Devayani: நானும் குறைப்பிரசவ குழந்தை தான்! சரிகமப இனியா உணர்ச்சிப்பூர்வமான பதிவு! தேவயானி செய்த செயல்
சென்னை: தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகை தேவயானியின் மகள் இனியா ஜீ தமிழில் வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்த சரிகமப சீனியர் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டார். தன் திறமையால் தேவயானியின் மகள் என்ற அடையாளத்தைக் கடந்து தன்னுடைய நிஜப் பெயரிலேயே ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

ஆதரவை பெற்ற இனியா
சரிகமப நிகழ்ச்சியில் இனியாவுக்கு அதிகமான வரவேற்பும், ஆதரவும் கிடைத்தது. குறிப்பாக, இவரது பாடும் திறமை, நிகழ்ச்சியின் பல கட்டங்களில் நடுவர்களின் பாராட்டை பெற்றது. இனியா டைட்டில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதி போட்டிக்கு இவர் தேர்வாகவில்லை என்பது பலருக்கும் வருத்தம்தான்.
குழந்தைகளுக்காக நிகழ்ச்சி
சரிகமப நிகழ்ச்சி முடிந்த அடுத்த நாளே, இனியா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஒரு உணர்ச்சிப்பூர்வமான பதிவை பதிவிட்டுள்ளார். இனியா, சென்னையில் உள்ள மெஹ்தா குழந்தைகள் மருத்துவமனை நடத்திய 'எர்லி பர்ட்ஸ் 25 (Early Birds 25)' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக பெருமைப்படுவதாக தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சி குறைப்பிரசவத்தில் புதிதாக பிறந்த குழந்தைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டது.
இனியாவின் பின்னணி
அப்போது, தான் பிறந்த போது நடந்த விஷயத்தையும் இனியா மனம் திறந்துள்ளார். அவர், தான் ஒரு குறைப்பிரசவ குழந்தையாக தான் தன் பயணத்தைத் தொடங்கினேன் என்று குறிப்பிட்டுள்ளார். தன்னை போன்ற சின்னஞ்சிறு போராளிகளுக்கு (குறைப்பிரசவ குழந்தைகளுக்கு) உதவி செய்ய வாய்ப்பு கிடைத்ததை குறித்து மகிழ்ச்சியுடனும், பணிவுடனும் உணர்வதாக கூறியுள்ளார்.
மருத்துவமனைக்கு நன்றி
இனியாவை வெற்றி பயணத்தில் உருவாக்கியதில், அவரது பெற்றோரின் சப்போர்ட் மிகவும் பெரியது. அவர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இனியாவின் குடும்பத்துக்கு பெரிய தூணாக இருந்ததற்கும், உதவி செய்ததற்கும் மருத்துவர் லட்சுமிக்கும் மற்றும் மெஹ்தா குடும்பத்துக்கும் இனியா என்றும் நன்றி உடையவராக இருப்பதாக பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் உட்பட பல போராளிகளுக்கு உதவும் இந்தச் சமூக நிகழ்வு பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. இந்த உணர்ச்சிப்பூர்வப் பதிவை உலக குறைப்பிரசவத் தினம் என்ற குறியீட்டுடன் இனியா பதிவிட்டுள்ளார். இனியாவின் இந்தத் தனிப்பட்ட பின்னணியை அறிந்த ரசிகர்கள் அவரை மேலும் அதிகமாகப் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் இனியா பாடல் பாடி அங்கிருந்த குழந்தைகளை ஊக்குவித்திருக்கிறார். அதுபோல இந்த நிகழ்ச்சியில் இனியா பாடும் போது தேவயானி சந்தோஷமாக அதை வீடியோ எடுத்திருக்கிறார். அந்த புகைப்படங்களையும் இனியா சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார். அத்துடன் இனியாவின் சகோதரியும் தேவயானியின் இரண்டாவது மகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications