“பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்” பாடிய இனியா.. நடுவர்கள் கொடுத்த கமெண்ட், கண்கலங்கி அழுத தேவயானி
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப சீனியர் சீசன் 5 நிகழ்ச்சியில் நடிகை தேவயானியின் மகளான இனியாவும் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். அவர் இந்த வாரத்தில் "பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்" என்ற பாடலை பாட, அதற்கு அங்கு இருந்த நடுவர்கள் பாராட்டி இருக்கிறார்கள். மகளை பற்றி நடுவர்கள் சொன்ன வார்த்தையை கேட்டு தேவயானி கண்கலங்கி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாக சினிமா பிரபலங்களின் வீட்டு குழந்தைகள் அவர்களை போலவே சினிமாவில் அறிமுகமாகும் போது பல எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் இருக்கும். ஆனால் அது சில நேரங்களில் அந்த குழந்தைகளுக்கு வரமாக இருக்கும், சில நேரங்களில் அதுவே அவர்களுக்கு பிரச்சனையாகவும் இருக்கிறது. சினிமா துறையில் பல பிரபலங்களின் வாரிசுகள் பெற்றோர்களை போலவே ஜொலிக்க முடியாமல் இப்போதும் தவித்துக் கொண்டிருப்பதை பார்த்திருக்கிறோம்.

சரிகமப சீனியர் 5 போட்டியாளர்கள்
ஆனால் நடிகை தேவயானியின் மகள் தன்னுடைய அம்மாவை போல சினிமாவில் அறிமுகமாகாமல் தன்னுடைய திறமையால் பாடகியாக வேண்டும் என்று ஜீ தமிழில் சரிகமப சீசன் 5 நிகழ்ச்சிகள் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். தன்னுடைய முயற்சியால் தான் வெற்றி பெற வேண்டும் இனியா எடுத்திருக்கும் முயற்சியை ரசிகர்கள் மட்டுமல்லாமல் நடிகை ராதிகா உட்பட பல சினிமா பிரபலங்களும் பாராட்டி இருக்கிறார்கள்.
சரிகமப நிகழ்ச்சி
சரிகமப நிகழ்ச்சியில் சாமானியர்களையும் சாதனையாளர்களாக உயர்த்துவதற்காக முயற்சிகள் எடுத்து வருகிறது. இதில் சாதாரண குடும்பத்தை சார்ந்தவர் போல இனியாவும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். அதுபோல அங்கிருக்கும் போட்டியாளர்களின் உறவினர்கள் போல நடிகை தேவயானியும் தன்னுடைய மகளுக்காக அந்த நிகழ்ச்சியில் காத்துக் கொண்டிருந்தார்.
நடிகை தேவயானியின் மகள்
நிகழ்ச்சியின் ஆடிஷனில் தேவயானியின் மகள் இளையராஜாவின் மகளான பவதாரணி பாடிய மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலை பாடி அசத்தியிருந்தார். அதுமட்டுமில்லாமல் அந்த பாடல் தேவயானியின் படத்தில் இடம் பெற்றதுதான். இனியாவின் பாடலை நடுவர்கள் பாராட்டி அவரை செலக்ட் செய்து இருந்தனர். அடுத்ததாக வரும் வாரத்தில் "பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன்" என்ற பாடலை இனியா பாடி இருக்கிறார்.
இயக்குனர் லிங்குசாமி பாராட்டு
அதற்கு அங்கிருந்த நடுவர்கள் இனியாவை பாராட்டி இருக்கிறார்கள். அப்போது இனியாவை சப்போர்ட் செய்வதற்காக இயக்குனர் லிங்குசாமி இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வந்திருக்கிறார். அவரைப் பார்த்ததும் இனியா லிங்குசாமியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி இருந்தார். ஏற்கனவே முதல் முறை மேடையில் தேவயானி பேசும் போதும் தன்னுடைய மகள் அவளுடைய திறமையால் இந்த நிகழ்ச்சியில் முன்னுக்கு வரவேண்டும் என்று ஆசைப்பட்டதால் தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கூட்டிக்கொண்டு வந்து என்று கூறியிருந்தார்.
ரசிகர்கள் பாராட்டு
இதுபோல இந்த வாரமும் தேவயானி பேசும் போது, "ஆடியன்ஸ்க்கு மத்தியில் எந்த ஒரு சப்போட்டும் இல்லாமல் நான் ஜெயிக்க வேண்டும் என்று இனியா சொன்னதால் தான் நான் ஜெயிக்கிறேன்" என்று நினைக்கிறேன் என தேவயானி சொல்ல இயக்குனர் லிங்குசாமியும் இனியாவை பாராட்டி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இந்த ப்ரோமோவிற்கு கீழே ரசிகர்கள் பலரும் இனியா பாடலை பாராட்டி வருகிறார்கள். முதல் வாரத்திலும் அம்மாவை போலவே இந்த நிகழ்ச்சியில் பாவாடைத்தவணியில் கலந்து கொண்டார். அதேபோல இரண்டாவது வாரத்தில் இனியா பாவாடை தாவணியோடு வந்ததையும் பலர் பாராட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications