எல்லாம் போச்சு..மனம் உடைந்து விரக்தியில் CWC சக்தி..ஆறுதல் கூறும் ரசிகர்கள்..இவருக்கா இந்த நிலைமை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக சக்தி ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்திருந்தார்.

தற்போது சில எபிசோடுகளாகவே சக்தி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கலந்து கொள்ளவில்லை.

Cook with Comali Shakthi comforts fans in heartbreak and despair

இந்த நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கையில் பெரிய கட்டுடன் லைவில் விரக்தியாக பேசி இருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பலர் பிரபலம் அடைந்திருக்கின்றனர். அந்த வரிசையில் ஒருவர் தான் சக்தி. இவர் ஒரு கோமாளியாக அடிக்கடி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருப்பார்.

தண்ணால் முடிந்த அளவிற்கு பலரை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் சக்தி இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவில் ரசிகர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அடிக்கடி இவர் இது போல லைவில் பேசிக் கொண்டிருப்பார். அப்போது அவரோடு குக் வித் கோமாளி பிரபலங்கள் பலர் கலந்து கொள்வார்கள். ஆரம்பத்தில் அதிகமாக சிவாங்கி, அஸ்வின் போன்றோர் இவரோடு கலந்து கொண்டிருப்பார்கள்.

அப்போது ஒருவரை மாற்றி ஒருவர் கலாய்த்து போட்டிருப்பார்கள். இந்த நிலையில் இன்று லைவ் வந்த சக்திக்கு கையில் கட்டு போட்டு இருக்கிறது. அதை பார்க்கும் போதே தெரிகிறது கையில் பெரியதாக அடி பட்டிருக்கிறது.அதோடு தான் அந்த லைவில் பேசியிருக்கிறார். அதில் ஹாய், நான் ஒரு சின்ன பிரேக் எடுத்துக்கப் போறேன் பிஸிகல் ஆகவும் சரி மென்டலாகவும் சரி. கொஞ்சம் மனசுக்கு ஒரு மாதிரியா இருக்கு.

Cook with Comali Shakthi comforts fans in heartbreak and despair

நான் இப்போ பழைய சக்தியா இல்லாத மாதிரியான பீலா இருக்கு. மீடியால நிறைய விஷயத்தை நான் புரிஞ்சிட்டேன். ஆனா எல்லாத்தையும் நான் இப்ப சொல்ல முடியாது. கொஞ்ச நாளைக்கு கண்காணாத இடத்துக்கு போயிட்டு வரேன் என்று உடைஞ்சு போய் அந்த லைவில் சக்தி பேசி இருக்கார்.

இதனால ரசிகர்கள் என்ன ஆச்சு ஏன் இப்படி பேசுறீங்க உங்க கையில என்ன கட்டு? என்று கேட்டு அவருக்கு ஆறுதல் கூறிட்டு வராங்க. ஆனா சக்தி எனக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில வாய்ப்பு கிடைச்சி. ஆனால் அங்க என்னால சரியா பண்ண முடியாம ஆகிட்டு நானும் எவ்வளவோ ட்ரை பண்ணுனேன் ஆனா என்னால இப்போ முடியல.

மீடியா கூட நான் இதுதான் வேணும்னு முடிவெடுக்காத விஷயம் தான்.எனக்கு ஒரு வேலை கிடைச்சா அதை செய்ய நான் ரெடியா தான் இருக்கேன். அப்படி ஒரு வேலை கிடைச்சா எல்லாத்தையும் விட்டுட்டு அங்க போயிருவேன். எனக்கும் நிறைய பிரச்சனைகள் இருக்கு, வெளியிலிருந்து பார்க்கிறவங்களுக்கு சந்தோஷமா இருக்கிற மாதிரி தான் தெரியும்.

Cook with Comali Shakthi comforts fans in heartbreak and despair

ஆனா அதெல்லாம் நான் சமாளிச்சுக்கிட்டு இருக்கேன். சப்போர்ட் பண்றதுக்கு எல்லாம் ஆளுங்க இருக்காங்க ஆனாலும் நமக்கு நாம தான் எல்லாத்தையும் பாத்துக்கணும்னு தோணுது என்று உருக்கமாக பேசியிருக்கிறார்இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் இவருக்கு தொடர்ந்து ஆறுதல் கூறிட்டு வராங்க. இதுவும் கடந்து போய்விடும் ப்ரோ, நீங்க இதுக்கெல்லாம் உடைந்து போயிடாதீங்க. நாங்க உங்களுக்கு சப்போர்ட் கொடுக்கிறோம். என்றெல்லாம் இவருக்கு இப்போது கமெண்டுகள் குவிந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+