வெங்கடேஷ் பட்டின் 80 ஆயிரம் பொருளை நாசம் செய்த குரோஸி.. கடுப்பில் இப்படியா செய்வாங்க..?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளியில் ஒரு கோமாளியாக குரோஸி இருந்து வருகிறார்.
சமீபத்தில் பேட்டியில் குக் வித் கோமாளி செட்டில் தான் செய்த அலப்பறை பற்றி பேசி இருக்கிறார்.
அப்போது வெங்கடேஷ் பட்டின் 80,000 மதிப்புள்ள ஷூ வில் தான் எண்ணையை கொட்டி விட்ட செயலை பற்றி கூறியிருக்கிறார்.
விஜய் டிவியில் அதிகமான ரசிகர்களால் ரசிக்கப்படும் ஒரு நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு முதல் சீசனில் கிடைத்த எதிர்பாராத வரவேற்பு காரணமாகவே தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் அதிகமான கோமாளிகள் முதல் சீசனில் இருந்தே தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் ஒருவர் தான் குரோஸி. இவர் ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு பெரும் போராட்டத்தை தாண்டி தான் கலந்து கொண்டு இருந்தாராம். வீட்டில் அவருடைய அப்பா தான் அவருக்கு அதிகமான சப்போர்ட் கொடுத்து இருந்திருக்கிறார். ஆனால் அவருடைய அப்பாவும் பிறகு இறந்து போய்விட்டாராம்.
தன்னுடைய அம்மா எப்போதும் தனக்கு எதிராகத்தான் இருப்பார் என்றும் நான் என்னதான் வெற்றி பெற்றாலும் அவார்ட் வாங்கினாலும் அதை பெரிதாக அவர் கண்டுகொள்ள மாட்டார் என்றும் குரோஸி சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அந்த அளவிற்கு தனக்கு வீட்டில் நிலைமை இருந்தாலும் தன்னுடைய திறமையை எப்படியாவது வெளிக்கொண்டு வரவேண்டும் என்று நினைத்திருந்த நிலையில் எனக்கு ஒரு பிளாட்பாரம் கிடைத்தது என்றால் அது குக் வித் கோமாளி தான் என்று கூறியிருக்கிறார்.
பலர் குக் வித் கோமாளியில் கலந்து கொண்ட பல பிரபலங்கள் ஆகி இருக்கின்றனர். அந்த வரிசையில் குரோஸியும் ஒருவர். இப்போது விஜய் டிவியில் அதிகமான நிகழ்ச்சிகளில் குரோஸி தொகுப்பாளராகவும் பங்கேற்பாளராகவும் கலந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் பேட்டியில் குக் வித் கோமாளி செட்டில் நடந்த நிகழ்வு பற்றி கூறியிருக்கிறார்.

அதில் குக் வித் கோமாளியில் இருக்கும் போது அதிகமாக வெங்கடேஷ் பட் திட்டிக் கொண்டே இருந்தார். அப்போது கோபமான நான் அங்கிருந்த எண்ணெயை எடுத்து அவருடைய காலில் ஊற்றினேன். அப்போது அவர் அணிந்திருந்த ஷூ மதிப்பு 80,000 என்று எனக்கு பிறகு தான் தெரிந்தது. அந்த எண்ணை கறை வேற போகாதாம்.
அது இப்ப நினைத்தாலும் எனக்கு குற்ற உணர்ச்சியாக தான் இருக்கிறது.ஆனால் நான் எண்ணெய் ஊற்றிய பிறகு கோபத்தில் வெங்கடேஷ் பட் என்னை அடித்து பாடாய்ப்படுத்தி எடுத்துவிட்டார் என்றும் கூறியிருக்கிறார்.இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications