கூலியை இப்படியா ரிவ்யூ செய்வது? நாங்க இல்லனா நீங்க என்ன செய்வீங்க? ப்ளூசட்டைக்கு நடிகர் ஆதவன் கேள்வி
சென்னை: நீங்கள் எடுத்த படம் மட்டும் 100 நாட்கள் ஓடிவிட்டதா, விமர்சனம் செய்வதற்கும் ஒரு அளவு இருக்கு, சினிமா இல்லன்னா நம்ம வாழ்க்கை என்ன ஆகும் என்பதையும் யோசிக்க வேண்டும் என ப்ளூசட்டை மாறனுக்கு, காமெடி நடிகர் ஆதவன் பதிலடி கொடுத்துள்ளார். கூலி படம் குறித்து ப்ளூசட்டை மாறன் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதுகுறித்து நடிகர் ஆதவன் கூறியிருப்பதாவது: விமர்சனம் செய்யுறதுக்கு ஒரு அளவு இருக்கு. சினிமா இல்லன்னா நம்ப வாழ்க்கை என்ன ஆகும்னு யோசிக்கணும். யூடியூப்ல் யாரை பேட்டி எடுப்பீங்க, யார் வீட்டு கல்யாணத்தை பார்ப்பீங்க.
சினிமாவுல வர பாட்டதான் கச்சேரியில பயன்படுத்துறாங்க. சினிமாவை நம்பி பல பேர் வாழ்க்கை இருக்கு. சினிமான்னா குறை இருக்கத்தான் செய்யும். நீங்கள் எடுத்த படம் என்ன 100 நாள் ஓடுச்சா? என ஆதவன், ப்ளூசட்டை மாறனுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
ப்ளூசட்டை மாறன்
ப்ளூசட்டை மாறன் சமூக அவலங்களுக்கு குரல் கொடுப்பதுடன் சினிமா விமர்சனங்களையும் செய்து வருகிறார். பொதுவாக படங்களை மோசமாகவே விமர்சனம் செய்வார். அந்த படத்திற்கு பின்னால் எத்தனையோ அன்றாடம் கூலி பெறும் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்பதையும் தாண்டி இவர் விமர்சனம் செய்வது குறிப்பிட்ட நடிகர்களின் ரசிகர்களுக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தும்.
ரஜினிகாந்த்
அதிலும் ரஜினிகாந்தை தலீவர் என அழைத்து அவரை ஒவ்வொரு முறை விமர்சனம் செய்து அவரது ரசிகர்களையும் கோபத்திற்குள்ளாக்கியுள்ளார். இவரும் "ஆன்டி இந்தியன்" என்ற ஒரு படத்தை எடுத்துள்ளார். அந்த படமும் பெரும் Flop-தான். இந்த நிலையில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி படம் கடந்த 14 ஆம் தேதி வெளியானது. இந்த படம் குறித்து ப்ளூசட்டை மாறன் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த படம் குறித்த ரிவ்யூவில் ப்ளூசட்டை மாறன் பேசுகையில், நண்பன் கொலை செய்யப்பட்டதற்கு, பழி வாங்க, ஹீரோ வருவதுதான், இந்தப் படத்தின் கதை.
பான் இந்தியா
பான் இந்தியா படம் என்றால், 'நேட்டிவிட்டியோடு' எடுத்து, அது, நம் ஊரிலும் ஹிட்டாக வேண்டும். இந்திய அளவிலும், உலக அளவிலும், ஹிட்டாக வேண்டும். அதுதான், பான் இந்தியா ஹிட் என்று சொல்லப்படும். ஆனால், ரஜினியோ, மற்ற மொழி நடிகர்களை, தன் படத்தில் சேர்த்துவிட்டு, பான் இந்தியா படம் என, சொல்கிறார்.
துப்பு இல்லாதவர்
கதை எழுத துப்பு இல்லாத ஒருவர்தான், இந்தக் கதையை, எழுதியிருப்பார் என்று, தோன்றுகிறது. லோகேஷ் கனகராஜுக்கு, கொலை, கஞ்சா, பவுடர் கடத்துவதைத் தவிர, எதுவும் தெரியாது. அப்படிப்பட்ட லோகேஷ், இந்த மூன்று மணி நேரத்தை, ரசிகர்கள் எப்படி கடத்துவார்கள் என்பதை, யோசித்து, படம் எடுத்திருந்திருக்கலாம்.
உபேந்திரா
உபேந்திராவெல்லாம் எவ்வளவு பெரிய டெக்னீஷியன். அவரை அழைத்து வந்து, நாசம் செய்திருக்கிறார்கள். அவர் யார் என்றே தெரியவில்லை. அமீர் கான் வந்து பீடியின் சுவைகளை பேசுகிறார். இந்த படத்தால் ஜெயிலர் படம் நல்ல படமாகிவிட்டது. பொதுவாக மொக்கை என நினைத்து போய் பார்த்தால் நன்றாக இருக்கும். ஆனால் இந்த படத்தை மொக்கை என நினைத்து பார்த்தாலுமே உங்களுக்கு பிடிக்காது" என ப்ளூசட்டை மாறன் விமர்சித்திருந்தார். இதற்கு ரஜினி ரசிகர்கள், அந்த வீடியோவிலேயே அவரை ஒருமையிலும் அநாகரீகமான வார்த்தைகளிலும் திட்டியிருந்தனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications