CWCயில் நடப்பது இதுதான்.. முதல் முறையாக உருக்கமாக ஸ்ருஷ்டி.. அவங்க 2 பேரு தான் காரணமாம்..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடப்பது குறித்து அதில் போட்டியாளராக இருக்கும் ஸ்ருஷ்டி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவு வெளியிட்டு இருக்கிறார்.

அதில் தான் இத்தனை நாட்களாக ஆசைப்பட்டு கொண்டிருந்தது எனக்கு கடைசி நேரத்தில் நடந்திருக்கிறது என்றும் மோனிஷா மற்றும் தங்கதுரை இருவரும் செய்த செயல் குறித்தும் பகிர்ந்து இருக்கிறார்.

Cook with Comali Srushti post about Monisha and Thangathurai

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் செமிபைனல் லிஸ்டில் நான்காவது இடத்தில் சேவ் ஆகி இருக்கும் ஸ்ருஷ்டி தற்போது வெளியிட்ட பதிவு குறித்து கருத்துக்கள் குவிந்து வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 4 இன்னும் ஒரு சில வாரங்களில் முடிவுக்கு வர இருக்கிறது. கடந்த வாரத்தில் இந்த நிகழ்ச்சியில் 5 போட்டியாளர்கள் செமி பைனலிஸ்டாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். இதில் யார் இந்த சீசனில் டைட்டில் வின்னர் ஆக போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருக்கிறது.

Cook with Comali Srushti post about Monisha and Thangathurai

அந்த வகையில் பிரபல நடிகையாக இருந்து வரும் ஸ்ருஷ்டி இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக இருந்து வருகிறார். ஸ்ருஷ்டிக்கு சினிமாவில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். ஜீ தமிழில் சில மாதங்களுக்கு முன்பு ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில் இவர் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். அப்போது இவர் நிகழ்ச்சியில் பல நாட்கள் தொடர முடியவில்லை என்று இவருடைய ரசிகர்கள் ரொம்பவே ஃபீல் பண்ணி இருந்தனர்.

இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஸ்ருஷ்டிக்கு அதிகமான ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர். இவரும் புகழும் சேர்ந்து அடிக்கடி செய்யும் லூட்டிகள் பலரையும் ரசிக்க வைக்கிறது. இந்த நிலையில் தான் டிக்கெட் டு பினாலே சுற்றில் விசித்திரா நேரடியாக பைனலிஸ்ட் ஆகிவிட்ட நிலையில் நேற்றைய எபிசோட்டில் செமி பைனல் சுற்றில் கிரண், கோபி, சிவாங்கி, ஸ்ருஷ்டி உள்ளிட்டார் போட்டியிட்டனர்.

Cook with Comali Srushti post about Monisha and Thangathurai

இதில் இரண்டாவது பைனல் லிஸ்ட் ஆக மைம் கோபி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து சிவாங்கி மூன்றாவதாகவும் அடுத்ததாக ஸ்ருஷ்டி நான்காவதாக பைனல் லிஸ்ட் ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் ஐந்தாவது பைனல் லிஸ்ட் ஆக யாரும் எதிர்பார்க்காத வகையில் கிரண் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். தற்போது இந்த ஐந்து பேரும் ஃபைனலிஸ்காக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றனர்.

இந்த நிலையில் ஸ்ருஷ்டி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் தேங்க்யூ மோனி மற்றும் தங்கதுரை. உங்கள் இரண்டு பேரையும் நான் மிகவும் காதலிக்கிறேன். நான் மோனியுடன் அதிகம் சமைத்தது இல்லை. நிகழ்ச்சி முடிவதற்குள் அவரோடு இணைந்து சமைக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. இறுதியில் நான் மோனியுடன் இணையும் வாய்ப்பு கிடைத்துவிட்டது.

Cook with Comali Srushti post about Monisha and Thangathurai

மெயின் டாஸ்கெட் போது மோனி கை நடுங்கியதை நான் பார்த்தேன். அவ்வளவு பயம் இருந்தது அவளுக்கு. தங்கதுரை என் அருகில் நின்று ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார். நான் ரொம்ப டென்ஷனாக இருந்த போது எனக்கு தங்கதுரையின் ஜோக் தான் ரொம்ப ஆறுதலாக இருந்தது. நான் வென்ற போது மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டது போல் உணர்ந்தேன். இதற்கெல்லாம் காரணம் மோனி மற்றும் தங்கதுரை தான் என்று கூறி இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+