தப்பா பேசும் இனியா, செழியன்.. ஜெனி செம பதிலடி.. உண்மையை உடைத்த எழில்
இதனால் கதாநாயகன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் தமிழ்ச்செல்வியை வீட்டை விட்டு துரத்துகிறார்கள். ஆனால் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக அரசியல் பிரமுகர் ஒருவர் கதாநாயகன் வீட்டிற்கு வருகிறார் என்பதால் மொத்த குடும்பமும் ஒற்றுமையாக இருப்பது போல காட்டிக் கொள்ள வேண்டும் என்று கதாநாயகி தமிழ்செல்வியை மீண்டும் வீட்டிற்குள் கூப்பிடுகிறார்கள்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கதாநாயகனை தன் பின்னால் சுற்ற வைக்க வேண்டும் என்று தமிழ்ச்செல்வி பல காம விளையாட்டுகளை விளையாடுகிறார். இது பார்க்கும் ரசிகர்களை பதற வைக்கிறது. இந்த மாதிரி காட்சிகளை சீரியலில் தடை செய்ய வேண்டும் என்பது பலருடைய கோரிக்கையாக இருக்கிறது.
தற்போதைய சூழ்நிலையில் இணையத்தில் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க குழந்தைகள் தவறான பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகிறார்கள். அது போதாது என்று டிவி சீரியலில் கூட ஆபாச காட்சிகளை காட்டி குழந்தைகளின் மனதை கெடுக்க பார்க்கிறார்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன என்பதை கமெண்டில் தட்டி விடுங்க.












Click it and Unblock the Notifications