CWC செட்டில் பிரச்சனை இதுதான்! பிரியங்கா கையை பிடித்து மணிமேகலை கேட்ட கேள்வி! வெளிவந்த தகவல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அந்த செட்டில் என்ன பிரச்சனை நடந்தது என்பது பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தொகுப்பாளர் மணிமேகலை ஆரம்பத்தில் சன் மியூசிக்கில் சூப்பர் ஹிட்ஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி அதற்கு பிறகு வாழ்த்தலாம் வாங்க, வெட்டிபேச்சு, ஹாலிவுட் டைரிஸ் என்று பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஒன்பது ஆண்டுகளாக சன் டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்திருக்கிறார். அப்போது பல விருதுகளை பெற்றிருந்தாலும் அதற்கு பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டுதான் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டார்.

முதல் சீசனில் இருந்து நான்கு சீசன்களாக கோமாளியாக இருந்த மணிமேகலை நான்காவது சீசனில் இருந்து திடீரென்று வெளியேறி இருந்தார். அதற்கு பிறகு தொகுப்பாளராக அந்த நிகழ்ச்சியில் பாதிக்குப் பிறகு வந்திருந்தார். அதைத் தொடர்ந்து ஐந்தாவது சீசனிலும் தொகுப்பாளராகவே கலந்து கொண்டார். ஆனால் கடந்த சனிக்கிழமை செப்டம்பர் 14ஆம் தேதி மாலை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.
அதோடு தன்னை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வேலை பார்க்க விடாமல் போட்டியாளராக வந்த ஒரு தொகுப்பாளர் தடுக்கிறார் என்று குற்றச்சாட்டு வைத்திருந்தார். இது பெரிய அளவில் இணையத்தில் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. பலரும் பிரியங்காவை திட்டி தீர்த்து வருகிறார்கள். அதே நேரத்தில் அங்கு என்னதான் பிரச்சனை நடந்தது என்று நாம் பலரிடம் பேசிய போது சில தகவல்கள் கிடைத்திருக்கிறது அதைப் பற்றி பார்க்கலாம்.
ஏற்கனவே மணிமேகலை நான்காவது சீசனில் இருந்து திடீரென்று வெளியேறி இருந்தார். அதற்கு காரணம் அப்போது மணிமேகலைக்கும் சுனிதாவிற்கும் இருந்த பிரச்சனைதான் என்று சிலர் கூறுகிறார்கள். சுனிதாவோடு ஏற்கனவே மணிமேகலைக்கு பிரச்சனை இருந்த நிலையில் அதை வைத்து ஒருநாள் செட்டில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் மணிமேகலை நான் இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை என்று தெரிவித்திருந்தார்.
ஆனால் அப்போது இது ஒரு குடும்பம் போல பழகி வந்ததால் மணிமேகலை சுனிதா பற்றியும் சேனல் பற்றியும் தவறாக எதுவும் பேசாமல் இருந்தார். ஆனால் அப்போது அதுவரைக்கும் சிவாங்கி கோமாளியாக இருந்த நிலையில் நான்காவது சீசனில் செஃப்பாக வந்துவிட்டதால் ஏற்பட்ட பிரச்சனையால் தான் மணிமேகலை வெளியேறிவிட்டார் என்று சிலர் கூறி வந்தனர். அது உண்மை இல்லை என்று சொல்லும் வகையில் மணிமேகலை வெளியிட்ட வீடியோவிற்கு சிவாங்கி உங்களுடைய அடுத்த பயணம் சிறப்பாக இருக்கட்டும் என்று அவருக்கு வாழ்த்துகள் கூறியிருந்தார்.
இந்த நிலையில் என்ன பிரச்சனை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். அதற்குப் பிறகு சேனல் தரப்பினர் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்திய போது நான் இனி கோமாளியாக வரமாட்டேன். இந்த நிகழ்ச்சிக்கு வந்தால் தொகுப்பாளராகத்தான் வருவேன் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு குழுவினரும் சரி என்று சம்மதம் சொன்னதால் தொகுப்பாளராக கலந்து கொண்டிருக்கிறார்.
பிறகு ஐந்தாவது சீசன் தொடங்கப்படும் போது வெங்கடேஷ் பட் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டார். அதுபோல அடுத்தடுத்து சிலரும் விலகி இருந்த நிலையில் மணிமேகலையையும் இழக்க வேண்டாம் என்று சேனல் தரப்பினர் முடிவு செய்து அவரிடம் நீங்கள் கோமாளியாக வாங்க என்று பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். ஆனால் மணிமேகலை நான் கோமாளியாக வர முடியாது வந்தால் தொகுப்பாளராகத்தான் வருவேன் என்று சொல்லி இருக்கிறார்.
அதற்கு சேனல் தரப்பில் சரி என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால் உள்ளே ஏற்கனவே சுனிதாவோடு பிரச்சனை இருக்கிறது, இனி எந்த பிரச்சனையும் இருக்கக்கூடாது என்று பேசி இருக்கிறார்கள். அதற்கு மணிமேகலை சரி என்று சொல்லித்தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. தற்போது மணிமேகலை மற்றும் பிரியங்காவிற்கு இடையே பிரச்சனை வெடித்தது எப்படி என்று சிலரிடம் கேட்டபோது அதாவது அன்று நடிகை திவ்யா துரைசாமி எலிமினேஷன் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த காட்சிகள் ஷூட் செய்யப்பட்டு இருக்கும்போது பிரியங்கா, திவ்யா இப்போது பெரிய நடிகையாக மாறிவிட்டார். வாழை திரைப்படத்தில் அவருடைய நடிப்பு அழகாக இருந்தது. ஆனால் திவ்யா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நான் ஒரு நடிகை என்று பெருமைப்பட்டுக் கொண்டது கிடையாது என்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது திவ்யா துரைசாமி பிரியங்கா எல்லாம் ரொம்ப எளிமையா நடந்துக்கிட்டாங்க. இவங்க கூட எல்லாம் நான் ஒரே நிகழ்ச்சியில் இருந்தேன் என்பது எனக்கு சந்தோசமா இருக்கு என்று சொல்லிக் கொண்டிருந்தாராம்.
அதற்கு பிரியங்கா அடுத்ததாக பதில் சொல்லப் போயிருக்கிறார். அந்த நேரத்தில் டக்கு என்று முன்னே வந்த மணிமேகலை பிரியங்காவின் கையைப் பிடித்துக் கொண்டு பிரியங்கா நீங்களே பேசிக்கிட்டே இருந்தா அப்போ நாங்க பேச வேண்டாமா? சும்மாவே நீங்க பேசுறதை மட்டும் தான் நிகழ்ச்சியில் போடுறாங்க. நாங்க என்னதான் பேசினாலும் அதை கட் பண்ணி எடுத்துடுறாங்க என்று கோபமாக பேசியதாகவும் உடனே பிரியங்கா கோபமாக அங்கிருந்து கேரவனுக்கு போய் விட்டார்.
இந்த சம்பவம் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் நடந்ததால் சூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரும் அதிர்ச்சியாகி இருந்தனர். பிறகு ஒருவர் அழுது கொண்டிருக்கிறார் என்றால் எல்லோரும் ஆறுதல் சொல்வது போல தான் பிரியங்காவிற்கு எல்லோரும் ஆறுதல் சொன்னார்கள். மணிமேகலையையும் சமாதானம் செய்தார்கள். பிறகு அன்றைய சூட்டிங் அப்படியே முடிந்துவிட்டது. அதற்கு பிறகு ஒரு வாரம் கழித்துதான் அடுத்த வாரத்திற்கான சூட்டிங் நடைபெற்றது.
அப்போது எந்த பிரச்சனையும் இல்லாதது போலத்தான் முதலில் மணிமேகலையும் இருந்தார். ஆனால் பிரியங்கா உள்ளே வரும்போது அவரை வரவேற்பதற்கு அவரிடம் சொன்னபோது மணிமேகலை நான் வேற யாரை பற்றி வேண்டும் என்றாலும் பேசுகிறேன். ஆனால் பிரியங்காவை பற்றி நான் பேசமாட்டேன் என்று சொல்லிவிட்டார்.
அவரிடம் சமாதானப்படுத்தி பார்த்து எடுபடவில்லை என்பதால் விளம்பர இடைவெளிக்கு பிறகு சேனல் தரப்பில் இருந்து தான் பிரியங்காவை வெளியே அனுப்பி விட்டார்கள் என்று அங்கிருந்த ஒரு சிலர் கூறுகிறார்கள். அதற்குப் பிறகு அந்த நிகழ்ச்சி வெளியான பிறகுதான் மணிமேகலை சமூக வலைத்தளங்களில் பதிவு வெளியிட்டிருந்தார்.
ஆனால் இதற்கு முன்பு பிரச்சனை ஏற்பட்டபோது சுனிதா பெயரை மணிமேகலை சொல்லாமல் இருந்ததால் எல்லோரும் ஒரு குடும்பத்தில் இருக்கும் பிரச்சனையை வெளியே சொல்வது கிடையாது அது போல் தான் அப்போது பாதுகாப்பாக இருந்தது ஆனால் இப்போது மணிமேகலை திடீரென்று இப்படி பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை என்று எல்லோரும் அதிர்ச்சியில் தான் இருக்கிறார்களாம்.
மணிமேகலை வீடியோ வெளியிட்ட பிறகு பிரியங்கா இதற்கு விளக்கமான வீடியோ எதுவும் கொடுக்கவில்லை.. ஆனால் அவர் இப்போது சுற்றுலா போவதாக சனிக்கிழமை மதியமே போஸ்ட் போட்டு இருக்கிறார். அவர் திரும்ப ஊருக்கு வந் பிறகு தான் இதற்கான அவர் தரப்பு நியாயங்கள் சொல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு சூட்டிங் ஸ்பாட்டில் அன்று என்ன நடந்தது என்பதை சேனல் தரப்பில் வீடியோவாக வெளியிட்டால் ரசிகர்களுக்கு தெளிவு ஏற்படும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. பிக்பாஸ் மட்டுமல்ல குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கூட உள்ளே பரபரப்பாக ஏதாவது பிரச்சனை நடந்தால் அதுதான் ப்ரோமோவாக வரும். ஆனால் இவ்வளவு பெரிய பிரச்சனை நடந்தாலும் அது ப்ரோமோவில் வராதது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்படுகிறது.












Click it and Unblock the Notifications