'கூலி' பட நடிகை வெளியிட்ட பதிவு! மறக்க முடியாத அனுபவம் என உருக்கம், குவியும் கமெண்ட்ஸ்
சென்னை: ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான 'கூலி' திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் இந்தப் படத்தில் நடித்த நடிகை ரச்சிதா ராம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். ரஜினியுடன் பணியாற்றிய அனுபவம் பற்றியும் தனக்கு கிடைத்த வரவேற்பு பற்றியும் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் நெகிழ்ச்சியாக ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

கூலி ஒரு பான் இந்தியா படம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 50 ஆண்டுகால திரை வாழ்க்கையை நிறைவு செய்யும், காலகட்டத்தில் 'கூலி' திரைப்படம், வெளியானது. இவர் கடந்த, 1975-ம் ஆண்டு 'அபூர்வ ராகங்கள்' என்ற படத்தில் அறிமுகமானார். அந்த படம் வெளியான அதே நாளில் இப்போது ரஜினியின் 50வது படமான கூலி ரிலீஸ் ஆகி இருக்கிறது. இந்தப் படத்தில், ரஜினியுடன், மலையாள திரையுலகில் இருந்து சௌபின் சாஹிர், கன்னட திரையுலகில் இருந்து, உபேந்திரா, தெலுங்கு திரையுலகில் இருந்து, நாகார்ஜுனா, பாலிவுட் திரையுலகில் இருந்து, அமிர் கான் என, பான் இந்தியா அளவுக்கு, பல நட்சத்திரங்கள், நடித்திருந்தார்கள். தமிழ் திரையுலகில் இருந்து, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், காளி வெங்கட், உள்ளிட்ட, பலரும், நடித்திருந்தார்கள். நடிகை பூஜா ஹெக்டே ஒரு குத்து பாடலுக்கு நடனமாடி இருந்தார்.
வசூல் சாதனை
படத்திற்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பு பொறுப்பை ஏற்றிருந்தது. அனிருத் இசையமைத்திருந்தார். 'கூலி' திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே உலகம் முழுவதும் ₹151 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதுவரை ₹300 கோடிக்கும் மேலாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் ₹400 கோடியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரச்சிதா ராமின் நெகிழ்ச்சி
'கூலி' படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை ரச்சிதா ராம், ரஜினியுடன் எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ந்திருந்தார். இப்போது, தனது கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பிற்கு நன்றி கூறி உருக்கமாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
ரச்சிதா ராம் தனது பதிவில் "என் கதாபாத்திரத்திற்கு கிடைத்த விமர்சனங்களாலும் அன்பாலும் நான் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன். ஊடகங்கள், விமர்சகர்கள், ட்ரோல்கள் மற்றும் மீம் கிரியேட்டர்கள் என அனைவருக்கும் நன்றி.
என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை கொடுத்த லோகேஷ் கனகராஜுக்கு சிறப்பு நன்றி. ஜாம்பவான்களுடன் வேலை பார்த்தது மறக்க முடியாத அனுபவம். பட வெற்றிக்கு குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். ரச்சிதா ராமின் இந்த பதிவு அவருடைய கனவு நனவானதை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்துகிறது. ஒரு நடிகருக்கு ரசிகர்களின் அன்புதான் பெரிய சொத்து. அதை ரச்சிதா இப்போது பெற்றிருக்கிறார்.
கூலி கதை
ரஜினிகாந்த் தனது 171வது படமான 'கூலி'யில் 'தேவா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சென்னையில் மேன்சன் நடத்தி வரும் தேவா தனது நண்பர் ராஜசேகரின் மர்ம மரணத்தை விசாரிக்கிறார். ராஜசேகர் நாகார்ஜூனா நடத்தும் ஹார்பரில் வேலை செய்து வருகிறார். இந்த விசாரணையில் தேவா பல சிக்கல்களை சந்திக்கிறார். இந்தப் படத்தில் தேவாவின் இளம் வாழ்க்கை மற்றும் சைமனுக்கும் தேவாவுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதைப் பற்றியதுதான் கதை.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications