அவங்க என்ன வேணா சொல்லட்டும்.. என் முடிவு இதுதான்.. கெத்து காட்டும் நடிகர் செந்தில்.. காரணம் இதுதானா?
சென்னை: தமிழ் திரையுலகில் கரகாட்டக்காரன் திரைப்படத்தையும் அந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்களும் அவ்வளவு எளிதாக யாராலும் மறந்து விட முடியாது.
இப்போது எத்தனையோ புதுப்புது காமெடி நடிகர்கள் வந்தாலும் நடிகர் செந்தில் மற்றும் கவுண்டமணி காம்போவுக்கு இணை இல்லை என்று தான் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் மீண்டும் கரகாட்டக்காரன் 2 திரைப்படம் எடுத்தால் நான் கண்டிப்பாக நடிப்பேன் என்று செந்தில் கூறியிருக்கிறார்.

90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் திரைப்படங்களில் ஒன்றாக கரகாட்டக்காரன் திரைப்படம் இப்ப வரைக்கும் இருந்து வருகிறது. இந்த திரைப்படத்தில் கண்ணழகி கனகா, ராமராஜனின் காதலாக இருந்தாலும் சரி, அவர்கள் கலையின் மீது வைத்திருக்கும் மரியாதையாக இருந்தாலும் சரி, அதை அடிச்சுக்க யாரும் கிடையாது அந்த அளவிற்கு அந்த திரைப்படத்தில் அவர்கள் நடிக்காமல் கதையோடு வாழ்ந்திருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை அதிகமான ரசிகர்கள் இப்போதும் விரும்பி பார்ப்பதற்கு காரணம் இந்த திரைப்படத்தில் அமைந்த காமெடிகள் தான். இந்த காமெடிகள் இப்ப வரைக்கும் உள்ள 2k கிட்ஸ்களையும் கவர்ந்திருப்பதால் தான் அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பல காமெடிகளின் அடிப்படையிலேயே பல நிகழ்ச்சிகளும் திரைப்படங்களும் கூட வலம் வருகிறது. குறிப்பாக அந்த "சொப்பன சுந்தரி கார்" பலருக்கும் பரீட்சயனமானது தான்.
அதுபோல "ஒரு வாழைப்பழம் இங்கே இருக்கு இன்னொரு வாழைப்பழம் எங்கே..?" என்ற காமெடிக்கு இப்ப கூட பலருக்கும் விடை தெரியாமல் தான் இருக்கிறது. இந்த திரைப்படத்தில் பாடல்களும் அவ்வளவு அழகாக பலருடைய மனதில் பசை போட்டு ஒட்டியபடி பதிந்துவிட்டது. குறிப்பாக "மாங்குயிலே பூங்குயிலாக" இருந்தாலும் சரி," ஊரு விட்டு ஊரு வந்து காதல் கீதல் பண்ணாதீங்க" என்ற தத்துவ பாடல் ஆக இருந்தாலும் சரி பலரையும் கவர்ந்தது தான் .
அதுபோல "மாரியம்மா மாரியம்மா" இப்போதும் பல கோவில்களில் ஒலிக்கப்படும் பாடல்களாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த கரகாட்டக்காரன் திரைப்படம் வெளியாகி 34 வருடங்கள் ஆகிவிட்டது. இதில் நடித்த பல பிரபலங்கள் இப்போது திரை துறையை விட்டு விலகி இருக்கின்றனர். அதில் கதாநாயகி கனகா எங்கே இருக்கிறார்? என்ன பண்ணுகிறார்? என்ற ஒரு விவரம் கூட வெளியே தெரியாமல் இருக்கிறது.
அதுபோல இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் வரப்போகிறது என்ற செய்திகள் சமீபத்தில் வெளியானது. அதைத் தொடர்ந்து நடிகர் ராமராஜன் நான் இரண்டாவது பாகம் வந்தால் அதில் நடிக்க மாட்டேன் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அந்த திரைப்படத்தில் காமெடியில் பலரையும் சிரிக்க வைத்த நடிகர் செந்தில் இடம் நீங்கள் இந்த திரைப்படத்தில் இரண்டாவது பாகம் எடுத்தால் நடிப்பீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது.
அது குறித்து அவர் பேசுகையில் கண்டிப்பாக நான் நடிப்பேன். கங்கை அமரன் சார், கரகாட்டக்காரன் 2 படத்திற்காக என்னிடம் வந்து பேசினார். இந்த படத்தில் யார் நடிக்க ஒத்துக்கிட்டாலும், ஒத்துக்கலனாலும் நான் கண்டிப்பா நடிப்பேன். அது காரணத்தை இப்ப சொல்ல மாட்டேன் என்றும் கூறினேன்.., என செந்தில் கூறி பேசியிருக்கிறார்.
-
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications