இசையமைப்பாளர் தேவாவுக்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கிடைத்த கெளரவம்! மனுஷன் கம்பீரத்தை பாருங்கப்பா!
சென்னை: சிலரது இசை, ஒரு குறிப்பிட்ட தலைமுறையினருக்கு மட்டுமே சொந்தமாக இருக்கும். ஆனால், ஒரு சிலரது இசை மட்டுமே தலைமுறைகளைக் கடந்து, மக்களின் உணர்வுகளுடன் கலந்திருக்கும். அப்படிப்பட்ட இசைக்கலைஞர்களில் ஒருவர் தான் தேனிசைத் தென்றல் தேவா இவருடைய இசை, கானா, மெலடி, கூல் பீட்ஸ் எனப் பலவிதமான ராகங்களில் கலந்து, ரசிகர்களைத் தன் பக்கம் ஈர்த்தது. இப்போது, இவருடைய இசைக்குக் கிடைத்த மிகப் பெரிய கெளரவம், தமிழ் இசை உலகத்திற்கே ஒரு பெருமையான தருணமாக அமைந்திருக்கிறது. சமீபத்தில் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில், அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு, உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஒரு தலைமுறையின் அடையாளம்
தேவா தனது இசைப் பயணத்தை, தனது அண்ணன் சக்ரவர்த்தி மற்றும் சபேஷ் ஆகியோருடன் உதவி இசையமைப்பாளராகத் தொடங்கினார். பிறகு, 1989-ல் சந்தனக்காற்று என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவருடைய இசை மற்ற இசையமைப்பாளர்களின் இசையிலிருந்து மிகவும் தனித்துவமாக இருந்தது. தேவாவின் இசையில் ஒருவிதமான நடை, பீட்ஸ் இருக்கும். அது ரசிகர்களை உடனடியாக ஆட்டம் போட வைக்கும்.
90களில் தமிழ் சினிமாவில் தேவாவின் இசைக்கு ஒரு தனி இடம் இருந்தது. கானா பாடல்கள் என்றால் அது தேவா தான் என்று ரசிகர்கள் பேசத் தொடங்கினர். கருகரு கருப்பாயி, அழகே பிரம்மனிடம், ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசு இருந்தா வாங்கலாம், தஞ்சாவூர் மண் எடுத்து எனப் பல பாடல்கள் இன்றும் ரசிகர்களின் பிளேலிஸ்ட்டில் இருக்கின்றன. கிட்டத்தட்ட 400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள தேவா, தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர்களில் ஒருவர்.
சம்பளம் வாங்காத ஒரு கலைஞன்
தேவாவின் இசையைப் போலவே, அவருடைய மனதும் மிகவும் தூய்மையானது. இசையமைப்பாளர் என்ற ஒரு பெரிய அந்தஸ்தில் இருந்தாலும், எளிமையாகவும், இயல்பாகவும் இருந்தவர். பல இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், தனது இசையால் உதவியிருக்கிறார். சில நேரங்களில், நல்ல கதைக்களத்துடன் வந்த இளம் இயக்குநர்களுக்குச் சம்பளமே வாங்காமல் கூட இசையமைத்துக் கொடுத்திருக்கிறார். ஒரு உண்மையான கலைஞன், பணத்தை விட கலைக்குதான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை அவர் நிரூபித்திருக்கிறார்.
திரைப்படங்களில் மட்டுமல்ல, பல இசைக் கச்சேரிகளிலும், இளம் கலைஞர்களை ஊக்குவித்துள்ளார். தேவா ஒரு மேடையில், என்னுடைய பாடல்களுக்கு நான் காப்பி ரைட் கேட்க மாட்டேன் என்னுடைய பாடலை இப்போதைய தலைமுறையினர்களும் ரசிப்பது எனக்கு கிடைத்த அங்கீகாரமும், வெற்றியும் தான் என்று கூறியது, பலரின் மனதையும் கவர்ந்தது. ஏனெனில், ஒரு கலைஞனுக்குப் பணம் என்பது முக்கியம் என்றாலும், கலைக்கு முன்னுரிமை கொடுக்கும் அவரது குணம் மிகவும் பாராட்டப்பட வேண்டியது.
ஆஸ்திரேலியாவில் கிடைத்த கெளரவம்
சமீபத்தில் தேவா ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது, அவருக்குக் கிடைத்த கெளரவம் தமிழ் சினிமா வரலாற்றிலேயே ஒரு பொன்னான அத்தியாயமாக அமைந்திருக்கிறது. ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்குச் சென்ற அவரை, அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிகவும் உயர்ந்த மரியாதையுடன் வரவேற்றுள்ளனர். நாடாளுமன்ற சபாநாயகரின் இருக்கையில் அவரை அமரவைத்து, தமிழ் கலாச்சாரத்தின் பாரம்பரிய சின்னமான செங்கோல் கொடுத்துக் கெளரவித்துள்ளனர்.
இது தேவாவுக்குக் கிடைத்த கெளரவம் மட்டுமல்ல, தமிழ் இசைக்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும், உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கும் கிடைத்த மிகப் பெரிய பெருமை. தேவா அவர்கள் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்திருக்கும் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
பிரபலங்களின் பாராட்டு
தேவாவுக்கு ஆஸ்திரேலியாவில் கிடைத்த இந்த கெளரவத்தைக் கேள்விப்பட்ட தமிழ்த் திரைத்துறையைச் சேர்ந்த இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், நடிகர்கள் எனப் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அதுபோல, சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் அவருடைய பாடல்களைப் பகிர்ந்து, "தேவா அண்ணனுக்கு கிடைத்த கெளரவம், தமிழ் இசைக்கே கிடைத்த கெளரவம்" என்று பெருமையாகப் பதிவிட்டு வருகின்றனர். இசையின் அழகுக்கு எந்த எல்லையும் இல்லை என்பதை, தேனிசைத் தென்றல் தேவாவின் இந்த அங்கீகாரம் நிரூபித்திருக்கிறது.
இது குறித்து தேவா கூறியதாவது: "ஆஸ்திரேலிய தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மேம்பாட்டு மையம் எனக்களித்த மரியாதை குறித்து உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். எனக்கும் எனது இசைக்கலைஞர்கள் குழுவிற்கும் இவ்வளவு அரிய கௌரவத்தை வழங்கியதற்காக அன்புள்ள திரு. லாரன்ஸ் அண்ணாதுரை மற்றும் ஆஸ்திரேலிய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
செப்டம்பர் 24ம் தேதி மாலையில், ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் மிகுந்த மரியாதையுடன் வரவேற்கப்பட்டு, அவைத்தலைவர் இருக்கையில் அமர வாய்ப்பு அளிக்கப்பட்டு, மரியாதைக்குரிய செங்கோல் வழங்கப்பட்டது. இந்த தருணம் எனக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் இசை மற்றும் கலாச்சாரத்தை பரப்பி வரும் ஒவ்வொரு தெற்காசிய கலைஞருக்கும் இது சொந்தம்.
எனது அன்பான ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு இந்த பெருமைமிகு தருணத்தில் மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது 36 ஆண்டுகால இசைப் பயணத்தில் உங்கள் அன்பும் ஆதரவும் எனது மிகப்பெரிய பலமாக இருந்து வருகிறது. இந்த அங்கீகாரத்தை உங்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்." என்று மகிழ்ச்சியுடன் கூறி இருக்கிறார்.
-
நடிகை பானுப்பிரியாவின் நிலைமை இதுதான்..! வெளியே தெரியாத ரகசியங்களை உடைத்த குஷ்பூ -
மரியான் பட நடிகர் சலீம் குமாரின் மறைவால் உருகிய 'கருப்பு' நடிகை சிவதா.. கலங்க வைத்த பதிவு -
ஆண் பாவம் பாண்டியனின் சோகமான மறுபக்கம்.. பிரபல நடிகரை வீழ்த்திய "பந்தய குதிரை".. நடந்தது என்ன -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications