குக் வித் கோமாளியில் இருந்து ஜோயா விலகி விட்டாரா? கலந்து கொள்ளாத காரணம்? அவரே கொடுத்த விளக்கம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்து வரும் ஜோயா கடந்த வார எபிசோடில் கலந்து கொள்ளாத நிலையில் அவர் நிகழ்ச்சியில் இருந்து விலகி விட்டாரா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது குறித்து ஜோயா விளக்கம் கொடுத்திருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.
பொதுவாக சின்னத்திரை நிகழ்ச்சிகளில் ஒரு நிகழ்ச்சி வெற்றி பெற்றுவிட்டால் அதை தொடர்ந்து அடுத்தடுத்த சீசன்கள் தொடங்கப்படுவது வாடிக்கைதான். அந்த வகையில் தான் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பிடித்ததை தொடர்ந்து அடுத்தடுத்த சீசன்கள் தொடங்கப்பட்டு இப்போது ஐந்தாவது சீசன் நடந்து வருகிறது.

இதுவரைக்கும் இல்லாத வகையில் ஐந்தாவது சீசன் தொடங்கப்படும் போதே பெரிய அளவில் சர்ச்சைகளையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதுவரைக்கும் நான்கு சீசன்களாக இந்த நிகழ்ச்சியை நடத்தி வந்த தயாரிப்பாளர், இயக்குனர், நடுவர், கோமாளிகள் என்று அடுத்தடுத்து பலர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருந்தனர். அதற்குப் பிறகு இந்த சீசன் நடக்குமா இல்லையா என்று பெரிய அளவில் எதிர்பார்ப்போடு இருந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை சுவாரசியமாக்குவதற்காக பல போட்டியாளர்களை பார்த்து பார்த்து செலக்ட் செய்து இருந்தனர்.
அதில் ஒருவர் தான் ஜோயா இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஷார்ட் பிலிம் இயக்குனராகவும் இருந்து வருகிறார். ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் குக்காக செலக்ட் ஆகி இருக்கிறார். ஆனால் உண்மையில் இவர் குக் தானா என்பது பல நேரங்களில் அவருக்கே சந்தேகம் வந்து விடுகிறது. அதுபோல நடுவர்கள் மட்டுமல்லாமல் கோமாளிகளும் இவரை கோமாளி என்று பல நேரங்களில் நினைத்து விடுகிறார்கள்.

அந்த அளவிற்கு ஜோயா கோமாளி வேலைகளை நிகழ்ச்சியில் செய்து வருகிறார். இது பலரால் பாராட்டப்பட்டு வந்தாலும் ஒரு சிலரால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரத்தில் கூட வசந்த் வசி வெளியேறியது பெரிய அளவில் பேசப்பட்டது. நடிகர் வசந்த் வசிக்கு ஏற்கனவே சமையல் தெரிந்து இருந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் அவருடைய சமையல் சரியில்லை என்று காரணம் சொல்லி அவரை வெளியேற்றப்பட்டது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ஒரு சிலர் ஜோயாவிற்கு சரியாக சமைக்க தெரியாமல் இருக்கும் நிலையில் அவர் இந்த நிகழ்ச்சியில் இருக்கிறார். வசந்த் வசி வெளியேற்றப்பட்டு விட்டாரே என்று மீம்ஸ் வெளியிட்டு கூட வருகிறார்கள். இதற்கு ஜோயா கடந்த வாரத்தில் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் கதறுறவங்க கதறிக்கிட்டு இருங்க என்று ஒரு பதிவு போட்டு இருந்தார்.

இந்த நிலையில் கடந்த வர சனிக்கிழமை எபிசோடில் ஜோயா கலந்து கொள்ளவில்லை. இது குறித்து ஜோயா வெளியிட்ட வீடியோவில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். நீங்கள் எதனால் கடந்த வார எபிசோடில் கலந்து கொள்ளவில்லை? நீங்கள் இல்லாமல் நிகழ்ச்சி நல்லா இல்லை என்று சிலர் கூறி வருகிறார்கள். இதற்கு ஜோயா தனக்கு உடல்நிலை சரியில்லை அதனால்தான் தன்னால் கலந்து கொள்ள முடியாமல் இருந்தது
ஆனால் இப்போது உடல்நிலை தேறி வருகிறேன் அடுத்த வாரத்தில் நான் வந்து விடுவேன் என்று பதில் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் சுவாரசியத்திற்கு ஒரு சிலர் காரணமாக இருக்கிறார்கள், அதில் ஜோயாவும் முக்கிய பங்கு வகிக்கிறார் என்பது அவருடைய ரசிகர்களின் பாராட்டாக இருக்கிறது. அதுபோல விரைவில் ஜோயாவின் உடல்நிலை சரியாகி மீண்டும் அவர் நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்றும் பலர் வேண்டுகோள் வைத்து வருகிறார்கள்.













Click it and Unblock the Notifications