அச்சச்சோ என்னாச்சு..!?CWCயில் கதறி அழுத செஃப் தாமு..மனைவி கேட்ட கேள்வி தான் காரணமா?
சென்னை: குக் வித் கோமாளி சீசன்4-க்கான இன்றைய எபிசோடில் குக்குகள் குடும்பத்தோடு கலந்து கொண்டிருக்கின்றனர்.
அதேபோல செஃப் தாமு அவருடைய மனைவியோடு இந்த வார நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.
அப்போது மனைவி சொன்ன வார்த்தையை கேட்டு அழுவது போன்று செஃப் தாமு செய்த செயல் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் பல கலகலப்பான தருணங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும். ஒரு சில வாரங்களில் யாராவது எலிமினேஷன் ஆகும் போது தான் அங்கே உணர்வுபூர்வமான அழுகாட்சி சீன்களும் நடக்கும்.
குக் வித் கோமாளி நான்காவது சீசன் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய இருக்கும் நிலையில் இந்த வாரம் குக்குகள் தங்களுக்கு பிடித்தவர்களை இந்த நிகழ்ச்சியில் கூட்டிக்கொண்டு வந்திருக்கின்றனர். அந்த வகையில் சிவாங்கி தன்னுடைய அம்மாவோடு வந்திருக்கிறார். அதுபோல விசித்ரா தன்னுடைய மகனோடு வந்திருக்கிறார். மற்ற போட்டியாளர்கள் தங்களுடைய நண்பர்களோடு கலந்து கொண்டு இருக்கின்றனர்.
சிவாங்கி அவருடைய அம்மாவோடு கலந்து கொண்டிருப்பதை பார்த்த ஸ்ருஷ்டி ஐயோ நானும் எங்க அம்மாவை மிஸ் பண்ணுகிறேன். நானும் கூட்டிட்டு வந்திருக்கலாமே? மிஸ் பண்ணிட்டேனே என்று புலம்பிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சியின் நடுவராக இருக்கும் செஃப் தாமு தன்னுடைய மனைவியோடு கலந்து கொண்டிருக்கிறார்.
அப்போது ரக்சன் செஃப் தாமுவின் மனைவியிடம் இங்க தாமு அப்பா எல்லாருடைய சமையலையும் குறை சொல்ற மாதிரி வீட்டில் குறை சொல்வாரா? என்று கேட்க, கண்டிப்பா சொல்லுவாரு. குழம்புல உப்பு இல்ல பாரு, சாதம் நல்லா குழைஞ்சுட்டு பாரு என்று இருந்த இடத்தில் இருந்தே சொல்லுவாரு என்று கூறுகிறார். அதைத் தொடர்ந்து நான் கூட இங்கே சில நேரங்களில் சோர்ந்து போயிருவேன். ஆனால் அப்பா சோர்ந்து போக மாட்டாரு என்று தர்ஷன் சொல்லுகிறார்.
அதற்கு செஃப் தாமுவின் மனைவி இங்க நிறைய பேரு கலர்ஃபுல்லா இருக்காங்களா! அதான் எனர்ஜியா இருக்காரு என்று தாமு பற்றி சொல்ல, தன்னுடைய கர்ச்சீப்பை தலையில் போட்டு மூடியபடி தாமு அட்ராசிட்டி செய்ய, ரக்சன் ஏதோ நமீதாவை பார்த்து தாமு அப்பா காரை எங்கேயோ இடிச்சிட்டாருன்னு கேள்விப்பட்டோம் அந்த கதையை சொல்லுங்க என்று கேட்க,
அது ஒரு முறை கார் பார்க்கிங்கில் காரைக் கொண்டு வந்து கொண்டிருந்தார். அப்போது நமிதா போறாங்கன்னு நான் சொன்னேன். உடனே பக்கத்தில் இருந்த செவுத்துல போயி இடிச்சிட்டார். பிறகு நமிதாவுக்கு குக் வித் கோமாளி ஷோ ரொம்ப பிடிக்கும்னு சொல்லி இருக்காங்க என்று அன்னைக்கு ஃபுல்லா அவங்கள பத்தி தான் பேசிகிட்டு இருந்தாங்க. இவர் காரை செவுத்துல இடிச்சதும் எல்லாரும் ஓடி வந்துட்டாங்க. ஆனா இவரு கூலா இருந்தாரு என்று போட்டுக் கொடுக்க தாமு அழுதது போல நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதுபோல சிவாங்கி செஃப் தாமு மனைவியிடம், அப்பா ஆரம்பத்தில் நார்மலா இருந்தாங்க. பிறகு செலிப்ரிட்டியா மாறிய பிறகு நிறைய பொண்ணுங்க வந்திருப்பாங்க. அப்போ நீங்க பொசஸ்னஸ் ஆனிங்களா என்று கேட்க கண்டிப்பா கிடையாது. எத்தனை பொண்ணுங்க பேசினாலும் நான் அதை கண்டுக்கிறது இல்லை. எனக்கு நம்பிக்கை இருக்கு என்று கூறுகிறார்.
செஃப் தாமுவும், நானும் என்னுடைய மனைவியும் கணவன் மனைவியாக இருப்பதை விடவும் நண்பர்களாகத்தான் இருந்திருக்கிறோம். ஒவ்வொரு முறையும் நான் குக் வித் கோமாளியில் நடப்பதை ராத்திரி பத்து 11 மணி வரைக்கும் சொல்லிக் கொண்டிருப்பேன். அதுபோல அவங்களும் அவங்க பீல்டில் உள்ளதை என்னிடம் ஷேர் பண்ணுவாங்க. இப்படித்தான் எல்லோரும் நண்பர்களாக இருந்தாலே கணவன் மனைவிக்குள் பிரச்சனை இல்லை என்று அட்வைஸ் கொடுத்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications