மாதம்பட்டி ரங்கராஜன் திருமணம் செய்து கொண்டார்! 4 மணி நேர விசாரணைக்கு பிறகு ஜாய் கிரிஸில்டா பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல சமையல் கலைஞராகவும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவராகவும் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். தன் நடிப்பு மற்றும் சமையல் கலையால் குடும்ப ரசிகர்களைக் கவர்ந்த ரங்கராஜ், சமீபத்தில் ஒரு கடுமையான சர்ச்சையில் சிக்கினார். ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா என்பவர், மாதம்பட்டி ரங்கராஜ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார். இந்த விவகாரம், சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், இப்போது அது நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இந்த விவகாரம் குறித்து முழுமையாகப் பார்க்கலாம்.

Mathampatti Rangaraj Cook With Comali

திருமண புகைப்படங்களால் வெடித்த சர்ச்சை

முதலில், மாதம்பட்டி ரங்கராஜும், ஜாய் கிரிஸில்டாவும் சேர்ந்து எடுத்த சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. அதில், இருவரும் மாலை அணிந்து, திருமணம் செய்தது போல இருந்ததால், மாதம்பட்டி ரங்கராஜுக்கும், ஜாய் கிரிஸில்டாவுக்கும் திருமணம் முடிந்துவிட்டது என்று ரசிகர்கள் நினைத்தனர்.

ஆனால், ரங்கராஜுக்கு ஏற்கெனவே திருமணமாகி, குடும்பம் உள்ள நிலையில், இது எப்படி சாத்தியம் என்ற கேள்விகள் சமூக வலைத்தளங்களில் எழுந்தன. இதுகுறித்து, ஜாய் கிரிஸில்டா விளக்கமளிக்காததால், வதந்திகள் வேகமாகப் பரவின. ரசிகர்கள் இதுகுறித்து விவாதித்துக்கொண்டிருந்த நிலையில், திடீரென ஜாய் கிரிஸில்டா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்குச் சென்று பரபரப்பான ஒரு புகாரை அளித்தார்.

ஜாய் கிரிஸில்டாவின் குற்றச்சாட்டுகள்

காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜாய் கிரிஸில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் மீது பல கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார். அதில் தான் கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் மாதம்பட்டி ரங்கராஜன் தன்னை அடித்துக் கொடுமை செய்ததாகவும் இந்த குழந்தையை அபார்ஷன் செய்ய வேண்டும் என்று அவர் கூறுவதாகவும் சொல்லி இருந்தார்.

இந்த நிலையில் இப்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு பிறகு ஜாய் கிரிஸில்டா, ஊடகங்களில் பெரிய பரபரப்பைக் கிளப்பியது. அப்போது அவர் பேசும்போது, "கடந்த 2 வருடங்களாக என்ன நடந்தது என்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளேன்" என்று கூறினார். அடுத்ததாக, அவர் கூறிய வார்த்தைகள், இந்த வழக்கின் முக்கியத் திருப்பமாக அமைந்தது. "திருமணம் செய்வதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட மாதம்பட்டி ரங்கராஜ் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பார்கள்" என்று அவர் பகிரங்கமாகத் தெரிவித்தார். மேலும், "உண்மையாகவே மாதம்பட்டி ரங்கராஜ் என்னை திருமணம் செய்து கொண்டார், தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்" என்றும் அவர் கூறியது, இந்த விவகாரத்தின் மீது இருந்த குழப்பத்தை மேலும் அதிகரித்தது.

ஜாய் கிரிஸில்டா அளித்த புகாரில், "மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார்" என்றும், "தான் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும்" அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்த அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகள், ரங்கராஜின் ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.

ரங்கராஜின் பதிலடி மற்றும் நீதிமன்ற வழக்கு

ஜாய் கிரிஸில்டாவின் இந்தத் திடீர் குற்றச்சாட்டுகளால் கோபமடைந்த மாதம்பட்டி ரங்கராஜ், உடனடியாக இதற்குப் பதிலடி கொடுத்தார். இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்றும், தன் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கத்தில் ஜாய் கிரிஸில்டா இப்படிப் பேசுவதாகவும் அவர் கூறினார்.

மேலும், இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக, ஜாய் கிரிஸில்டா மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்து இருக்கிறார். ஒருபக்கம், ஜாய் கிரிஸில்டா கூறிய குற்றச்சாட்டுகளை நம்பி, "ஒரு பெண்ணை ஏமாற்றியது தவறு" என்று ஒரு பிரிவினர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கோமாளிகளான புகழ் மற்றும் குரேஷி ஆகியோர், ஒரு எபிசோடில் மாதம்பட்டி ரங்கராஜை சூசகமாகக் கலாய்த்துப் பேசிய வீடியோ, இந்த விவகாரம் பொதுவெளியில் எந்த அளவுக்குப் பரவியிருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்தியது.

தற்போது, இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால், அவருக்கே உண்மை தெரியும் என்று கூறி, பலரும் இந்த விவாதத்தைத் தவிர்த்து வருகின்றனர். ஆனாலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சி உட்பட பல்வேறு இடங்களில் ஜாய் கிரிஸில்டா தெரிவித்த குற்றச்சாட்டுகள், மாதம்பட்டி ரங்கராஜின் பெயரை இந்த வழக்கில் இருந்து முழுமையாக நீக்காது. நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு மட்டுமே இந்த விவகாரத்தில் உண்மை என்ன என்பதை வெளிப்படுத்தும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+