குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்காக டாப் சீரியலில் இருந்து விலகும் கதாநாயகன்? அப்போ சீரியல் நிலைமை?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட்டிருக்கும் நிலையில் இதில் கலந்துகொண்ட நடிகர் ஒருவர் ஜீ தமிழில் நடித்துக் கொண்டிருக்கும் சீரியலில் இருந்து விலகப் போவதாக தகவல்கள் பரவி வருகிறது. அது யார் என்பது பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.
அந்த வகையில் பெரிய அளவில் எதிர்பார்ப்போடு இருந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரமாண்டமாக கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி தொடங்கப்பட்டு இருக்கிறது. இதில் பல நடிகர்கள் நடிகைகள் குக்காக கலந்து கொண்டிருக்கின்றனர். அதில் அக்ஷய் கமலும் ஒருவர். இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான இரட்டை ரோஜா என்ற சீரியல் மூலம் அறிமுகமாகி இருந்தார்.

அதற்கு முன்பு டிக் டாக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் பிரபலமாக இருந்த இவருக்கு "இரட்டை ரோஜா" சீரியலில் கிடைத்த வாய்ப்பு மூலமாக அடுத்தடுத்து சீரியல் வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. இரட்டை ரோஜா சீரியல் முடிவடைந்ததும் அவருக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் "இந்திரா" சீரியலில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் கதாநாயகனாக இப்போது வரைக்கும் இவர்தான் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
ஆனால் விஜய் டிவியில் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் அக்ஷய் கமல் கமிட்டாகி இருப்பதால் அவரால் தொடர்ந்து இந்திரா சீரியலில் நடிக்க முடியாது என்றும் அதனால் அவர் சீரியலில் இருந்து விலகப் போகிறார் என்றும் தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது. அதே நேரத்தில் அக்ஷய் கமலுக்கு பதிலாக அவருடைய கேரக்டருக்கு பொருத்தமான கதாநாயகன் இன்னும் கிடைக்காததால் அவரே சீரியல் தொடர்ந்து கொண்டிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
விரைவில் வேறொரு கதாநாயகன் உறுதியான பிறகு அக்ஷய் கமல் அந்த சீரியலில் இருந்து விலகுவார் என்று கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து இப்போ வரைக்கும் அக்ஷய் கமல் மற்றும் இந்திரா சீரியல் தரப்பினர் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுபோல ஜீ தமிழில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சண்டக்கோழி சீரியலில் இருந்து அந்த சீரியலின் கதாநாயகன் நிகாஸ்கான் விலகுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அவருக்கு பதிலாக தொகுப்பாளராகவும், பூவே பூச்சூடவா சீரியலில் நடித்த மதன் நடிக்க இருப்பதாகவும் தெரிகிறது. அதுபோல குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களம் இறங்கி இருக்கும் நடிகை "ஷப்னம்" "மாரி" சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவரும் இனி சீரியலில் தொடர்வாரா? அல்லது விலகப் போவாரா? என்று கேள்விகள் எழுந்து வருகிறது. இது குறித்து ஷப்னம் எந்த தகவலையும் வெளியிடவில்லை. என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications