பிறந்த நாளில் நினைவுகளை பகிர்ந்து கொண்ட வெங்கடேஷ் பட்..அவமானப்படுத்திய ரசிகர்..எதிர்பார்க்காத பதிலடி
செஃப் வெங்கடேஷ் பட் தன்னிடம் கேள்வி கேட்ட ரசிகருக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் செஃப் வெங்கடேஷ் பட் நடுவராக இருந்து வருகிறார்.
சமீபத்தில் வெங்கடேஷ் பட் தன்னுடைய 51 வது பிறந்தநாளை கொண்டாடி பல உருக்கமான தகவல்களை சமூக வலைத்தளத்தில் பதிவுகளாக வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் வெங்கடேஷ் பட் பதிவிற்கு கோமாளிகளை நீங்கள் அவமானப்படுத்தி இருக்கிறீர்கள் என ஒரு ரசிகர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

கலகலப்பான நிகழ்ச்சி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. தொடர்ந்து இந்த நிகழ்ச்சிகளில் நடுவராக செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் இருவரும் இருந்து வருகின்றனர். இவர்கள் இருவருமே தங்களுடைய போட்டியாளர்களிடம் சகஜமாக ஜாலியாக விளையாடிக் கொண்டிருப்பர். அது நிகழ்ச்சிக்கு சுவாரசியமாக இருப்பதாகவும் இந்த நிகழ்ச்சியில் நடுவர்கள் மற்றும் போட்டியாளர்கள் அதாவது குக் மற்றும் கோமாளிகள் அனைவருமே ஒன்று சேர்ந்து கலகலப்பாக நிகழ்ச்சியை கொண்டு சென்று கொண்டிருக்கின்றனர் என்று இந்த நிகழ்ச்சிக்கு அதிகமான ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் வெங்கடேஷ் பட் பற்றி ஒரு ரசிகர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பிறந்தநாள் பதிவு
வெங்கடேஷ் பட் சமீபத்தில் தன்னுடைய 51 வது பிறந்த நாளை கொண்டாடி இருந்தார். தன்னுடைய பிறந்த நாளில் தன்னுடைய பேஸ்புக் பதிவில் 24 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் டிவியில் தனது கேரியரை தொடங்கியதாகவும் சமீபத்தில் தன்னுடைய யூடியூப்பில் சேனல் இதயம் தொட்ட சமையல் தனக்கு சிறந்ததை வழங்கி வருவதாகவும் மேலும் மக்களின் வாழ்க்கையில் மதிப்பு சேர்க்கும் வாய்ப்பையும் கொடுத்ததாகவும் அதில் கூறியிருந்தார்.

ரசிகருக்கு பதில்
இந்த நிலையில் வெங்கடேஷ் பட் வெளியிட்ட பதிவிருக்கு ஒரு ரசிகர் தான் மலேசியாவில் இருப்பதாகவும் பிரபல சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் கோமாளியை நோக்கி நீங்கள் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளும் விதம் எரிச்சல் ஊட்டுகிறது என்று பதிவிட்டு இருக்கிறார். இதை பார்த்த செஃப் வெங்கடேஷ் பட்," இது ஒரு நிகழ்ச்சி என்றும், உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் தயவு செய்து நிகழ்ச்சியை பார்க்க வேண்டாம்" என்றும் அந்த ரசிகருக்கு பதில் அளித்து இருக்கிறார். தற்போது இந்த பதிலுக்கு அதிகமான லைக்குகள் குவித்து வருகிறது.

எழுத்தாளரும் கூட
வெங்கடேஷ் பட் ஒரு சமையல் கலைஞராக மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளராகவும் இருந்து வருகிறார். அவர் தன்னுடைய சமையல் கலைகளை புத்தகங்களாக வெளியிட்டு வருகிறார். அவருடைய புத்தகங்கள் எளிமையாக மற்றும் அனைவரும் எளிதாக பயன்படுத்திக் கொள்ளும் சமையல் குறிப்பு உள்ளதாக பலர் கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பல தொண்டு நிறுவனங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் மற்றும் ஏழைகளுக்கு உணவு மற்றும் அத்தியாவசியமான பொருட்களை வழங்கியும் வருகிறார்.

கோமாளிகளின் சப்போர்ட் இருக்கு
இந்த நிலையில் வெங்கடேஷ் பட் நிகழ்ச்சியில் கலகலப்புக்காக செய்யும் சின்ன சின்ன செயல்களை ஒரு சில ரசிகர்கள் அவர் கோமாளிகளை நோக்கி பொருள்களை தூக்கி வீசுகிறார். அடிக்கடி கோமாளிகளை அடித்து துன்புறுத்துகிறார். என்றெல்லாம் கருத்து வெளியிட்டு வருகின்றனர். ஆனால் அவரோடு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் கோமாளிகள் அனைவருமே அவர் எங்களுடைய அப்பா மாதிரி, எங்களுடைய வீட்டில் ஒருவர் மாதிரி என்று அவரை புகழ்ந்து அவர் இப்படித்தான் எங்களுக்கு இருக்க வேண்டும். இதனால் தான் நிகழ்ச்சியை பலரும் விரும்பி பார்க்கிறார்கள். என்றெல்லாம் அவருக்கு சப்போர்ட் கொடுத்து வருகிறார்கள்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications