தேவயானி போல அதே எளிமை.. சரிகமப செட்டில் மகள் இனியா செய்த செயல்.. வியக்க வைக்கும் வீடியோ
சென்னை: நடிகை தேவயானியின் மகளான இனியா சரிகமப நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். அம்மாவை போலவே ஒவ்வொரு வாரமும் பாரம்பரியமான உடையுடன் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். இதை பலரும் பாராட்டி வருகின்றனர். அதுபோல ஷூட்டிங் இல்லாத நேரத்தில் அங்கிருக்கும் சக போட்டியாளர்களுடன் இனியா செய்த செயலை அங்கிருந்த போட்டியாளர் ஒருவர் வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகை தேவயானி 90ஸ் காலகட்டத்தில் சினிமாவில் அறிமுகமாகி இப்போ வரைக்கும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். ஆரம்பமான முதல் திரைப்படமான "தொட்டா சிணுங்கி"யில் மாடர்ன் உடையில் நடித்திருந்தார். ஆனால் அது எனக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லை என்று அந்த திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து எல்லா திரைப்படங்களிலும் ஹோம்லியாகவே நடித்துக் கொண்டிருக்கிறார். ஹோமிலியான நடிகைகளையும் ரசிகர்கள் விரும்புவார்கள் என்று இவர் சாதித்துக் காட்டியிருக்கிறார்.

காதல் திருமணம்
தான் சினிமாவில் உச்சமான நடிகை ஆக இருக்கும்போது இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரண்டு வீட்டிலும் இவர்களுடைய திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த போது வீட்டு காம்பௌண்ட் சுவர் ஏறி குதித்து திருமணம் செய்த தேவயானி இப்போது வரைக்கும் தன்னுடைய திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டு போய் கொண்டு இருக்கிறார். ராஜகுமாரன் தேவயானி தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். அதில் மூத்த மகள் இனியா சினிமாவில் சேர வேண்டும் என்பதற்காக பட்டப்படிப்புகளை முடித்து இருக்கிறார்.
இசையில் ஆர்வம்
அதோடு இசையிலும் அதிக ஆர்வம் உண்டு என்பதால் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப சீனியர் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். இது ஆரம்பத்தில் அனைவராலும் வியப்பாக பேசப்பட்டது. தேவயானி சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் நிலையில் அவர் தன்னுடைய மகளுக்கு வாய்ப்பு வேண்டும் என்றால் எந்த இயக்குனரிடமும் வாய்ப்பு கேட்டிருக்கலாம். ஆனால் அவர் தன்னுடைய மகள் அவருடைய சொந்த முயற்சியால் வெற்றி பெற வேண்டும் என்று எடுத்திருக்க முயற்சியை பலரும் பாராட்டி வந்தனர்.
தேவயானியின் மகள்
அது குறித்து தேவயானி பேசும் போது, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தது இனியா தான். இந்த நிகழ்ச்சியை நாங்கள் எங்கள் வீட்டில் எல்லாருமே சேர்ந்து பார்ப்போம். அப்போது மக்கள் முன்பு என்னுடைய திறமையால் நான் பிரபலமாக வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறேன் என்று இனியா சொன்னதால்தான் இந்த நிகழ்ச்சியில் அவளை கலந்து கொள்ள வைத்தோம் என்று தேவயானி சொல்லியிருந்தார்.
அம்மாவை போல எளிமை
"குயில் போல பொண்ணு ஒன்னு" என்ற பாடலை இனியா முதல் முறையாக பாடியிருந்தார். அவருடைய குரல் அனைவராலும் கவரப்பட்டது. அதை தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் தன்னுடைய இனிமையான குரலால் மக்கள் மனதில் இடம் பிடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் பாவாடை தாவணியிலும், லெகங்கா போன்ற உடையிலேயே கலந்துகொண்டு வருகிறார். இது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
இனியாவின் வீடியோ
அம்மாவை போலவே இனியாவும் எளிமையாக இருக்கிறாரே என்று பலரும் கூறி வருகிறார்கள். அதேபோல இப்போது இன்னொரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. அதாவது சூட்டிங் இல்லாத நேரத்தில் தன்னுடைய சக போட்டியாளர்களான சரிகமப பாடகர்களுடன் கிட்டார் வாசித்தப்படியே பாட்டு பாடி இருக்கிறார். அந்த வீடியோவை சரிகமப போட்டியாளர் ஒருவர் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இது இணையத்தில் அதிகமான பாராட்டுகளை பெற்று வருகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications