சின்ன வயதில் அப்படி நடித்தது தவறுதான்! அந்த கேரக்டர் என் வாழ்க்கையே மாற்றிவிட்டது! நடிகை தேவிப்பிரியா ஆதங்கம்!
சென்னை : தமிழ் சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வரும் தேவிப்பிரியா, சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், தனது திரைவாழ்க்கை குறித்த ஆதங்கத்தை மனம் திறந்து வெளிப்படுத்தியுள்ளார். சின்ன வயதிலேயே கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் நடித்ததுதான் தனக்கு சினிமாவில் பெரிய வாய்ப்புகள் கிடைக்காமல் போனதற்குக் காரணம் என்று அவர் வருத்தத்துடன் கூறியுள்ளார். இந்தப் பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தேவிப்பிரியாவின் ஆதங்கம்
தேவிப்பிரியா தனது பேட்டியில், "நான் சின்ன வயதிலேயே சின்னத்திரையில், அதாவது சீரியல்களில் நடிக்கத் தொடங்கிவிட்டேன். இதனால் எனக்குச் சினிமாவில் பெரிய வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டது. என்னுடன் சீரியலில் நடித்துக் கொண்டிருந்த நடிகை தேவதர்ஷினி போன்றோரெல்லாம் கதை தேர்வு செய்து நடித்தார்கள். அதனால் அவர்கள் இப்போதும் சினிமாவில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் அந்த நேரத்தில் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் நடித்துவிட்டேன். அதனால் எனக்குச் சரியான வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டது," என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார்.
மேலும், "நான் இப்போதும் சீரியல் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தாலும், எனக்குக் கதாநாயகியாக நடிக்க முடியவில்லை என்ற வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. நான் சின்ன வயதில் வந்த வாய்ப்புகளில் எல்லாம் நடித்தது தவறு என்று இப்போதுதான் எனக்குப் புரிந்தது," எனத் தனது கடந்த காலத் தேர்வுகளைப் பற்றி ஆதங்கத்துடன் பேசியிருந்தார். தேவிப்பிரியாவின் இந்த நேர்மையான பேச்சு, திரைத்துறையில் சரியான திட்டமிடலின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது.
தேவிப்பிரியா - சில முக்கியப் படைப்புகள்
தேவிப்பிரியா சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் தனது முத்திரையைப் பதித்தவர். வாலி' (1999): இந்தப் படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். அதில் வில்லன் அண்ணன் ஆபீசுக்கு தேவிப்பிரியா ஒரு நேர்காணலுக்காகச் செல்வார். அங்கு அவருக்கு வேலை கிடைக்காததால், அஜித்தைப் பார்த்து வாயசைத்துத் திட்டுவார். ஆனால் அஜித்தோ, அவரது உதடு அசைவதைக் கொண்டு, அவர் என்ன திட்டுகிறார் என்பதைக் கண்டுபிடித்து விடுவார். இது 'வாலி' படத்தின் மறக்க முடியாத காட்சிகளில் ஒன்று. இதில் தேவிப்பிரியாவின் கதாபாத்திரம் சிறியதாக இருந்தாலும், அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அதற்குப் பிறகு, 'காக்க காக்க','காதல் கொண்டேன்','காதல்', 'பெருசு', 'விருமாண்டி' (குணச்சித்திரப் பாத்திரம்)
முக்கியத் தொலைக்காட்சித் தொடர்கள்
தேவிப்பிரியா, சின்னத்திரையில் ஒரு பிரபலமான முகம். பல வருடங்களாகப் பல்வேறு தொடர்களில் நடித்து வருகிறார். நடிகை ராதிகா எடுக்கும் பல சீரியல்களில் தேவிப்பிரியா கண்டிப்பாக இடம் பிடித்திருப்பார் இப்போது கூட சன் டிவி விஜய் டிவி ஜீ தமிழ் என பல சேனல்களிலும் ஒளிபரப்பாகும் பல தொடர்களில் தேவிப்பிரியா நடித்து வருகிறார். அவரது கம்பீரமான குரல் மற்றும் வில்லி கதாபாத்திரங்களுக்குப் பேர் போனவர் இவர்.
தேவிப்பிரியாவின் இந்த வெளிப்படையான பேட்டி, திரைத்துறையில் கிடைக்கும் வாய்ப்புகளை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்பது குறித்து இளம் கலைஞர்களுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது. கதாநாயகியாகும் கனவு நிறைவேறவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், தனது நடிப்பால் தொடர்ந்து ரசிகர்களைக் கவர்ந்து வரும் தேவிப்பிரியா, தனது தனித்துவமான பாணியால் சின்னத்திரையில் ஒரு நிலையான இடத்தைப் பிடித்துள்ளார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications