CWC 5: பிரியங்காவும் நிகழ்ச்சியை விட்டு போக போறாங்களா? திடீரென அவங்களே சொன்ன வார்த்தை
சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கிய இரண்டு வாரத்திற்குள் நாஞ்சில் விஜயன் திடீரென்று தான் விலக போவதாக நேற்று அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து விஜே பிரியங்காவும் நான் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற என்ன ப்ரோசிஜர் இருக்கிறது என்று கேட்ட வீடியோ இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்படுகிறது.
அந்த வகையில் தற்போது தொடங்கிய குக் வித் கோமாளி நிகழ்ச்சி பெரிய அளவில் ஆரம்பத்தில் இருந்தே சர்ச்சைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதுவரைக்கும் நான்கு சீசன்கள் ஒளிபரப்பாகி வந்தது. ஒவ்வொரு வருடமும் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கி விடும் இந்த நிகழ்ச்சிக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

அதிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த நிகழ்ச்சியை தொடர்ச்சியாக பார்க்கிறார்கள். பலரால் டிவியில் இந்த நிகழ்ச்சியை பார்க்க முடியவில்லை என்றாலும் இணையத்தில் பார்த்து விடுகிறார்கள். ஆனால் ஐந்தாவது சீசன் ஆரம்பிப்பதற்கு முன்பே பெரிய அளவில் பிரச்சனைகள் வெடிக்கத் தொடங்கியது. இதுவரைக்கும் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் தான் விலகப் போகிறேன் என்று சொல்லி இருந்தார்.
அவரை தொடர்ந்து இயக்குனர், தயாரிப்பாளர் என்று விலகி இருந்தனர். இந்த நிலையில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த வாரத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. அப்பாடா ஒரு வழியா நிகழ்ச்சி தொடங்கியாச்சு இனியாவது பிரச்சனை இல்லை என்று நினைத்திருந்த நேரத்திலேயே முதல் வாரம் முடிவடைந்ததும் கோமாளியாக இருந்த நாஞ்சில் விஜயன் நான் இனி குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வரமாட்டேன்.
அதுபோல இந்த நிகழ்ச்சியை தயாரிக்கும் பாக்ஸ் ஆப் கம்பெனி தயாரிக்கும் எந்த நிகழ்ச்சிக்கும் நான் வரமாட்டேன் என்று கூறியிருந்தார். நேற்று இரவு இவர் போட்ட போஸ்ட் பெரிய அளவில் வைரலாகி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது இன்றைய எபிசோடுக்கான வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில் பிரியங்கா நான் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே போக வேண்டும் என்றால் என்ன ப்ரோசிஜர் இருக்கிறது என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு காரணம் இந்த வாரம் கடல் உணவுகள் வைத்து சாப்பாடு செய்யும் டாஸ்க் கொடுத்து இருக்கின்றனர். அதிலும் முதல்முறையாக இந்த சீசனில் அட்வான்டேஜ் டாஸ்க் தொடங்கப்பட இருக்கிறது. அதில் பிரியங்காவிற்கு கோமாளியாக நடிகை ஷப்னம் வந்திருக்கிறார். அவரைப் பார்த்ததும் பிரியங்கா நான் நிகழ்ச்சியிலிருந்து போய் விடுகிறேன் என்று கூறியிருக்கிறார்.
இதை விஜய் டிவியின் youtube பக்கத்தில் வீடியோவாக வெளியிட்ட அட்மின் அந்த வீடியோவிற்கு என்னது பிரியங்காவும் நிகழ்ச்சியை விட்டு போக போறாங்களா? என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார். இது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதோடு குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் டிவியில் டாப்பு குக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சி இன்னும் ஒரு சில வாரங்களில் ஒளிபரப்பாக இருக்கிறது.
அந்த நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. அதற்கு காரணம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் தான் அங்கேயும் நடுவராக இருக்கிறார். அதே நேரத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்த பல கோமாளிகள் சன் டிவிக்கு போய்விட்டனர். இது பெரிய அளவில் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொடங்கிய இரண்டு வாரத்திலேயே போட்டியாளர்கள் வெளியேற போகிறோம் என்று சொல்வது ரசிகர்களை அதிருப்தி அடைய வைத்திருக்கிறது.
அதே நேரத்தில் இந்த வாரம் அட்வான்டேஜ் டாஸ்கில் பிரியங்கா மற்றும் ஷப்னம் ஜோடி தான் டாஸ்க் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications