உடல் எடை குறைவுக்கு காரணம்! ரொம்ப மோசமான நிலைமையில் இருக்கிறேன்! மீண்டும் வருவேன், நடிகை பவித்ரா உருக்கம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை பவித்ரா லட்சுமி வெளியிட்டிருக்கும் பதிவு இணையத்தில் பலரையும் ஃபீல் பண்ண வைத்திருக்கிறது. பவித்ரா லட்சுமி சமீபத்திய புகைப்படங்கள் வீடியோக்கள் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருந்தது. காரணம் அவர் உடல் எடை குறைந்து போய் இருந்தார். அதற்கு காரணம் என்ன என்பது குறித்து இப்போது பவித்ரா விளக்கம் கொடுத்திருக்கிறார்.
ஒரு சிலரை பார்க்கும்போது இவர்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று நினைக்கத் தோன்றும். அது போல தான் சின்னத்திரையில் பவித்ரா லட்சுமியும். இவர் வெள்ளித்திரை நடிகையான சமந்தாவை போல இருக்கிறாரே என்பதுதான் பலருடைய கருத்து. அடிக்கடி சமந்தா கெட்டப்பில் போட்டோ சூட் எடுத்து தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.

குக் வித் கோமாளி பிரபலம்
இதனால் இவரை சின்னத்திரை சமந்தா என்று ரசிகர்கள் அழைத்து வருகிறார்கள். மணிரத்தினம் இயக்கத்தில் ஓ காதல் கண்மணி திரைப்படத்தில் பவித்ரா லட்சுமி சின்ன கேரக்டரில் நடித்திருப்பார். அதைத் தொடர்ந்து அவருக்கு பெரிய அளவில் சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் தான் அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி வாய்ப்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவருக்கு சமைக்கத் தெரியாது ஆனாலும் தன்னால் முடிந்த அளவிற்கு சமையலில் அசத்தி கொண்டிருந்தார்.
திரைப்படங்களில் நடிப்பு
அந்த நேரத்தில் அவருக்கு ரசிகர்களும் அதிகரித்துக் கொண்டிருந்தனர். பவித்ரா மற்றும் புகழ் கூட்டணி அந்த நேரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. பைனலுக்கு நுழைந்த பவித்ராவால் டைட்டில் வெற்றிபெற முடியவில்லை. ஆனாலும் அவருடைய ரசிகர்களின் மனதை கவர்ந்து விட்டார். அதைத்தொடர்ந்து நாய் சேகர் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த திரைப்படத்தில் அவர் கதாநாயகியாக நடித்திருந்தாலும் அந்த படம் பெரிய அளவில் அவருக்கு ஹிட்டு கொடுக்கவில்லை.
அம்மாவின் மரணம்
சோசியல் மீடியா பக்கங்களில் பிசியாக இருக்கும் பவித்ரா லட்சுமி தொடர்ந்து சினிமாவில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த வருடத்தில் பவித்ராவிற்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. பவித்ராவிற்கு உறுதுணையாக இருந்த அம்மாவின் திடீர் இறப்பு பவித்ராவை வருத்தத்தில் ஆழ்த்தியது. சிங்கிள் மதராக தன்னை வளர்த்து வந்த அம்மாவின் மரணம் பவித்ராவை வெகுவாக பாதித்தது. அது குறித்து சோசியல் மீடியா பக்கங்களில் பவித்ரா உருக்கமாக போஸ்ட் போட்டிருந்தார்.
பவித்ரா லட்சுமி பதிவு
ஒரு சில மாதங்களாகவே தன்னுடைய அம்மாவின் நினைவுகள் மற்றும் அம்மாவின் புகைப்படங்களையும் பவித்ரா பகிர்ந்து வருகின்றார். அவரை பலரும் பழைய நிலைக்கு வரும்படி அட்வைஸ் கொடுத்து கொண்டிருக்கிறார்கள். இப்போது மீண்டும் ஃபோட்டோ சூட் எடுக்க தொடங்கி இருக்கிறார். அதில் அவருடைய முகமே மாறி இருக்கிறது. இதை பார்த்ததும் சிலர் இவருக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி மாறிவிட்டார் என்று கேள்வி எழுப்பு வருகின்றனர்.
உடலில் மாற்றம்
ஒரு சிலர் இவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து விட்டாரா? அதனால் தான் இப்படி மாறிவிட்டாரா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இதனால் இந்த சர்ச்சைக்கு பவித்ரா பதிலடி கொடுத்து இருக்கிறார். அதில், "நான் இப்போது மிகுந்த மோசமான நிலையில் இருக்கிறேன். எனக்கு உடல்நிலை பிரச்சனை இருக்கிறது. அதற்காக சிகிச்சையில் இருப்பதால்தான் என்னுடைய உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

சப்போர்ட் இருக்கு
அதனால் நான் உடல் மெலிந்திருக்கிறேன் நான் எந்த பிளாஸ்டிக் சர்ஜரியும் செய்யவில்லை. வதந்திகளை பரப்பி என்னுடைய கடினமான சூழ்நிலைகளை மேலும் கடினம் ஆக்கி விடாதீர்கள் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் நீங்கள் விரைவாக உடல் நலம் பெற்று மீண்டும் பழைய நிலைக்கு வரவேண்டும், உங்களுக்காக எப்போதும் நாங்கள் சப்போர்ட் கொடுக்கிறோம் என்று கூறி வருகிறார்கள்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பு
பவித்ராவின் சிரிப்பு பலருடைய ஃபேவரைட் எவ்வளவோ கஷ்டங்களை தாங்கி இருந்தாலும் அதை எல்லாம் தாண்டி பழைய நிலையை விட பெஸ்ட்டாக வரவேண்டும், சமூக வலைத்தளத்தில் பரவும் நெகட்டிவ்களை கண்டுகொள்ள கூடாது என்று அவருடைய ரசிகர்கள் அவருக்கு ஸ்ட்ரிட்டாக அட்வைஸ் கொடுக்கிறார்கள். பவித்ராவை மீண்டும் திரைப்படங்களில் கதாநாயகியாக பார்க்க நாங்களும் வெயிட்டிங் பவித்ரா. சீக்கிரமாக உடல்நிலை சரியாகிவாங்க.












Click it and Unblock the Notifications