CWC "பவித்ரா” கண்ணீரோடு வெளியிட்ட பதிவு..இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது..ஆறுதல் கூறும் ரசிகர்கள்
சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரபலமடைந்த நடிகை பவித்ரா லட்சுமி தன்னுடைய அம்மா மரணம் அடைந்ததை பற்றி எமோஷனலாக பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்
உடல் நல குறைவால் இருந்த பவித்ரா லட்சுமியின் அம்மா உயிரிழந்து விட்டதாக அவர் உருக்கமாக கூறியிருக்கிறார்.
இத்தனை காலமும் தனியாக தன்னை வளர்க்க அம்மா பட்ட கஷ்டம் பற்றி அதில் கூறி இருக்கிறார்.

நடிகை பவித்ரா லட்சுமியை சிறுவயதிலிருந்தே சிங்கிள் மதர் ஆக இருந்து வளர்த்து வந்த அவருடைய அம்மா கடந்த ஐந்து வருடங்களாக உடல் நலக்குறைவால் அவதி உட்பட்டு இருந்த நிலையில் கடந்த ஏழு நாட்களுக்கு முன்பு திடீரென்று மரணம் அடைந்திருக்கிறார்.
அது குறித்து உருக்கமாக பவித்ரா லட்சுமி தன்னுடைய அம்மா பட்ட கஷ்டங்கள் மற்றும் அம்மாவின் இறப்பால் படும் வேதனை பற்றியும் அம்மாவோடு எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்து இருக்கிறார். அதிலும் அவருடைய அம்மா உடல் நல குறைவால் மருத்துவமனையில் இருக்கும் போது மூக்கில் டியூப் போட்டு இருக்கும் வீடியோவையும் பகிர்ந்த பவித்ரா தன்னுடைய சோகங்களை கண்ணீரோடு வெளிப்படுத்தி இருக்கிறார்.
பவித்ராவிற்கு ஆறுதல் கூறி அவருடைய ரசிகர்கள் மட்டுமல்லாமல் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர், குக் வித் கோமாளி பிரபலம் புகழ் என்னை மன்னித்துவிடு பவி என்னால் கடைசி வரைக்கும் அம்மாவை பார்க்க வர முடியவில்லை. நானும் பென்சியும் உனக்கு சாகர வரைக்கும் கூட இருப்போம் என்று ஆறுதல் கூறியிருக்கிறார்.
அதுபோல நடிகை மஞ்சிமா மோகன் தன்னுடைய இரங்கலை தெரிவித்து இருக்கிறார். குக் வித் கோமாளி பிரபலங்களான சக்தி, ஷ்ருதிகா அர்ஜுன், கிரோசி என பல பிரபலங்களும் நடிகர்களும் தொடர்ச்சியாக தங்களுடைய இரங்கல்களை தொடர்ந்து கூறி வருகிறார்கள்.
இவர் ஒரு நடிகை மட்டுமல்லாமல் டான்ஸ், மாடல் ,பேஷன் டிசைனர் என கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் பிகாம் படிக்கும்போது பேஷன் டிசைனரிங்க்கும் படித்து இருக்கிறார். அதனால் தான் காலேஜ் முடிந்ததும் ஷார்ட் பிலிம் நடிக்க தொடங்கிவிட்டார். இவர் முதலில் நடிக்க ஆரம்பிப்பதற்கு முன்பாகவே டான்ஸராக தான் அறிமுகமாகியிருக்கிறார்.
இப்ப வரைக்கும் இவர் மீடியாவில் இருப்பதற்கு காரணம் டான்ஸ்தான். அதனால் தான் இவர் பெரிதும் டான்ஸை நம்பிக் கொண்டிருக்கிறார். இவர் நடிகை என்று சொல்வதைவிட டான்ஸர் என்று சொன்னால் ரொம்ப சந்தோஷப்படுவார் .அந்த டான்ஸ் மீது இவருக்கு ஆசை இரண்டரை வயதில் இருந்தே வந்துவிட்டதாம். அதற்கு காரணம் இவரது அம்மா தானாம்.

டான்ஸை முறைப்படி கற்று முடித்திருந்தாலும் இவரது ஆசை சினிமாவில் போகலாம் என்று ஆனால் அவரது அம்மா அதற்கு முடியாது என்று சொன்னதும் வேண்டாம் என்று விட்டு விட்டார். ஆனால் காலேஜ் படிக்கும்போதே இவர் அவருடைய நண்பரின் சகோதரர் இவர் அழகாக இருக்கிறார் கேட் வாக்கிற்கு வருவாரா என்று கேட்டிருக்கிறார் .
இவரும் அதற்கு சரி என்று மாடலிங்கில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அதற்குப்பிறகுதான் மாடலிங்கில் பல வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது .அந்த நேரத்தில் விஜய் டிவியில் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்னும் நிகழ்ச்சி நிகழ்ச்சிக்கு ஆடிசன் நடைபெற்றிருக்கிறது. இவர் அதில் கலந்து கொண்டிருக்கிறார்.
இவர் அதில் கலந்துகொண்டு வெற்றியும் பெற்று டாப் 20 வரைக்கும் போயிருக்கிறார். ஆனாலும் இவருக்கு கிராமத்தில் இருந்து சென்னையில் வந்தது .பெரிய கஷ்டமாக இருந்து இருக்கிறது. அதனால் இவரால் தொடர்ந்து அங்கு இருக்க முடியாமல் திணறி இருக்கிறார். அதனால் மீண்டும் ஊருக்கு சென்றுவிட்டார் .அதன்பிறகு மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.
அதற்கு பிறகு பல விளம்பர மாடல்களிலும் நடித்துக்கொண்டிருந்தார். அதற்குப்பிறகுதான் விஜய் டிவியில் குக் வித் கோமாளி கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது .இந்த நிகழ்ச்சியின் மூலமாக இவர் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை பெற்று இருக்கிறார் .
-
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
விஜயாவை அவமானப்படுத்திய மீனா.. ஸ்ருதியை பழிவாங்க நீத்து பிளான்! ரோகிணி வைத்த செக்.. சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications