CWCயில் அவலம்.. kpy சரத் ட்ரெஸ்ஸை தூக்கி பார்த்த ஜோயா.. ஆண்களுக்கு மானம் இல்லையா? குவியும் கேள்விகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் நடந்த நிகழ்வு குறித்து இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்படுகிறது. அதாவது நேற்று வடிவேலு கெட்டப்பில் வந்த கேபிஒய் சரத் டிரஸ்ஸை ஜோயா தூக்கி பார்த்திருக்கிறார். இது குறித்து இணையத்தில் ஆண்கள் பலரும் ஜோயாவை திட்டி வருகிறார்கள். அது பற்றி பார்க்கலாம்.

இந்த வகையில் விஜய் டிவியில் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் அதிகமாக மக்கள் மத்தியில் ரசிக்கப்படுகிறது. அதிலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சி மற்ற நிகழ்ச்சிகளை போல இல்லாமல் கலகலப்பான காமெடி கலந்த நிகழ்ச்சியாக இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்கிறார்கள்.

Television Vijay TV

அதனாலேயே ஐந்தாவது சீசன் வரைக்கும் இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக கொண்டு வந்திருக்கிறது. நான்கு சீசன் வரைக்கும் இந்த நிகழ்ச்சியை நடத்தி வந்த தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் விஜய் டிவியில் இருந்து விலகி இருந்த நிலையில் ரசிகர்கள் ஐந்தாவது சீசனுக்கு காத்திருந்தனர். புது கூட்டணியோடு பிரம்மாண்டமாக ஐந்தாவது சீசனும் தொடங்கப்பட்டது. இதுவரைக்கும் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் விலகி இருந்தாலும் அவருக்கு பதிலாக இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் மாதம் பட்டி ரங்கராஜனை நடுவராக களம் இறக்கி இருக்கின்றனர்.

நிகழ்ச்சியும் ஆரம்பமானது புதியதில் இருந்து விறுவிறுப்பாகவும் கலகலப்பாகவும் போய்க்கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் ஒரு சில போட்டியாளர்களுக்கு வழக்கம் போல இந்த சீசனிலும் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதில் ஒருவர் தான் ஜோயா. குழந்தைத்தனமாக மலையாளம் கலந்த தமிழோடு பேசுவதற்கு பலர் அவருக்கு பாலோவர்ஸ்களாக மாறிவிட்டனர். ஒரு சிலர் அவரை திட்டி இவர் ஓவர் கிரின்ச் செய்கிறார் என்று கலாய்க்கிறார்கள்.

அதிகமானோர் இவர் குழந்தை போல பேசிக் கொண்டிருக்கிறார் இவர் பேசுவதை பார்த்தாலே சிரிப்பு வந்து விடுகிறது என்று கருத்து கூறி வருகிறார்கள். இதனாலேயே என்னவோ ஒவ்வொரு வாரமும் ஜோயா எலிமினேஷனில் தப்பிக் கொண்டிருக்கிறார். பல சமையல் பொருள்களின் பெயர் தெரியவில்லை, அதுபோல அவர் சமையல் செய்வதும் பார்ப்பதற்கு பெரிய வித்தியாசமாக இருப்பதில்லை என்று ரசிகர்கள் கூறி வந்தாலும் அவர் ஒவ்வொரு வாரமும் எலிமினேஷனில் தப்பித்து விடுகிறார்.

காரணம் அவரால் தான் இந்த நிகழ்ச்சிக்கு அதிகமான கண்டன்டு கிடைக்கிறது என்பது பலருடைய வாதமாக இருக்கிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் நேற்றைய எபிசோடில் நடந்த நிகழ்வுதான் இப்போது இணையத்தில் அதிகமாக விவாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. அதாவது நேற்று கோமாளிகள் எல்லோரும் பல காமெடி நடிகர்களின் கெட்டப் போட்டிருந்தனர். அப்போது கேபிஒய் சரத் கோவில் திரைப்படத்தில் வடிவேலுவின் கெட்டப் போட்டு இருக்கிறார்.

அதில் வடிவேலு இடுப்பில் கோழிக்கூடு போன்று ஒன்றை கட்டிக்கொண்டு அதற்கு மேலே தன்னுடைய வேஷ்டியை கட்டி இருப்பார். அது போன்ற கெட்டப்பில் கேபிஒய் சரத் நேற்று வந்திருந்த நிலையில் ஒரு கட்டத்தில் ஜோயா பொருட்கள் எடுக்கும் அறையில் தரையில் அமர்ந்திருக்கிறார். அப்போது அவரிடம் மணிமேகலை பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் அங்கு கேபிஒய் சரத் வருகிறார். கூடவே தர்ஷன் நிற்கிறார்.

பக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜனும் நிற்கிறார். அப்போது மணிமேகலை கேபிஒய் சரத்விடம் டேய் இவளோட டிஷ் கொடுத்துடு நீ தான் எங்கேயோ ஒளிச்சு வச்சிருக்கியா என்று கேட்க, அதற்கு சட்டென யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜோயா அமர்ந்திருக்கும் நிலையில் நின்று கொண்டிருக்கும் கேபிஒய் சரத் டிரஸ்ஸை தூக்கிப் பார்த்து விடுகிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத கேபிஒய் சரத் அதிர்ச்சியாகி தரையில் அப்படியே உட்கார்ந்து கொள்கிறார். மாதம்பட்டி ரங்கராஜன் இதை கட் பண்ணி விடுங்கள் என்று செய்கையில் சொல்லுகிறார்.

ஆனால் இது நேற்றைய எபிசோடில் டெலிகாஸ்ட் ஆகி இன்று இணையத்தில் வீடியோக்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதை பார்த்ததும் ரசிகர்கள் இதேபோல ஒரு ஆண் செய்திருந்தால் இன்று சோசியல் மீடியாவில் எல்லோரும் கொதித்து இருப்பார்கள். இப்படி ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஒரு ஆண் அத்துமீறி நடந்து கொள்ளலாமா? என்று கேட்பார்களே ஆனால் இங்கு ஒரு பெண் இப்படி நடந்து கொண்டிருக்கிறார்.

அப்போ ஆண்களுக்கு மானம் இல்லையா? சேனல் தரப்பில் கூட இதை இப்படி வெளியிட்டு இருக்காங்க.. இந்த நிகழ்ச்சியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பாக்குறாங்க. இந்த நிகழ்ச்சியில் இப்படி ஒருத்தவங்களோட ட்ரெஸ்ஸ தூக்கி பார்த்து தான் கண்டன்ட் கொடுக்கணுமா? என்று பலவிதமாக விமர்சித்து வருகிறார்கள். இது குறித்து உங்களுடைய கருத்துக்களை தட்டி விடுங்க.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+