"தேவாவிற்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தமே!" காதல் கோட்டையிலேயே மிஸ் ஆகிடுச்சு!- சகோதரர் உருக்கம்
சென்னை: அறிமுக இயக்குநர் ஜுன் மோசஸ் இயக்கியுள்ள 'பேய் கதை' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், இசையமைப்பாளர் தேவாவின் சகோதரரும், பாடகருமான சபேஷ் கலந்துகொண்டு, தேவாவுக்கு தேசிய விருது கிடைக்காதது குறித்துப் பேசியது, ரசிகர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றது.

பேய் கதை - ஒரு புதிய முயற்சி
படத்தின் விவரங்கள், பேய் கதை' திரைப்படம், ஆகஸ்ட் 29-ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தில், வினோத் நாயகனாக அறிமுகமாகிறார். இவருடன் ஆர்யலட்சுமி, கானா அப்பிலோ, சுகன்யா, ஆஷ்மெலோ, செல்வா, எலிசபெத் சுராஜ், மைக்கேல், சுமந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
தேவாவின் பங்களிப்பு
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட சபேஷ், தேவாவுக்கு தேசிய விருது கிடைக்காதது குறித்துப் பேசினார். தேவாவின் சகோதரர் சபேஷ் பேசும்போது, "தேவா சார் 400 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கிறார். அவருக்கு விருது கிடைக்காதது வருத்தமாக இருக்கிறது. நிறைய நல்ல பாடல்களைக் கொடுத்திருக்கிறார். 'காதல் கோட்டை' படத்திற்கே அவருக்கு தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும்," என்று கூறினார். அதோடு "அண்ணன் வாங்கவில்லை என்றால் என்ன? அப்பாவிற்கு பதில் மகன் ஸ்ரீகாந்த் தேவா வாங்கி இருக்கிறார்," என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
தேவாவின் இசைப்பயணம்
தேவா என்றாலே 'கானா' பாடல்கள் என்று பலரும் சொல்வார்கள். ஆனால் சபேஷ், "ஒரு படத்திற்கு ஒரு கானா பாடல்தான் இருக்கும், மற்றவையெல்லாம் மெலோடி பாடல்கள்தான் இருக்கும்," என்று கூறினார். பொதுவாக இசை என்றாலே நம்முடைய பலருடைய நினைவுக்கு வருவது இளையராஜா தான் இளையராஜா மெட்டுக்கு எப்படி பிரபலமும் அது போலத்தான் அந்த காலத்தில் குத்து கானா பாடலுக்கு பிரபலமானவர் தேவா அவருக்கு இப்ப வரைக்கும் ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர் சமீபத்தில் அவருடைய கருகரு கருப்பாகி பாடல் விஜய் படத்தில் மீண்டும் ரீமேக் செய்யப்பட்ட போது அது பெரிய அளவில் பேசப்பட்டது.
ஆனாலும் சமீபத்தில் தேசிய விருது பலருக்கு அறிவிக்கப்பட்ட போது அதில் தேவாவுடைய பெயர் இல்லையே என்பது பலருடைய வருத்தமாக இருந்த நிலையில் இப்போது அது குறித்து தேவாவின் சகோதரர் கொடுத்த பேட்டியை பலரும் பாராட்டி வருகிறார்கள். தேசிய விருது கிடைக்கவில்லை என்றாலும் அதையும் பாசிட்டிவாக இவர்கள்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று பலர் கூறி வருகிறார்கள். ஏற்கனவே காப்பிரைட் பிரச்சனையில் தேவா பேசியதை பலரால் பாராட்டப்பட்ட போது இப்போது தேசிய விருது பற்றிய தேவாவின் சகோதரர் பேசியதும் பலருடைய கவனத்தை ஈர்த்து இருக்கிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications