CWC5: நல்ல மீன் சாப்பிட்டதில்லை.. 10 ரூபாய்க்கு வாங்கி.. கண் கலங்கிய இர்பான்.. நடுவர் சொன்ன வார்த்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இந்த வாரம் மறக்குமா நெஞ்சம் ரவுண்ட் நடைபெறுகிறது. அதில் பல போட்டியாளர்கள் தங்களுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத பல சம்பவங்களை பற்றி பேசுகிறார்கள். அப்போது youtube இர்ஃபான் தன்னுடைய கடந்த கால கஷ்டங்கள் குறித்து சொன்ன ப்ரோமோ இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.


விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சி வெற்றி பெற்றால் அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த சீசன்கள் தொடங்கப்படுவது வாடிக்கையாக இருக்கிறது. அந்த வரிசையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த நான்கு சீசன்களாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல கோமாளிகள் மற்றும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிப் போயிருந்தனர்.

Television Vijay TV


புது கூட்டணியோடு பெரிய அளவில் எதிர்பார்ப்போடு ஐந்தாவது சீசன் தொடங்கப்பட்டது. அதனாலேயே மக்கள் மத்தியில் பிரபலமான பலர் இந்த சீசனில் போட்டியாளர்களாக கலந்த கலந்து கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் யூடியூபர் இர்ஃபான் குக்காக இந்த சீசனில் கலந்து கொண்டிருக்கிறார். ஏற்கனவே இவர் பல ஹோட்டல்களில் சாப்பாடு ருசி பார்த்து ரிவ்யூ செய்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்து இருக்கிறார்.


ஆனால் அவர் இந்த நிகழ்ச்சியில் செஃப்பாக கலந்து கொண்டது பலருக்கும் வியப்பை கொடுத்தது. அதுபோல சமூக வலைத்தளத்திலும் அடிக்கடி இர்ஃபான் சர்ச்சைகளில் சிக்கி கொள்வது வாடிக்கையாக இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருடைய மனைவியின் வயிற்றில் இருக்கும் குழந்தை என்ன பாலினம் என்பதை அறிவித்தது பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்த நிலையில் இந்த வார எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் இந்த வாரம் மறக்குமா நெஞ்சம் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் எல்லா போட்டியாளர்களும் தங்களுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத பல நினைவுகள் குறித்து பகிர்ந்து வருகிறார்கள். அப்போது இர்ஃபான் பேசுகையில் எனக்கு மீன் என்றால் ரொம்ப பிடிக்கும். சின்ன வயசில் எங்க வீட்டில் மீன் வாங்குவதற்கு வசதி இருக்காது.

நல்ல மீனெல்லாம் நாங்க சாப்பிட்டது கிடையாது. சந்தையில் பத்து ரூபாய்க்கு என்று கூறு வைத்திருப்பார்கள். அந்த மீனைதான் நாங்கள் வாங்கி குழம்பு வைத்து சாப்பிடுவோம். அப்போது எனக்கு மீன் அதிகமாக பிடிக்கும் என்பதால் அம்மா தலைப்பகுதியை சாப்பிட்டுவிட்டு மீனை எனக்கு தருவார். அந்த நாட்களை மறக்க முடியாது என்று பேசிக் கொண்டிருக்கும்போதே அவருடைய அம்மா நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார்.

அவரும் தங்களுடைய கஷ்டப்பட்ட ஆரம்ப காலத்தை குறித்து பேசி இருக்கிறார். அதுபோல இர்ஃபான் அந்தக் காலத்தில் இருந்து டேஸ்ட்டா இருந்தா மட்டும் தான் சாப்பிடுவான். வீட்டில் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் டேஸ்ட் இல்லை என்றால் சாப்பிடாமல் பட்டினியாகவே கிடந்து விடுவான் என்று பேசியிருக்கிறார். அதுபோல அப்போது தாமு இர்ஃபான் அம்மாவிடம் இவர் மீனை பற்றி இவ்வளவு நேரமா பேசுனதை விட உங்களப்பத்தி தான் அதிகமா பேசிட்டு இருந்தாரு என்று சொல்லி இருக்கிறார்.


அதோடு பக்கத்தில் இருந்த மாதம் பட்டி ரங்கராஜன் இர்ஃபான் இதற்குள்ள வருவதற்கு முன்பு சாப்பாடை டேஸ்ட் மட்டும் தான் பண்ணி இருக்காரு. ஆனா இந்த நிகழ்ச்சியில் முழுசா செஃப் ஆக மாறிவிட்டார் என்று சொல்லிக்கொண்டு இர்பான் அம்மாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியிருக்கிறார். இந்த ப்ரோமோ இப்போது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+