வீட்டுக்கு போன இடத்தில் ராதிகா செய்த செயல்.. சரத்குமாரின் பெருந்தன்மை.. டான்ஸ் ஜோடி டான்ஸ் பிரபலம் உருக்கம்
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் 80ஸ் பாடல்கள் டான்ஸ் ஆடும் ரவுண்டு நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்ட பஞ்சமி என்ற போட்டியாளரை, கடந்த வாரத்தில் நடிகர் சரத்குமார் வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்திருக்கிறார். அது குறித்து பஞ்சமி எமோஷனலாக பேசியிருக்கிறார். இந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து இப்போது டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோட நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் தங்களுடைய திறமையை வெளிக்காட்டுவதற்கு ஒரு இடம் கிடைக்காதா என்று தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

ரியாலிட்டி நிகழ்ச்சி
அதுபோல ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் எதிர்பார்க்காத அளவிற்கு பிரபலங்களாக மாறி இருக்கிறார்கள். ஒரு சிலர் இந்த நிகழ்ச்சியில் தங்களுடைய திறமையை காட்டி பலருக்கும் பிடித்தவர்களாக மாறிவிடுகிறார்கள். அந்த வரிசையில் தான் பஞ்சமி என்ற போட்டியாளரும் இணைந்திருக்கிறார்.
கணவரின் சப்போர்ட்
பஞ்சமி கல்லிடைக்குறிச்சி மாவட்டத்தில் சாதாரண ஒரு சின்ன கிராமத்தில் உள்ளவர் தான். அவருடைய அப்பா சின்ன வயதிலேயே இறந்து விட்டதால் இவருக்கு 15 வயதிலேயே குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். ஆனால் திருமணத்திற்கு பிறகு அவருடைய கனவுக்கு அவருடைய கணவர் தான் உறுதுணையாக இருக்கிறார்.
குறையாத தன்னம்பிக்கை
25 வயதாகும் பஞ்சமிக்கு இப்போது மூன்று ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள். மூன்று குழந்தையும் சிசேரியன் செய்து பிறந்திருக்கிறது. ஆனாலும் தனக்கு டான்ஸ் ஆட தான் பிடிக்கும் அந்த திறமை இருக்கிறது அதன் மூலமாக என்னுடைய குடும்பத்தையும் முன்னேற்றுவேன் என்று விடாப்பிடியாக இருக்கும் பஞ்சமிக்கு ஜீ தமிழ் நிகழ்ச்சி முக்கிய உறுதுணையாக இருந்து வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் இவருடைய டான்ஸை பார்த்ததும் இவருக்கு சோசியல் மீடியாவில் அதிகமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர். இந்த நிலையில் தான் கடந்த வாரத்தில் 90ஸ் பாடல்களுக்கு டான்ஸ் ஆடும் ரவுண்டு நடைபெற்றது. அதில் எவர்கிரீன் பாடல்களில் ஒன்றான சூர்யவம்சம் திரைப்படத்தில் இடம் பெற்ற சலக்கு சலக்கு என்ற பாடலுக்கு பஞ்சமியும் நடிகர் கதிரும் டான்ஸ் ஆடி இருந்தார்கள்.
வீடியோ காலில் சரத்குமார்
இந்த டான்ஸை நடிகர் சரத்குமார் வீடியோ காலில் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு பஞ்சமி டான்ஸ் ஆடி முடித்ததும் பஞ்சமியிடம் நீங்களும் உங்களுடைய குழந்தைகள், கணவர் எல்லோரும் நாளைக்கு என்னுடைய வீட்டிற்கு விருந்துக்கு வர வேண்டும் என்று சொல்லி இருந்தார். அப்போது பஞ்சமி கண் கலங்க பேசி இருந்தார்.
பரிதாப நிலை
நான் இதுவரைக்கும் இந்த சூட்டிங்காக 15 நாட்களாக சென்னையில் இருக்கிறேன். எனக்கு இங்கே விதவிதமாக சாப்பாடு கொடுக்கிறார்கள். ஆனால் என்னுடைய வீட்டில் என்னுடைய குழந்தைகள் பழைய கஞ்சி தான் குடித்திருக்கிறார்கள். நான் ஹோட்டலுக்கு வேலைக்கு போயிருக்கிறேன். அங்கு விதவிதமான சாப்பாடு வைத்திருப்பார்கள். ஆனால் அதையெல்லாம் நான் சாப்பிட்டு ருசி பார்த்தது கிடையாது.
பஞ்சமியின் வருத்தம்
என்னுடைய குழந்தைகளுக்கு பிறந்தநாளுக்கு ஒரே ஒரு கேக்கை மட்டும் தான் வாங்கி கொடுத்திருக்கிறேன். நாங்கள் எந்த இடத்திலும் விதவிதமான சாப்பாடு குழந்தைகளுக்கு வாங்கி கொடுத்தது கிடையாது. இப்போது நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன், ஆனால் என்னுடைய ஊரில் இருக்கும் குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுக்க முடியவில்லை என்ற வருத்தம் எனக்கு அதிகமாக இருக்கிறது.
சரத்குமார் வேண்டுகோள்
ஆனால் இப்போ சரத்குமார் சார் எங்க குடும்பத்தோட விருந்துக்கு கூப்பிட்டு இருக்கிறார். எனக்கு இது ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று அழுது கொண்டே பேசி இருந்தார். இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சரத்குமார் வீட்டிற்கு தன்னுடைய குடும்பத்தோடு பஞ்சமி சென்று இருக்கிறார்.
எவர்கிரீன் பாடல்
அப்போது சரத்குமார் பஞ்சமியின் குழந்தைகளோடு குழந்தையாக மாறி விளையாடிக் கொண்டிருக்கிறார். அந்த க்யூட்டான வீடியோ ப்ரோமோவில் காட்டப்படுகிறது. அது போல பஞ்சமியுடன் சேர்ந்து சலக்கு சலக்கு பாடலுக்கும் சரத்குமார் டான்ஸ் ஆடி இருக்கிறார்.
சரத்குமார் செய்த உதவி
கடைசியில் சரத்குமார், உங்களுடைய உழைப்புக்காக என்னுடைய வெகுமதி என்று பஞ்சமியின் அக்கவுண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் அனுப்பி இருக்கிறார். அதுபோல ராதிகா சரத்குமார் என்னுடைய குழந்தைகளுக்காக பொம்மை தோசை சுட்டு தந்தாங்க, எங்களை ரொம்பவும் கவனித்துக் கொண்டாங்க என்று பஞ்சமி அந்த வீடியோவில் எமோஷனலாக பேசியிருக்கிறார்.
-
பாஜகவில் இருந்து விலகலா.. ஆதரவாளர்களுடன் ஆலோசனை குறித்து சரத்குமார் பரபரப்பு விளக்கம் -
ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2!












Click it and Unblock the Notifications