உனக்கு வெட்கமா இல்லையா? வெளியே போ? துரத்திய செப்.. அவமானத்தில் போட்டியாளர்.. எதிர்பார்க்காத நிகழ்வு

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தங்கத்துரையை வெங்கடேஷ் பட் திட்டி இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் மார்ச் மாதத்தின் 11 மற்றும் 12வது நாளுக்கான மூன்றாவது பிரமோ வெளியாகி இருக்கிறது.

வெங்கடேஷ் பட் கோபமாக தங்கத்துரையை திட்டுகிறார்.

கொடுத்த டாஸ்க்கை சரியாக செய்ய தெரியவில்லையே என்று வெங்கடேஷ் பட் உனக்கு வெட்கமா இல்லையா? என்று திட்டியது குறித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

புதிய கோமாளிகள்

புதிய கோமாளிகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகின்ற நிலையில், கடந்த வாரத்தில் முதல் போட்டியாளராக கிஷோர் வெளியேற்றப்பட்டார். இந்த சீசனில் பல போட்டியாளர்கள் புதியதாக அறிமுகமானார்கள். அவர்களின் ஜி.பி முத்து, ஓட்டேரி சிவா, சிங்கப்பூர் தீபன், சின்னத்திரை நடிகை ரவீனா டாடா, சுனிதா, மோனிஷா, மணிமேகலை போன்றோர் கோமாளிகளாக கலந்து கொண்டிருக்கின்றனர்.

 புதிய குக்குகள்

புதிய குக்குகள்

அதுமட்டுமல்லாமல் இந்த சீசனில் குக்குகளாக ஷெரின், விசித்திரா, அஜித் பட நடிகரான ராஜா ஐயப்பா, பாக்கியலட்சுமி சீரியல் எழில் கேரக்டரில் நடிக்கும் விஜே விஷால், காளையன், மைம் கோபி, நாய் சேகர் இயக்குனர் கிஷோர் ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டு இருக்கின்றனர். இதுவரைக்கும் கோமாளியாக கலந்து கொண்ட சிவாங்கி இந்த சீசனில் குக்காக அறிமுகம் ஆகி இருக்கிறார்.

ஊறுகாய் டேஸ்டிங் சேலஞ்ச்

ஊறுகாய் டேஸ்டிங் சேலஞ்ச்

இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்த்தாலே மனதில் மகிழ்ச்சி ஏற்பட்டு விடுகிறது என்று ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்த வாரத்தில் மூன்றாவது பிரமோ வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே இந்த வாரத்தில் எலிமினேஷன் ரவுண்ட் இருக்கிறது. இதில் யார் வெளியிடப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. அதில் வித்தியாசமான டாஸ்க் வைத்திருக்கின்றனர் ஊறுகாய் டெஸ்டிங் சேலஞ்ச் வைக்கப்பட்டிருக்கிறது.

சொதப்பிய தங்கதுரை

சொதப்பிய தங்கதுரை

குக்குகள் கையில் சிலேட்டோடு திரும்பி நின்று கொண்டிருக்க, கோமாளிகள் அங்கே இருக்கும் ஊறுகாய் பாட்டிலில் என்ன ஊறுகாய் இருக்கிறது என்று சுவைத்து பார்த்து தங்களுடைய குக்குகளின் காதுகளில் என்ன ஊறுகாய் என்று சொல்ல வேண்டும். அதுவும் கோமாளிகளின் கண்களை கட்டியிருக்கின்றனர். அதனால் சரியாக அவர்களுடைய குக்குகளிடம் சொல்ல வேண்டும். இந்த நிலையில் வி.ஜே விஷாலின் கோமாளியாக தங்கதுரை இருக்க அவர் ஊறுகாயை டேஸ்ட் பண்ணி பார்த்துவிட்டு விஜே விஷால் காதில் மாங்காய் ஊறுகாய் என்று கூறி இருக்கிறார். பிறகு வெங்கடேஷ் பட் மற்றும் செப் தாமு இருவரும் மாங்காய் ஊறுகாய் என்று சொன்னது யாரு என்று கேட்க தங்கதுரை நான்தான் என்று சொல்கிறார்.

ரசிகரின் வேண்டுகோள்

ரசிகரின் வேண்டுகோள்

தங்கத்துரையின் கண்களை அவிழ்த்த வெங்கடேஸ் பட், நீ வெளியே போயிரு என்று சொல்ல, அதற்கு தங்கதுரை கண்ணு தெரியல சார் என்று சொல்கிறார். அதற்கு வெங்கடேஸ் பட் ஊறுகாயை நக்கி கிட்டு எலுமிச்சங்காய் ஊறுகாயை மாங்கா ஊறுகாய் என்று சொல்லுதியே உனக்கு வெக்கமா இல்லையா? என்று கேட்கிறார். தற்போது இந்த பிரமோ வைரலாக பரவி வரும் நிலையில் இந்த பிரமோவிற்கு ரசிகர் ஒருவர் வேண்டுகோள் வைத்து இருக்கிறார். அதில் வெங்கடேஷ் பட் சார், நீங்க பொறுக்கி, வெட்கமா இல்லையா? போன்ற வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள். இந்த நிகழ்ச்சியை குழந்தைகளும் பார்க்கிறார். அவர்கள் இதை ஃபாலோ பண்ண கூடும் என்று வேண்டுகோள் வைத்து இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+