உயிருக்கு போராடும் மனைவி.. நடிகர் முத்துக்காளை வைத்த வேண்டுகோள்! முதலமைச்சர் விஜய்யின் அதிரடி ஆக்ஷன்
சென்னை: நகைச்சுவை நடிகர் முத்துக்காளையின் குடும்பத்தில் ஏற்பட்ட திடீர் உடல்நல அவசர நிலை ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்திய நிலையில், தமிழக முதலமைச்சரின் உடனடி தலையீடு தற்போது பாராட்டுகளை பெற்று வருகிறது. இன்று காலை நடிகர் முத்துக்காளை வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அந்த வீடியோவில் தனது மனைவியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கண்ணீருடன் தெரிவித்திருந்தார்.

நடிகர் முத்துக்காளை வீடியோ
அந்த வீடியோவில் பேசிய முத்துக்காளை, தன்னுடைய குடும்பம் மிகப்பெரிய மன அழுத்தத்தில் இருப்பதாகவும், மனைவிக்கு அவசர சிகிச்சை தேவைப்படுவதாகவும் கூறியிருந்தார். மருத்துவச் செலவுகள் மற்றும் சிகிச்சை தொடர்பான சிக்கல்களால் கவலையில் இருந்த அவர், தமிழக முதலமைச்சர் தங்களுக்கு உதவ வேண்டும் என்று உருக்கமான வேண்டுகோளையும் வைத்திருந்தார். இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே அது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு பலரின் கவனத்தையும் ஈர்த்தது.
முதலமைச்சர் விஜய் எடுத்த ஆக்ஷன்
இந்த நிலையில், முத்துக்காளையின் வேண்டுகோளுக்கு உடனடியாக தமிழக முதலமைச்சர் பதிலளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முத்துக்காளையின் மனைவிக்கு தேவையான மேல் சிகிச்சைகள் தாமதமின்றி வழங்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை முத்துக்காளையிடம் தொலைபேசியில் பேச வைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியாகியதும் பலரும் முதலமைச்சரின் விரைவான நடவடிக்கையை பாராட்டி வருகின்றனர்.
அமைச்சர் ராஜ்மோகன்
இதற்கிடையில், முதலமைச்சரின் சார்பில் அமைச்சர் ராஜ்மோகன் நேரில் சென்று முத்துக்காளையை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். குடும்பத்தினரை சந்தித்து உடல்நிலை குறித்த விவரங்களை கேட்டறிந்ததோடு, அரசின் சார்பில் தேவையான உதவிகள் அனைத்தும் செய்யப்படும் என்று உறுதியளித்ததாக கூறப்படுகிறது. திடீரென ஏற்பட்ட இந்த உடல்நல பிரச்சனையால் மனமுடைந்திருந்த முத்துக்காளைக்கு இது ஒரு பெரிய ஆறுதலாக அமைந்துள்ளது.

கண்ணீரில் முத்துக்காளை
திரைத்துறையில் நீண்ட காலமாக மக்களை சிரிக்க வைத்த நகைச்சுவை நடிகர் முத்துக்காளை, இப்போது தனது சொந்த குடும்பத்தில் ஏற்பட்ட துயரமான சூழ்நிலையில் கண்ணீருடன் உதவி கோர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது ரசிகர்களையும் வேதனை அடைய வைத்துள்ளது. இந்த நிலையில் முதலமைச்சரின் உடனடி உதவி மற்றும் நேரடி ஆறுதல் நடவடிக்கை பலராலும் மனிதநேயமான செயல் என பாராட்டப்படுகிறது.
முத்துக்காளையின் மனைவியின் உடல்நிலை விரைவில் சீராக வேண்டும் என்று ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பிரார்த்தனை செய்து வருகின்றனர். தற்போது இந்த சம்பவம் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
-
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications