வந்துட்டேன்னு சொல்லு.. நச்சுன்னு இருக்கேன்னு சொல்லு.. கமகமக்கும் "டிடி"
சென்னை: கம்பேக் கொடுத்தால் டிடியைப் போல கொடுக்கவேண்டும் என்று பார்ப்பவர்கள் எல்லாம் புலம்புகிற மாதிரி வேற லெவலில் வந்து அனைவரையும் அசத்திவிட்டார் நம்ம திவ்யதர்ஷினி.
கொஞ்ச நாளைக்கு பிறகு மீண்டும் தொகுப்பாளராக களம் இறங்கியிருக்கும் டிடிக்கு வரவேற்பு அமோகமாக தான் இருக்கிறது.
வயசு ஆனாலும் அழகு மட்டும் கூடிக்கொண்டே போகிறது என்று பார்ப்பவர்கள் எல்லாம் கொஞ்சம் பொறாமை பட்டாலும் என்ன ரகசியம் என்று கேட்பதற்கு மறக்கவில்லை.

கலகலப்பான டிடி
வாயை திறந்தாலே எதிரில் இருப்பவர்கள் எல்லாம் வெட வெடத்துப் போய் விடுவார்கள். அந்த அளவிற்கு ஜாலியாக குறும்பாக பேசி மனதில் இருக்கும் கவலைகளை எல்லாம் மறக்க வைப்பதில் கில்லாடி தான் டிடி என்னும் திவ்யதர்ஷினி. இவருடைய நிகழ்ச்சியை பலரும் தொடர்ந்து பார்ப்பதற்கு அது ஒரு காரணம் தான். தொகுப்பாளர்கள் பலர் இருந்தாலும் டக்கென்று ஞாபகத்திற்கு வருவது டிடியின் முகம் தான். அவருடைய மனதில் எவ்வளவு வலிகளும் வேதனைகளும் இருந்தாலும் கேமரா முன்னாடி வந்து விட்டாலும் சரி அடுத்தவர்களின் முன்னாடியும் சரி தன்னுடைய கவலைகளை வெளிக்காட்டிக் கொள்வதில்லை. இதனாலேயே இவரை பலருக்கும் பிடிக்கும் ஒரு சிலருக்கு இவரை பிடிக்காமல் போனதற்கு இதுவும் ஒரு ரீசன்.

கடின உழைப்பினால் கிடைத்த வெற்றி
என்ன வேணா நினைச்சுட்டு போங்க என்னுடைய வேலையில் மட்டும் தான் எனக்கு கவனம் இருக்கிறது என்று தன்னுடைய வேலையில் கவனமாக இருப்பதால் தான் இவரால் இந்த அளவிற்கு முன்னேறி வர முடிந்திருக்கிறது. இவரை தொகுப்பாளர் ஆகவே பார்த்து வந்த ரசிகர்கள் ஒரு சில திரைப்படங்களில் நடிகையாகவும் பார்த்து இருக்கின்றனர். ஆனால் அதையும் தாண்டி அடிக்கடி மாடலிங் போட்டோக்களையும் எடுத்து குவிப்பார். அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் டுவிட்டரில் மறக்காமல் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அவ்வப்போது கொடுத்துக் கொண்டிருப்பது இவருக்கு மகிழ்ச்சிதான்.

அழகு மட்டும் கூடுதே
இவர் தொகுப்பாளராக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளில் அணியும் ஆடைகளை பார்ப்பதற்காகவே ஒரு கூட்டம் இவரை பின் தொடரும் அந்த அளவிற்கு உடைகளில் தேர்ந்தெடுப்பதில் கவனமாக, அழகாகவும் இருந்து வருகிறார். அடிக்கடி மாடல் உடைகளில் வலம் வந்தாலும் புடவையிலும் பேரழகு தான் என்பதை இப்போது நிரூபித்திருக்கிறார். கொஞ்ச நாட்களாக இவர் எந்த நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்காமல் இருந்து வந்தார். இப்போ மீண்டும் தொகுப்பாளராக காலடி எடுத்து வைத்திருக்கிறார். இதை பார்த்ததும் இவருடைய ரசிகர்கள் வாங்க தலைவி என்று இவருக்கு கம்பளம் விரித்து வரவேற்கின்றனர்.

இந்த சிரிப்பு மட்டும் போதுமே
இவர் நிகழ்ச்சிகளில் மட்டும் பிசி அல்ல சமூக வலைத்தளத்திலும் பிசி தான். ஒவ்வொரு வருடமும் வயது கூடக்கூட இவருக்கு மட்டும் இளமையும் கூடிக்கொண்டே போகிறது. அதற்கான காரணம் என்ன என்று பலர் தெரிந்துகொள்ள துடிக்கின்றனர். ஆனால் இவரோ அதற்கும் தன்னுடைய புன்னகையை மட்டுமே பதிலாக உதிர்த்திருக்கிறார். தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்ட தான் வேற லெவல் வைரலாகி வருகிறது. பல போட்டோக்களை ஒரே நேரத்தில் இவர் அப்லோட் செய்து இருந்தாலும் அனைத்திலும் ஒரே காஸ்ட்யூமில் இருக்கிறார். அதுவும் புடவையில் வேற லெவலில் மெர்சல் பண்ணி விட்டார். இவரைப் பார்த்த ரசிகர்களால் இவருக்கு லைக் போடாமல் இருக்க முடியவில்லையாம். அந்த அளவிற்கு கை துடிக்கிறது என்று தன்னோட உணர்ச்சிகளை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

கவிதைகளுக்கும் பஞ்சமில்லை
ஆனால் இப்படியே அழகால் அனைவரையும் வசியப்படுத்திட்டே இருக்கீங்களே நீங்க தான் பெரிய பியூட்டி என்று இவரைப் பார்த்து ஒரு ரசிகர் கவிதையை பொழிந்து இருக்கிறார். 'உன் விழி வழியே வழிந்தோடும் வெக்கத்தால் என் உயிருக்குள் உண்டான காற்றழுத்தம் உன் இமை கொண்டு நீயும் மறைக்கையில் என்னுயிரும் புயல் காற்றில் சிக்கிய காகிதம் ஆனேன் என்னவளே 'என்று சுட்ட கவிதையையும் ,என்னவளே உன்னை படைத்த அந்த பிரம்மன் என்னிடம் உன்னை இத்தனை அழகாய் செதுக்கி விட்டு செதுக்கிய அவன் உளியை என் கையில் கொடுத்துவிட்டான். இதற்குமேல் இவளை உளியால் செதுக்க முடியாது கல்வியால் செதுக்கு என்று காதல் ரசத்தை புழிஞ்சி இருக்கிறார்.

எப்படிக்கா அழகா இருக்கீங்க
இந்த படங்களைப் பார்த்து விட்டு ரசிகர்களில் ஆண் பெண் பேதமே இல்லாமல் அத்தனை பேரும் டிடியைப் புகழ்ந்து தள்ளிக் கொண்டுள்ளனர். அதில் ஸ்ரீனிஷா ஜெயசீலன் என்பவர் எப்படிக்கா இப்படி அழகா இருக்கீங்க என்று வியந்து போய் கேட்டுள்ளார். அதற்கு டிடியோ, அடடே அழகே வந்து என்னைப் பார்த்து அழகா இருக்கீங்கன்னு கேட்கிறீங்களா என்று கலாய்த்துள்ளார். இருந்தாலும் சும்மா சொல்லக் கூடாது.. டிடி அப்படியே இருக்கிறார். ரொம்ப க்யூட்டாக இருக்கிறார். தைரியமான தன்னம்பிக்கை பெண் என்பதை ஒவ்வொரு நொடியிலும் நிரூபித்தபடி இருக்கிறார்.. பாராட்டலாமே பிரண்ட்ஸ்!
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications