பாக்கியலட்சுமி: பாக்யா பற்றி தப்பா பேசும் இனியா, செழியன்.. ஜெனி செம பதிலடி.. உண்மையை உடைத்த எழில்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நவம்பர் 12ஆம் தேதிக்கான எபிசோடில் எழில் பங்க்ஷனுக்கு பாக்யா வரவில்லை என்று செழியன் மற்றும் இனியா பாக்யா பற்றி தப்பா பேச, அதற்கு ஜெனி பதிலடி கொடுத்திருக்கிறார். மறுபக்கத்தில் கோபி பற்றிய உண்மைகளை எழில் உடைத்திருக்கிறார்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் எழில் பங்க்ஷனில் இருந்து ஜெனி, செழியன், இனியா மூன்று பேரும் காரில் வந்து கொண்டிருக்கின்றனர். அப்போது செழியனும் இனியாவும் பாக்யா பங்க்ஷனுக்கு வரவில்லை என்று கோபமாக திட்டிக் கொண்டிருக்கின்றனர்.

அதற்கு ஜெனி ஆன்ட்டிக்கு ஏதாவது முக்கியமான வேலை இருந்திருக்கும். அதனால் தான் வரல என்று சொல்ல இனியா அம்மா எப்பவுமே இப்படித்தான் அவங்களுக்கு அவங்க வேலை மட்டும்தான் முக்கியம். பசங்களோட சந்தோசம் முக்கியம் கிடையாது. அண்ணன் அம்மா வரலன்னு எவ்வளவு பீல் பண்ணி பேசி அழுதாரு.
ஆனா அம்மா இப்படி வராமல் போயிட்டாங்க என்று சொல்ல ஜெனி உன்னுடைய டான்ஸ் ப்ரோக்ராம்க்கு கரெக்டான நேரத்திற்கு அம்மா வந்துட்டாங்க. நீ தான் அவங்களை கண்டுக்கல என்று சொல்கிறார். அதோடு ஆன்ட்டி ஏன் வரலன்னு நான் போன் பண்ணி பேசுறேன் என்று பாக்கியாவுக்கு போன் போட பாக்கியா போனை எடுக்கவில்லை.

இதனால் இனியாவும் செழியனும் நாங்க சொல்றதுதான் சரி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் ஜெனி அவங்கள பத்தி தெரியாம இப்படி பேசாதீங்க என்று பாக்யாவுக்கு சப்போர்ட் செய்து கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் எழில் அழுது கொண்டிருக்கிறார் அமிர்தா என்னவென்று கேட்க நான் தான் அம்மாவை என்னுடைய பங்ஷனுக்கு வர வேண்டாம்னு சொல்லிட்டேன்.
என்னுடைய அப்பா புரொடியூசர் மூலமாக செய்த சதியில் நான் மாட்டிக் கொண்டேன் என்று நடந்த பிரச்சனைகளை பற்றி சொல்ல, அதற்கு அமிர்தா நீங்க அம்மாவுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்லுங்க இல்லன்னா அவங்க கஷ்டப்படுவாங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக கோபி தான் ஜெயித்து விட்டேன் என்று தனியாக இருந்து புலம்பிக் கொண்டிருக்கிறார்.

அப்போது ராதிகா வந்து நீங்க இப்போ மாறி இருக்கிறது பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் எழிலுடைய படத்திற்கு பாக்கியலட்சுமி என்ற பெயர் வைத்திருக்கிறது உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா? என்று கேட்க, ஏற்கனவே தெரிந்திருந்தால் நான் வைக்கவே விட்டிருக்க மாட்டேன். அந்த பங்க்ஷனில் பாக்யா கலந்து கொள்ள கூடாது என்று சொன்னதே நான்தான்.
அந்த பெயரையும் என்னுடைய நண்பரிடம் சொல்லி மாற்றி விடுவேன் என்று சொல்ல, அதற்கு ராதிகா நீங்க இப்ப ரொம்ப வில்லனா பேசுறீங்க இது எனக்கு பிடிக்கல. உங்க மகனுடைய சந்தோஷத்தை பார்ப்பதற்கு அம்மாவை விடாமல் தடுத்து இருக்கீங்க இது தப்பு என்று சொல்ல, அதற்கு கோபி நீ உன் பிரண்டுக்கு சப்போர்ட் பண்ணியா? என்று கேட்கிறார் இதனால் ராதிகா அங்கிருந்து போய் விடுகிறார்.

அடுத்ததாக சுவீட்டுகள் எல்லாம் தயாராகி கொண்டிருக்கிறது. பேக்கிங் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது பாக்யா செய்யும் வேலைகளை பார்த்து ஈஸ்வரி பீல் பண்ணிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications