முல்லைக்குத் தாலாட்டு... சொர்க்கத்துக்குப் போய் விட்டாயா சித்ரா..!
சென்னை: மீனாவின் மகளை மார்பில் போட்டு சாய்த்துக் கொண்டு கண்மூடி அவள் தூங்க.. அதைப் பார்த்து முல்லை தூங்க என்று அந்த வீடியோவைப் பார்த்துப் பார்த்து ரசிகர்கள் அழுது கொண்டுள்ளனர்.
சொர்க்கத்துக்குப் போய் விட்டாயா சித்ரா என்றும் பலர் ரத்தக் கண்ணீர் வடிக்காத குறையாக துக்கம் தொண்டையை அடைக்காத குறையாக குமுறிக் கொண்டுள்ளனர். அந்த அளவுக்கு அந்த வீடியோ தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது.
சித்ராவின் மரணத்தை யாராலும் மறக்க முடியவில்லை. இப்படி ஒரு சாவா உனக்கு என்றுதான் அனைவருமே ஆதங்கத்துடன் கேட்டு வருகின்றனர்.

சோகமே அறியாத சித்ரா
சித்ராவைப் பொறுத்தவரை அவரது முகத்தை யாருமே சோகத்தில் பார்த்ததில்லை. சீரியலில் மட்டும்தான் அவர் சோகமாகவும், அழுதும் நடித்துள்ளாரே தவிர நிஜத்தில் அவரை யாருமே அப்படி பார்த்தது இல்லை. தன்னையும் சந்தோஷமாக வைத்துக் கொண்டு உடன் இருப்போரையும் அதே மாதிரி பார்த்துக் கொள்வாராம். அதுதான் சித்ராவின் தனிச் சிற்பபும் கூட.

சித்ராவின் அன்பு மனசு
அப்படிப்பட்ட சித்ராவின் மனசுக்குள் எப்படி இப்படி அழுத்தம், அதுவும் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு வந்தது என்றுதான் அனைவருமே இப்போது ஆச்சரியப்படுகின்றனர் .எப்படி எங்களை மகிழ்வித்து விட்டு உன்னை மட்டும் மாய்த்துக் கொண்டாய் என்பதுதான் அனைவரது கேள்வியாகவும் இருக்கிறது .அவருடன் நடித்த நடிகர் நடிகைகளுக்கு சித்ராதான் மிகப் பெரிய எனர்ஜியே.

அடிக்காத லூட்டி இல்லை
ஷூட்டிங் ஸ்பாட்டில் அப்படி லூட்டி அடிப்பாராம் சித்ரா .ஒரு இடத்தில் சும்மா இருக்க மாட்டாராம் .யாரையாவது சீண்டியபடிதான் இருப்பாராம் .அவர் இருக்கும் இடத்தில் அப்படி ஒரு உற்சாகம் இருக்குமாம் .யாரையும் டல்லாக இருக்க விடவே மாட்டாராம் .அந்த அளவுக்கு ஒரு எனர்ஜி பூஸ்டர் போலத்தாந் இருந்துள்ளார் சித்ரா இப்போது ஒரு வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
குழந்தைக்குப் பாடிய தாலாட்டு
அது பாண்டியம்மா .அதாவது கதைப்படி மீனாவின் குழந்தைதான் பாண்டியம்மா .அந்தக் குழந்தையுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் செய்த சேட்டைகள் அடங்கிய வீடியோக்கள்தான் வைரலாகியுள்ளன .ஒரு வீடியோவில் குழந்தையை கையில் பிடித்துக் கொண்டு நல்லா திட்டு நல்லா கேளு என்று செல்லமாக கொஞ்சி விளையாடுகிறார். குழந்தை அழுகிறது. அதை அமர்த்த அவர் செய்யும் முயற்சிகள் கை தேர்ந்த தாயின் செயலைப் போலவே அப்படி இருக்கிறது.
சித்ராவின் குழந்தை மனசு
இன்னொரு வீடியோவில் தனது மார்பில் சாய்த்து தூங்க வைத்துக் கொண்டுள்ளார் சித்ரா . குழந்தை சமர்த்தாக அம்மா மீது சாய்ந்து தூங்குவது போலதூங்குகிறது. சித்ராவும் கூட தனது கண்களை மூடி லயித்துப் போய்க் காணப்படுகிறார். இந்த வீடியோதான் அனைவரையும் ரொம்பவே உருக்கி விட்டது . இப்படி பண்ணிட்டியேம்மா என்று அத்தனை பேரும் அங்கலாய்க்கும் வகையில் அந்த வீடியோ உள்ளது. சொர்க்கத்தில்தானே இருக்கிறாய் சித்ரா என்றும் பலர் கண்ணீர் உகுத்து வருகின்றனர்.

அதீத தாக்கம்
இதுபோல ஒவ்வொரு வீடியோவையும் பார்த்து பார்த்து ரசிகர்கள் நெகிழ்ந்து போய் உள்ளனர் .சித்ராவின் தாக்கத்திலிருந்து அத்தனை சீக்கிரம் யாரும் வெளியே வர முடியாது போலிருக்கு. அந்த அளவுக்கு அவர் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டுப் போயுள்ளார் என்றால் இவர் வாழ்ந்த வாழ்க்கை நிச்சயம் சிறப்பானதுதான்.. ஆனால் முடிவுதான் சோகமாக போய் விட்டது.. அது மட்டும்தான் வருத்தமாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications