துரு துருவென இருக்கும் செஃப் வெங்கடேஷ் பட்டுக்கு இப்படி ஒரு சோக கதையா? 10 நாள் பட்ட வேதனை!
சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் செஃப் வெங்கடேஷ் பட் நடுவராக இருந்து வருகிறார்.
வெங்கடேஷ் பட்டுக்கு திருமணத்திற்குப் பிறகு ஏழு வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்திருக்கிறது.
அதற்கு பிறகு பிறந்த குழந்தையை பத்து நாட்களாக பார்க்காமல் பிடிவாதமாக இருந்தாராம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பலருக்கும் ஃபேவரைட் தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் வாழ்க்கையில் அடுத்தடுத்த வெற்றிகளை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் நான்கு சீசன்களாக நடுவர்களாக செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்கள் இருவரை பற்றியும் அதிகமான சர்ச்சைகளும் அவ்வப்போது வந்து கொண்டு தான் இருக்கிறது.

குறிப்பாக வெங்கடேஷ் பட் அங்கு இருக்கும் கோமாளிகளை அடித்து துன்புறுத்துகிறார் என்று அதிகமானோர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் அதற்கு அடிக்கடி வெங்கடேஷ் பட் பதிலடி கொடுத்து வருகிறார். ஆனாலும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளாக கலந்து கொண்டவர்களாக இருந்தாலும் சரி குக்காக கலந்து கொண்டார்களாக இருந்தாலும் சரி பலர் அவர்களுடைய வாழ்க்கையில் வெற்றி பெற்றிருக்கின்றனர்.

அடுத்த வகையில் செஃப் வெங்கடேஷ் பட்டின் ஆரம்பகால வாழ்க்கை பற்றி சமீபத்தில் ஒரு வீடியோவில் பேசுகிறார். அது பலருக்கும் அதிர்ச்சியாக தான் இருந்திருக்கிறது. அதில் வெங்கடேஷ் பட் திருமணம் ஆகி 7 வருடங்கள் கடந்த நிலையிலும் குழந்தை இல்லாமல் தான் இருந்ததாம். அதற்குப் பிறகு மனைவி கர்ப்பமான நிலையில் மது, புகை என தனக்கு இருந்த அனைத்து கெட்ட பழக்கங்களையும் கைவிட்டு இருக்கிறார்.
குழந்தை பிறந்ததும் முதலில் திருப்பதியில் போய் பெருமாளை சந்தித்து விட்டு தான் தன் குழந்தையை பார்ப்பேன் என்று வேண்டி இருந்தாராம். ஆனால் குழந்தை பிறந்த பிறகு 10 நாட்களுக்கு கோயிலுக்குள் போகக்கூடாது என்று கட்டுப்பாடு இருந்ததால் அதுவரை காத்திருந்து 11 நாள் ஆன பின்பு தான் தன் குழந்தையை பார்த்திருக்கிறாராம். பொதுவா எல்லாருக்குமே அப்பா மகள் பாசம் என்றால் எப்படி இருக்கும் என்று தெரிந்ததுதான்.
ஆனாலும் இத்தனை வருடங்களாக காத்திருந்து கிடைத்த குழந்தையின் முகத்தைக் கூட பார்க்காமல் பிடிவாதமாக இருந்து வெங்கடேஷ் பட்டு வேண்டுதலை நிறைவேற்றிவிட்டு குழந்தையை பார்த்திருக்கிறார். இப்பவும் அந்த குழந்தைக்கு வெங்கடேஷ் பட் தான் ஃபேவரிட்டாம்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications