தேவரை சாதித்தலைவர் என்று சொல்வதில் என்ன தவறு? ‘தேசிய தலைவர்’ பட விழாவில் காட்டமாக பேசிய மோகன் ஜி
சென்னை: 'ஊமை விழிகள்' பட இயக்குநர் ஆர். அரவிந்த்ராஜ் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியுள்ள 'தேசியத் தலைவர்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, தொடர் சர்ச்சைகளுடனும், காரசாரமான விவாதங்களுடனும் நடந்தேறியுள்ளது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்தப் படத்தில், ஜே.எம். பஷிர் தேவராக நடித்திருக்கிறார்.
விழாவில் நடிகை கௌதமி, ஆர்.கே. சுரேஷ், இயக்குநர் பேரரசு, ஆர்.பி. உதயகுமார், பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். இதில், தேவரின் வாழ்க்கைப் படம் சர்ச்சையின்றி இருக்காது என்பதை நிரூபிக்கும் வகையில், மேடையிலேயே சில விவாதங்கள் வெடித்தன.

இயக்குநர் மோகன் ஜி-யின் அதிரடி டாக்
விழாவில் பேசிய இயக்குநர் மோகன் ஜி, இந்தப் படம் வெளியான பிறகு, இரண்டு தேவர் ஜெயந்தி விழா நடக்கும் என்று நினைக்கிறேன் எனக் கூறினார். தேவருக்காக ஆகம விதிப்படி கோயில் கட்டி, பழனி முருகனுக்கு விழா எடுப்பதைப் போலத் தெய்வமாக வணங்குகிறார்கள் என்றால், அவர் எப்படி வாழ்ந்திருப்பார் என்று வியந்தார்.
குற்றப்பரம்பரைச் சட்டத்தை உடைத்தது, மீனாட்சி அம்மன் கோயில் நுழைவுப் போராட்டம் என தேவரின் பங்களிப்புகள் அதிகம் என்றும், இதையெல்லாம் எப்படிப் படத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள் எனப் பார்க்க ஆவலுடன் இருப்பதாகவும் மோகன் ஜி தெரிவித்தார்.
மேலும், தேவர் வாழ்க்கையே தைரியமாக உண்மைகளைச் சொன்னதால் சர்ச்சைக்குரியதாகவே இருந்த நிலையில், அவர் வாழ்க்கைப் படம் மட்டும் எப்படி சர்ச்சையின்றி இருக்கும் என்றும் கேள்வி எழுப்பினார்.
புதிய படைப்பு அறிவிப்பு
நடிகர் வேலராம மூர்த்தியிடம் தேவர் வாழ்ந்த காலத்தில் நடந்த நிகழ்வு ஒன்றை கதையாக எழுதித்தரக் கேட்டிருப்பதாகவும், அந்தப் படத்தில் தேவர் கதாபாத்திரம் வரும் என்றும், அதை இயக்கத் தான் தயாராக இருப்பதாகவும் மோகன் ஜி மேடையில் அறிவித்தார்.
தேசத்தின் மீதும், தெய்வீகத்தின் மீதும் ஆழமான நம்பிக்கை கொண்டவர் தேவர் என்றும், விவேகானந்தரை மதுரை மக்களிடம் கொண்டு சேர்த்தவர் என்றும் பேசிய மோகன் ஜி, தேவரை சாதித் தலைவர் எனக் கூறுவதில் என்ன தவறு இருக்கிறது? அன்பைக் கற்றுக்கொடுத்தவர்" என்று ஒரு பஞ்ச்-ஐ வீசினார்.
இளைஞர்களுக்கான அரசியல் பாடம்
தமிழ்நாட்டில் இளைஞர்கள் அரசியல் படுத்தப்படாமல் இருக்கிறார்கள் என ஒரு நடிகரின் அரசியல் கட்சியை குற்றம்சாட்டுகிறார்கள். நீங்கள் அரசியல்படுத்தப்பட வேண்டுமென்றால் இந்தப் படத்தைப் பாருங்கள் என்றும் கூறினார்.
மேடையில் வெடித்த சர்ச்சை
இதே விழாவில் பேசிய நடிகர் ஆர்.கே. சுரேஷ், பாடலாசிரியர் சினேகன் மற்றும் இயக்குநர் ஆர்.பி. உதயகுமார் போன்றோர், "தேவரைச் சாதித் தலைவராகப் பார்க்காதீர்கள்; அவர் எல்லோருக்குமான தலைவர்" என்ற கருத்தை வலியுறுத்திப் பேசினர்.
ஆனால், இந்தப் படத்துக்காக உதவியாக இருந்த ஆராய்ச்சியாளர் நவமணி, மேடையில் இயக்குநர் அரவிந்த்ராஜ் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை வைத்தார். "நான் இந்தப் படத்துக்கு வருவதற்கு முன்னால் இருந்த திரைக்கதையே வேறு. அதை எடுத்திருந்தால் இன்னொரு கலவரம் வந்திருக்கும்" என்று நவமணி பகீர் கிளப்பினார். மேலும், பிரிட்டிஷ் காலத்தில் நேதாஜி இராணுவத்தில் தேவர் பயிற்சி பெற்றது போலவும், மக்களுக்குத் துப்பாக்கியைக் கொடுத்துப் பிரிட்டிஷாரைச் சுடுவது போலவும் காண்பித்தால் அது எப்படி வரலாறாக முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.
நவமணி, "இந்தப் படத்தின் சென்சார் போர்டு சர்டிஃபிகேட்டில், 'பத்திரிகையில் வந்த செய்தியைத் தழுவி உருவாக்கப்பட்ட கற்பனை' என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். இது வரலாறா அல்லது உங்கள் கற்பனைக் கதையா? இது பெரிய மோசடி!" என்று ஆவேசமாகக் குற்றம்சாட்டியதால், மேடையில் இருவருக்கும் வாக்குவாதம் வெடித்தது.
-
இந்த அம்மா கையில் இருக்கும் குழந்தை யார் தெரியுதா? தனுஷ்க்கு ஜோடி! இப்போ உருக்கமான பதிவு -
நடிகர் விவேக் பிரசன்னாவின் சகோதரர் யார் தெரியுமா? 100க்கும் மேற்பட்ட ஹிட் படங்களுக்கு பாடல் எழுதியவர்! நெகிழ்ச்சி கதை -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு -
"முதல்ல பணத்தை எடுத்து வை.." ஹார்முஸை கடக்க சுங்க கட்டணம்.. மாஸ்டர் பிளான் போட்டு தூக்கிய ஈரான்












Click it and Unblock the Notifications