ஒரே ஒரு கமெண்ட்டால் குரோஷிக்கு வந்த சிக்கல்.. வெங்கடேஷ் பட் புரியாத போஸ்ட் போட காரணம் இதுதானா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புகழ் அடைந்த குரோஸி சமீபத்தில் வெங்கடேஷ் பட் வெளியிட்ட பதிவுக்கு கொடுத்த கமெண்ட் குறித்து தான் இணையத்தில் அதிகமானோர் விமர்சித்து வருகிறார்கள்.
அந்த வகையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளி ஐந்தாவது சீசனில் இருந்து தான் விலகி இருக்கிறேன் என்று கூறியிருந்தார். இப்படியான நிலையில் சமீபத்தில் அவர் ஒரு நிகழ்ச்சியில் டப்பிங் பேசியிருக்கும் வீடியோவை பகிர்ந்திருக்கும் நிலையில் அதற்கு கீழே குரோஷி கொடுத்த பதில் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அந்த வகையில் விஜய் டிவியில் ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கான எபிசோடு சூட்டிங் தொடங்கப்பட்டிருக்கிறது. இதில் குக்காக ஸ்ரீகாந்த் தேவா, இர்ஃபான், பிரியங்கா, அக்ஷய் கமல் ஆகியோர் இந்த சீசனில் போட்டியாளராக அறிமுகமாகி இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
அது போல கோமாளியாக நடிகை ஷபி என்ற ஷப்னம், ராமர், நாஞ்சில் விஜயன் ஆகிய புது கோமாளிகளும் நிகழ்ச்சிக்கு வர இருக்கிறார்கள். அதுபோல இந்த சீசனில் மணிமேகலை மற்றும் ரக்ஷன் தொகுப்பாளராக இருக்கிறார்கள். இந்த நிலையில் இதுவரைக்கும் நான்கு சீசன்களில் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் விலகி இருந்த நிலையில் சமீபத்தில் அவர் தான் புதியதாக இணைந்திருக்கும் நிகழ்ச்சியின் டப்பிங் வீடியோவை பகிர்ந்து இருந்தார்.
அதோடு அந்த வீடியோவிற்கு, "சிங்கம் சிங்கிளாத்தான் வரும் என்று நீங்களே சொல்லிட்டீங்க... ஆரம்பிக்கலாமா...?" என்று பதிவிட்டு இருந்தார். ஆனால் அவர் எந்த சேனலில் எந்த நிகழ்ச்சியில் வரப்போகிறார் என்பதை பற்றி விளக்கவில்லை. இதை பார்த்த பலர் அவருக்கு கமெண்ட் கொடுத்து வந்தனர். அப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரபலமடைந்த குரோஷியும் சரியாக சொன்னீர்கள் சார் என்று கமெண்ட் போட்டு இருக்கிறார்.
இப்படி இவர் கூறி இருக்கும் கருத்து பெரிய அளவில் சர்ச்சையாகி இருக்கிறது. இது குறித்து ரசிகர்கள் பேசுகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு எதிராக வெங்கடேஷ் பட் நிகழ்ச்சி ஆரம்பித்து இருக்கிறார். அதற்கு ஆதரவாக குரோஷி சொல்வது தவறு என்றெல்லாம் சிலர் கூறி இருக்கிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் இது குறித்து குரோஷி பேட்டியில் விளக்கம் கொடுத்ததில், பட் சார் அவருடைய சோசியல் மீடியாவில் போட்டிருந்த பதிவிற்கு தான் நான் சாதாரணமாக தான் கமெண்ட் போட்டேன்.
அதை வைத்து எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள் என்று நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது. எனக்கும் பட் சாருக்கும் நல்ல பழக்கம் இருக்கிறது. அதனால் அவருடைய முயற்சிக்கு வாழ்த்து சொன்னேன். இது ஒரு தப்பா? விஜய் டிவியே இதை ஒரு பிரச்சனையாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். சோசியல் மீடியாவில் ஏதாவது எழுதணும் என்று செய்கிறார்கள். என்ன பொறுத்தவரை குக் வித் கோமாளி ஐந்தாவது சீசனில் நான் இருக்கிறேன் அவ்வளவுதான் என்று அதில் அவர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அதே நேரத்தில் தொடர்ச்சியாக வெங்கடேஷ் பட் பதிவு வெளியிட்டு வருவதற்கு காரணம் தன்னோடு தாமு நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்து விடுவார் என்று முதலில் பேசி இருந்த நிலையில், பிறகு தாமு மறுத்துவிட்டதால் தாமுவை தாக்கி தான் வெங்கடேஷ் பட் இப்படி எல்லாம் பதிவு வெளியிடுகிறாரா..? என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications