சிட்டிசன் பட நடிகை வசுந்தராவை நினைவிருக்கா? அவருடைய கணவர் இந்த பிரபலமா? ஆளே மாறிவிட்டாரே!
சென்னை: நடிகர் அஜித் மற்றும் கமல் போன்ற நடிகர்களோடு தமிழில் நடித்து பெயர் வாங்கிய நடிகை வசுந்தரா தாஸ் தன்னுடைய கணவரோடு சமீபத்தில் எடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி இருக்கும் நிலையில் இது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. வசுந்தரா தாஸ் சிட்டிசன் திரைப்படத்தில் நடித்து பலருடைய மனதை கவர்ந்திருந்த நிலையில் இப்போது அவர் வயதான தோற்றத்தில் இருப்பதை பார்த்து பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
ஒரு சில நடிகைகள் மட்டும்தான் முதல் திரைப்படத்திலேயே பெயர் வாங்கும் அளவிற்கு வெற்றி பெற்று விடுகிறார்கள். அதுபோல சில நடிகைகள் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தால் கூட பல வருடங்கள் கழித்தும் அவர்களை அந்த திரைப்படத்தின் பெயர்களை சொல்லி ரசிகர்கள் நினைவு வைத்து விடுகிறார்கள். அந்த வகையில் ஒருவர்தான் நடிகை வசுந்தரா தாஸ். இவர் சிட்டிசன் திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

அதிலும் சிட்டிசன் திரைப்படத்தில் "பூக்காரா ஓ.. பூப்புக்காரா" என்ற பாடலுக்கு பாப் கட்டிங் உடன் அஜித்துடன் ஸ்டைலாக ஆட்டம் போட்டு இருப்பார். அதுபோல அந்த படம் முழுக்கவே தன்னுடைய க்யூட்டான சிரிப்பு மற்றும் பூனை கண்ணால் ரசிகர்களை காந்தம் போல கவர்ந்திருப்பார். ஆனால் வசுந்தரா தாஸ் முதல் முதலில் தமிழில் 2000 ஆம் ஆண்டு கமல் நடித்த "ஹே ராம்" படத்தின் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருக்கிறார்.
அந்த திரைப்படம் வசுந்தராவுக்கு சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்தது. தமிழில் மட்டுமல்லாமல் இந்தி படங்களிலும் நடிக்க சென்று விட்டார். அதற்கு பிறகு சில வருடங்கள் கழித்து தான் சிட்டிசன் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் சிட்டிசன் படத்திற்கு பிறகு இவர் தமிழ் சினிமாவில் அதிகமாக நடிப்பார் என்று நினைத்திருந்த நிலையில் தமிழ் சினிமாவில் ஆளே காணாமல் போய்விட்டார்.

ஆனால் வேறு மொழி படங்களில் அதிகமாக கவனம் செலுத்தி நடித்துக் கொண்டிருந்தார். வசுந்தரா தாஸ் நடிகையாக மட்டுமல்ல ஒரு பாடகியாகவும் இருக்கிறார். அதிலும் முதல்வன் திரைப்படத்தில் இடம்பெற்ற "சகலக்கா பேபி", ரிதம் படத்தில் இடம்பெற்ற "ஐயோ பத்திகிச்சி" அதுமட்டுமல்லாமல் சிட்டிசன் திரைப்படத்தில் இடம் பெற்ற "பூக்காரா", பாய்ஸ் திரைப்படத்தில் உள்ள "டேட்டிங்" போன்ற பல துள்ளல் இசை உள்ள பாடல்களை வசுந்தரா பாடி இருக்கிறார்.
ஆனால் இவர் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும்போதே திடீரென காணாமல் போய்விட்டார். 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடிப்பில் இருந்து விலகி இருந்த வசுந்தரா தாஸ் என்ன ஆனார் என்பது யாருக்கும் தெரியாமல் இருந்த நிலையில் தற்போது அவருடைய கணவரோடு எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வசுந்தரா தாஸ் வெளிநாட்டில் செட்டில் ஆகி இருக்கும் நிலையில் அவருடைய கணவர் மற்றும் மகனுடன் எடுத்த புகைப்படங்களை அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். இதை பார்த்ததும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இவர் இவ்வளவு மாறிவிட்டாரே என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். வசுந்தரா நடித்த திரைப்படங்கள் உங்களுக்கு பிடிக்குமா? அல்லது அவருடைய பாடல்கள் உங்களுக்கு பிடிக்குமா? கமெண்ட்களை தட்டி விடுங்க பாஸ்.

-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications