"அந்த”நடிகருக்காக ரஜினி, விஜய், அஜித்தை வம்பு இழுத்த தேவயானியின் "கணவர்”.. காரணம் இதுதானாம்?
சென்னை: இயக்குனர் ராஜகுமாரன் பிரபல நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித் பற்றி பேட்டி ஒன்றில் சொன்ன வார்த்தை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நடிகை தேவயானியின் கணவர் ஆன ராஜகுமாரன் சினிமாவில் அதிகமாக உழைக்கும் நடிகர் என்றால் அது நடிகர் சரத்குமார் ஆகத்தான் இருக்க முடியும் என்று கூறியிருக்கிறார்.
அதோடு அதற்கான காரணம் என்ன என்பது பற்றியும் பேட்டியில் பேசி இருக்கிறார் அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒரு சில நடிகர்கள் முன்னணி நடிகர்களாக ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விடுகின்றனர். அதுபோல அந்த காலகட்டத்தில் நடிகர் எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி இருந்தனர். அவர்களை தொடர்ந்து கமல் மற்றும்
ரஜினி இருந்தனர். அவர்களை தொடர்ந்து விஜய், அஜித் என வரிசை கட்டிக் கொண்டிருக்கின்றனர்.

அதுபோல பிளாக் அண்ட் வொயிட் காலத்தில் தொடங்கி இப்ப வரைக்கும் மார்க்கெட் குறையாத நடிகராக ரஜினி மற்றும் கமல் இருக்கின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் ராஜகுமாரன் தனது பேட்டியில் அவர்கள் எல்லாம் பெரிய நடிகர்களே கிடையாது என்பது போல பேசி இருக்கிறார்.
நடிகர் ராஜகுமாரன் நடிகை தேவயானியின் காதல் கணவர் தான். ஒரு சில குடும்ப திரைப்படங்களை எடுத்து சூப்பர் டூப்பராக வெற்றி அடைய வைத்து ரசிகர்களின் மத்தியில் பரீட்சையமானவர். ஆனால் சமீப காலமாக எந்த திரைப்படங்களையும் இயக்காமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியில் பேசும் போது தமிழ் சினிமாவில் சரத்குமாருக்கு இணையாக எந்த நடிகரும் கிடையாது என்று பேசி இருக்கிறார்.
அதோடு இல்லாமல் வாரிசு படத்தில் கூட நடிகர் சரத்குமார் தான் சரியாக நடித்திருந்தார். வாரிசு திரைப்படத்தில் விஜய் ஒன்னும் அந்த அளவிற்கு எல்லாம் நடிக்கவில்லை. ஒரு தந்தையிடம் மகன் இப்படியா திமிராக நடந்து கொள்ள வேண்டும்? நிஜத்தில் அவருக்கு தந்தையிடம் இருக்கும் மனநிலையை சினிமாவில் காட்ட வேண்டாம். அதை அவருடைய வீட்டுக்குள் காட்டிக் கொள்ளலாம்.
இந்த சினிமாவை பார்த்து பல பேர் தவறான முன்னுதாரணத்தை எடுத்து கொள்ள கூடும் என்பது கூட விஜய்க்கு தெரியாதா? விஜய் இப்படி தன்னுடைய அப்பா முன்பு டான்ஸ் ஆடி அவமானப்படுத்தும் விதமாக பேசுற மாதிரி அந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார். நான் சரத்குமார் வச்சி சூரிய வம்சம் திரைப்படத்தை எடுத்து வைத்தேன். அந்த திரைப்படத்தில் சரத்குமார் சொல்வார், "நான் சொத்தாக நினைக்கிற தெய்வமே வீட்டுக்குள்ள தான் இருக்குன்னு" அதுதான் ஒரு நல்ல உதாரணம்.
சரத்குமார் நடிப்பு மட்டுமல்ல அவருடைய கேரக்டருமே தன்னை நம்பி வரும் சின்ன நடிகரையும் கூட அதிக முக்கியத்துவம் கொடுப்பார். விண்ணுக்கும் மண்ணுக்கும் திரைப்படத்தில் அவர் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கினார். ஆனால் என்னிடம் ஆறு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குன விக்ரமிற்கு மாலை போட்டு வாங்க இந்த படத்துல நடிங்க நான் உங்களுக்கு சப்போர்ட் பண்றேன்னு வரவேற்றார். அந்த மனசு வேற யாருக்காவது வருமா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இத்தனைக்கும் விண்ணுக்கும் மண்ணுக்கும் திரைப்படம் எடுக்கும்போது தேவயானிக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுப்பதாக நடிகர் சரத்குமாருக்கும் இயக்குனர் ராஜகுமாரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சூட்டிங் ஸ்பாட்டில் சண்டை ஏற்பட்டது என்ற தகவல்கள் கூட சமீபத்தில் பரவி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications