நயன்தாராவுக்கு போட்டியாக வாணி போஜன் எடுத்த முடிவு.. சந்தோஷத்தில் ரசிகர்கள்.. கலக்கல் போட்டோஸ்
சென்னை: பல நாட்களுக்கு பிறகு ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப தெய்வமகள் சீரியல் சத்யா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து அவருடைய ரசிகர்கள் கொஞ்சி குலாவி தாறுமாறாக கமெண்டுகளை போட்டு இன்ஸ்டாகிராம் கலங்க வைத்து வருகிறார்கள். வாணி போஜன் லேட்டஸ்ட் புகைப்படங்கள்தான் தற்போது வைரலாக பரவி வருகிறது.
வாணி போஜன் ஊட்டியில் பிறந்ததாலோ என்னவோ ஆப்பிள் போன்று நாளுக்கு நாள் பளபளப்பை கூட்டி வருகிறார். அதனால்தான் ரசிகர்கள் இவருக்கு சின்னத்திரை நயன்தாரா என்று பட்டப் பெயர் கொடுத்து செல்லமாக அழைத்து வருகின்றனர். இவர் சீரியல்களில் மூலமாக பெரும் ரசிகர்களை கவர்ந்தது போதாது என்று தற்போது திரைப்படங்களிலும் கலக்கி வருகிறார். அதுவுமில்லாமல் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வருகிறார். நாளுக்கு நாள் இவருக்கு ரசிகர்கள் படை போல அதிகரித்து வருகிறார்கள்.

இவர் ஆங்கில இலக்கியம் படித்து முடித்ததும் நடிகையாக காலடி எடுத்து வைப்பதற்கு முன்பாகவே ஒரு ஏர் ஹோஸ்டராக பணியாற்றி இருக்கிறார். அதிலிருந்துதான் ஒரு மாடலாகவும் காலடி எடுத்து வைத்திருக்கிறார். மாடலாக இவர் முதலில் சென்னை சில்க்ஸின் விளம்பரத்தில் தோன்றிய பிறகு தமிழ் ரசிகர்களிடமும் நன்றாக அறிமுகமாகியிருக்கிறார். மாடலிங்கில் இருந்து முதலில் ஒரு திகில் படமான ஆர் ஏரா வில் ஒரு சின்ன ரோலில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் ஜெயா டிவியில் மாயா என்னும் ஒரு சீரியலிலும் நடித்திருக்கிறார்.

சீரியல்களில் வாணி போஜன் காலடி எடுத்து வைத்த பிறகு தான் அவரது வாழ்க்கையில் பெரும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியது. தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலில் சத்யா கேரக்டரில் இவர் நடித்தார் என்று சொல்வதை விட இப்பவரைக்கும் வாழ்ந்து வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். இவருக்கு பெரும் திருப்புமுனையாக இருந்தது இந்த சீரியல்தான்.
தெய்வமகள் சீரியல் மூலமாக பல பெண்களின் முன்மாதிரியாக இவர் மாறிவிட்டார். போல்டான கேரக்டர் இவருக்கு கச்சிதமாக பொருந்தியதால் இந்த சீரியலில் ரசிகர்களும் இவரை சத்யாவாகவே மாற்றி விட்டனர். நடுத்தர வர்க்கத்து பெண்ணின் வாழ்க்கையை மையமாக கொண்டு அந்தப் பெண்ணின் போராட்டங்களை இந்த சீரியல் சொல்லுவதால் அதில் நடித்த இவரது கேரக்டர் பெரும் வரவேற்பை பெற்று விட்டது.

அதுவும் துணிச்சலும் இவருக்கு மேலும் பலமாக அமைய இவருடைய நடிப்பால் ரசிகர்களை தன்வசப்படுத்தி கடைசி வரைக்கும் இந்த சீரியல் டிஆர்பியில் முதலிடத்தில் கொண்டு வந்துவிட்டது. தெய்வமகளை தொடர்ந்து இவர் ஜீ தமிழில் லட்சுமி வந்தாச்சு என்னும் சீரியலில் மூன்று கேரக்டரில் ரசிகர்களை மிரள வைத்திருந்தார்.
லட்சுமி வந்தாச்சு சீரியலும் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுக்கவே இவர் சமூக வலைத்தளங்களையும் தன்வசப்படுத்தி அதிலும் ரசிகர்களை ஈர்க்க தொடங்கிவிட்டார் .சீரியல் நடிகைகளுக்கும் கதாநாயகிகள் ரேஞ்சுக்கு ரசிகர்கள் கூடியது இவருக்குத்தான். நடிகையாக இருந்து அதன்பிறகு ரியாலிட்டி ஷோக்களில் ஜட்ஜ் ஆகவும் மாறிவிட்டார் .அசத்தல் சுட்டிஸ் நிகழ்ச்சிக்கும் நகைச்சுவை ஜூனியர் கிங்ஸ் என்னும் நிகழ்ச்சிக்கும் இவர் ஜட்ஜாக பங்கேற்றிருக்கிறார்.
அதன்பிறகு பல்வேறு திரைப்படங்களிலும் காலடி எடுத்து வைத்த இவருக்கு ஓ மை கடவுளே என்னும் படம் பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. இந்த படத்தில் இவர் மீரா கேரக்டரில் படத்தின் நடிகரை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் ரொம்பவே இம்ப்ரஸ் பண்ணிவிட்டார். பலபேர் வாழ்க்கையில் இருக்கும் கிரஸ் இவராகத்தான் இருந்து கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு பிறகு இவரை பலர் மீரா என்றும் பலர் சத்யா என்றும் அழைத்து வருகின்றனர். ஆனால் இவருடைய பெயர் வாணிபோஜன் என்பதையே பலர் மறந்துவிட்டனர்.

தற்போது என்ன தான் பிஸியாக இருந்தாலும் இன்ஸ்டாகிராமிலும் தன்னுடைய ரசிகர்களுக்காக போஸ்ட் போட்டு ரசிகர்களை பரவசப்படுத்துகிறார். கருப்பு நிற உடையில் எடுத்த போட்டோவில் தேவதை போல ஜொலிக்க அவருடைய ரசிகர்கள் கண் இமைக்க மறந்து கவிதைகளை கொட்டி வருகிறார்கள். அதுவும் பலர் உருகி உருகி சொந்தமாகவே இவருக்காக கவிதைகளை பதித்து வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications