குக் வித் கோமாளியில் இருந்து நான் வெளிவந்த உண்மை காரணம் இதுதான்! நாஞ்சில் விஜயன் உடைத்த ரகசியம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்ட நாஞ்சில் விஜயன் திடீரென்று நிகழ்ச்சியில் இருந்து விலகி இருந்தார். இது குறித்து சமீபத்தில் தனியார் youtube சேனல் ஒன்றுக்கு தான் எதற்காக விலகினேன் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். அந்த வீடியோ இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
விஜய் டிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதில் திறமை உள்ள பல கலைஞர்கள் கலந்து கொண்டு தங்களுடைய திறமை மூலமாக ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்கள். அதன் மூலமாக கலைஞர்களுக்கும் அடுத்தடுத்து அங்கீகாரம் கிடைத்துக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் விஜய் டிவி பிரபலங்கள் பலர் கலந்து கொள்கிறார்கள். இதுவரைக்கும் நான்கு சீசன்கள் முடிவடைந்து இருந்த நிலையில் ஐந்தாவது சீசன் தொடங்குவதற்கு முன்பே பெரும் சர்ச்சைகளும் பிரச்சனைகளும் தொடங்கி இருந்தது. நான்கு சீசன்களாக நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் திடீரென்று நிகழ்ச்சியிலிருந்து விலகி இருந்தார்.
அதுபோல இந்த நிகழ்ச்சியை தயாரித்து வந்த தயாரிப்பாளர், இயக்குனர் என்று அடுத்தடுத்து விலகி இருந்தனர். ஆனாலும் விஜய் டிவி தரப்பில் இருந்து ஐந்தாவது சீசன் புது கூட்டணியில் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சி தொடங்கிய ஒரு சில வாரத்திற்குள் கோமாளியாக அறிமுகமான நாஞ்சில் விஜயன் இனி நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தயாரிக்கும் நிறுவனம் தயாரிக்கும் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள மாட்டேன்.
ஆனால் எனக்கும் விஜய் டிவிக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது என்று ஒரு அறிவிப்பு ஒன்று வெளியிட்டு இருந்தார். இது பெரிய அளவில் பேசப்பட்டது. அது குறித்து சமீபத்தில் நாஞ்சில் விஜயன் தனியார் youtube சேனல் ஒன்றில் விளக்கம் கொடுத்திருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு கருத்துக்களை பெற்று வருகிறது.
அதில் நாஞ்சில் விஜயன் பேசுகையில், நான் விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி எனக்கு ரொம்பவே பிடித்த நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலருடைய வாழ்க்கை மாறி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தான் நடிகை ஷகிலாவை பலரும் அம்மா என்று அழைக்க தொடங்கினார்கள்.
அதுவரைக்கும் திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் வேறு ஒரு பின்பத்தில் மக்கள் மத்தியில் அவர் பிரபலமாக இருந்தாலும், இந்த நிகழ்ச்சியின் மூலமாக அவருக்கு அதிகமான பாசிட்டிவ் மற்றும் ரசிகர்கள் கிடைத்தனர். அதுபோல வனிதா, புகழ், பாலா, குரோஸி என்று பலரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமாக இருக்கிறார்கள். நானும் எனக்கு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததும் அதேபோல நமக்கும் ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்ற ஆர்வத்தில் தான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.
ஆனால் நான் பேசிய பலவற்றை எபிசோடில் எடிட் செய்து கட் பண்ணி விட்டார்கள். அதுபோல அடுத்து சூட்டிங் என்னை கூப்பிடுவார்கள் என்று நானும் காத்திருந்தேன். ஆனால் கூப்பிடவில்லை. நானும் பலமுறை போன் செய்து பார்த்தேன். ஆனாலும் எனக்கு சரியான ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் என் மீது எனக்கே கோபமும், வெறுப்பும் ஏற்பட தொடங்கிவிட்டது. நாம் என்ன அவ்வளவு மோசமாக நடிக்கிறோமா? அல்லது கண்டன்ட் கொடுக்காமல் இருக்கிறோமா? நம்மை ஏன் இவர்கள் வேண்டாம் என்று சொல்கிறார்கள் என்று எனக்குள் கேள்வி எழுந்து கொண்டே இருந்தது.
நிகழ்ச்சிக்குள் எல்லோரும் கிண்டல் செய்வதை வைத்து நான் வெளியேறி விட்டதாக சிலர் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதெல்லாம் ஒன்றும் இல்லை. காரணம் எல்லோரும் நிகழ்ச்சிக்குள் ஜாலியாக பேசிக்கொள்வோம் அவ்வளவுதான். யாரும் மனதில் இருந்து யாரையும் அசிங்கப்படுத்த வேண்டும் என்று கிண்டல் செய்யவில்லை. ஆனால் எனக்கு முறையான அங்கீகாரம் அங்கு கிடைக்கவில்லை என்பது எனக்கு ஒரு ஆதங்கமாக இருந்தது.
அதனால் நான் அந்த நிகழ்ச்சியில் இருந்தும் நிகழ்ச்சியை தயாரிக்கும் நிறுவனம் தயாரிக்கும் நிகழ்ச்சியில் இருந்தும் வெளியேறிவிட வேண்டும் என்று நினைத்தேன். அதைத்தான் அறிவிப்பாக வெளியிட்டேன். அன்று நான் எடுத்த முடிவு நான் நன்றாக யோசித்து எடுத்தது தான். அதற்கு பிறகும் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொண்டு தான் இருக்கிறேன். கலைஞன் என்றால் எல்லா சேனலிலிருந்தும் வாய்ப்புகள் வரும் அதுபோல எனக்கும் எல்லா சேனலிலிருந்தும் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. அதில் நான் நடித்துக் கொண்டும் இருக்கிறேன் என்று அந்த பேட்டியில் நாஞ்சில் விஜயன் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications