சூப்பர் சிங்கரில் அசம்பாவிதம்.. பாடும் போதே அழுத போட்டியாளர்கள்.. புஷ்பவனம் குப்புசாமி சொன்ன வார்த்தை
சென்னை: விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் புதிய பரிணாமத்தோடு பக்தி சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் சில போட்டியாளர்கள் பாடும் போது கதறி அழுதிருக்கிறார்கள். அதிலும் பாடகி தேவகோட்டை அபிராமி முருகன் பாடல் பாடிக்கொண்டிருக்கும் போது பாதியில் பாடலை நிறுத்தி அழுது இருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருவதால் புதியது புதியதாக தொலைக்காட்சியில் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் தொடங்கப்படுகிறது. அதிலும் பாடல் நிகழ்ச்சிக்கு சொல்லவே வேண்டாம் ரசிகர்கள் அழுகாச்சி சீரியலுக்கு மாற்றாக இதுபோன்ற பாடல் நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதிலும் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

அதனாலேயே இந்த நிகழ்ச்சியில் சீனியர் மற்றும் ஜூனியர் என்று இரண்டு பிரிவாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் பக்தி சூப்பர் சிங்கர் என்று தொடங்கப்பட்டிருக்கிறது. இதில் ஏற்கனவே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற டைட்டில் வின்னர்களும் பிற போட்டியாளர்களும் கலந்து கொண்டு தங்களுடைய திறமையை வெளிகாட்டி வருகிறார்கள். அந்த வரிசையில் இந்த வாரத்தில் முருகன் பாடல்கள் ரவுண்டு நடைபெறுகிறது. அதில் முருகனின் பக்தி பாடல்கள் பாடப்படுகிறது.
கடந்த வாரத்தில் தேவகோட்டை அபிராமி பாடிய கருப்பசாமி பாடலை கேட்டு நடுவர் புஷ்பவனம் குப்புசாமி அருள் வந்து சாமி ஆடி இருந்தார். அது இணையத்தில் அதிகமாக ட்ரோல் ஆகி வருகிறது. அதுபோல இப்போது இன்னொரு சம்பவமும் நடந்து இருக்கிறது அதாவது அதே பாடகியான தேவகோட்டை அபிராமி "மருதமலை முருகா" என்ற பாடலை பாடிக்கொண்டிருந்தார். ஆனால் திடீரென என்ன நடந்தது என்று தெரியவில்லை அவரால் ஒரு கட்டத்திற்கு மேல் பாடல் பாட முடியவில்லை. அதனால் பாடலை நிறுத்தி அழுதுவிட்டார்.
அப்போது புஷ்பவனம் குப்புசாமி நீ பாடு பாடு என்று உற்சாகமூட்டுகிறார். ஆனாலும் அபிராமியால் தொடர்ந்து பாட முடியவில்லை. இதுகுறித்து இந்த வார எபிசோட்டில் தான் என்ன நடந்தது என்று தெரிய வரும். அதுபோல இன்னும் சில போட்டியாளர்களும் முருகன் பெருமையை பாடி அனைவரையும் வியக்க வைத்து இருக்கிறார்கள். அதில் ஒரு பாடகி முருகன் பாடலை பாடியதை கேட்டு அங்கிருந்த நடுவர்கள் எல்லோரும் பாராட்டுகின்றனர்.

அப்போது அந்த பாடகி பேசும் போது, எனக்கு பாடுவதற்கு தான் ரொம்பவும் பிடிக்கும். அதனால் நிகழ்ச்சிகளில் பாடுவதற்கு வாய்ப்பு கேட்டு பல இடங்களுக்கு இருக்கிறேன். ஆனால் எதுவும் எனக்கு கிடைக்கவில்லை. என்னை அங்கிருந்து துரத்தி விட்டு இருக்கிறார்கள். எனக்கு எப்போதுமே முருகன் தான் துணை. இன்று அவருடைய ரவுண்டு என்பதால் சந்தோஷமாக பாடினேன். எனக்கு அவர் மட்டும்தான் துணையாக இருக்கிறார் என்று கண் கலங்கி அழுதார். இந்த ப்ரோமோவும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த செயலால் ரசிகர்கள் மனமே குளிர்ந்து போச்சு! ரோகிணிக்கு பேரடி.. சந்தோஷத்தில் முத்து -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications