எல்லாம் சொல்லி தான் அனுப்பினோம் ஆனால் இப்படி சொதப்பிடிச்சி.. தனலட்சுமி அம்மாவின் வேதனை
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கும் தனலட்சுமி பற்றி அவருடைய அம்மா பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றியும் அதில் எப்படி எல்லாம் பேச வேண்டும் என்று சொல்லி அனுப்பியும் இப்படி செய்து விட்டார் என்று தனலட்சுமியின் அம்மா அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.

இந்த முறை புது முயற்சி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் ஆறாவது நிகழ்ச்சியில் முதல் முறையாக மக்களின் பிரதிநிதியாக டிக் டாக் பிரபலமான தனலட்சுமி கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 21 போட்டியாளர்கள் அறிமுகமானார்கள் தற்போது பதினாறு போட்டியாளர்கள் இருக்கின்றனர். இதில் பலதரப்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தாலும், முதல் முறையாக மக்களிலிருந்து ஒருவராக தனலட்சுமி கலந்து கொள்ளப்பட்டார். அதனாலே அவர் மீது ஆரம்பத்தில் இருந்து ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

விளையாட்டால் வந்த வினை
முதல் இரண்டு வாரங்கள் அதிகமாக சண்டை இட்டு வந்தாலும் தனலட்சுமி தரப்பிலும் நியாயம் இருக்கிறது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் கடந்த வாரம் ரசிகர்கள் பலரும் தனலட்சுமியை திட்டி வருகின்றனர் .பேக்கரி டாஸ்க்கில் தனலட்சுமி விக்ரமன் மற்றும் மணிகண்டனோடு சண்டையிட்டது அனாவசியமானது என்றும் சுயநலமாக இருக்கிறார் என்றும் பலர் கருத்து தெரிவித்திருந்தனர். அதே நேரத்தில் பேக்கரி டாஸ்க்கில் தனலட்சுமி விதிமீறல்களை கடைபிடித்து இருக்கிறார் என்று நேற்று எபிசோடில் கமல் அவரை கண்டித்து தண்டனையும் கொடுத்திருக்கிறார்.

வதந்திகளுக்கு விளக்கம்
இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் அதிகமானோர் தனலட்சுமியை திட்டி கருத்து தெரிவித்து வருவதால் அவருடைய அம்மா வேதனையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் அதில் பல தகவல்களை குறிப்பிட்டு இருக்கிறார். குறிப்பாக தனலட்சுமி பிக் பாஸ் கதை சொல்லும் டாஸ்க்கில் பொய் சொல்லிவிட்டார் என்றும் அவருடைய அப்பாவை பற்றியும் பொய் சொன்னார், அது மட்டுமல்லாமல் நகை அடகு வைத்து மேக்கப் பொருள்களை வாங்கிக் கொண்டு தான் பிக் பாஸ் வந்தார் என்று சொன்னது எல்லாம் பொய் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் அது எல்லாம் உண்மைதான். தனலட்சுமியின் அப்பா சிறு வயதில் எங்களை விட்டு பிரிந்து விட்டார் .அப்போது நான் தான் குடும்பத்தை கவனித்து குழந்தைகளை படிக்க வைத்தேன். தற்போது அவர் எங்களோடு மீண்டும் வந்து விட்டார். ஆனால் தனலட்சுமி எந்த இடத்திலும் என்னுடைய தந்தை இல்லை என்று சொல்லவில்லை. என்னுடைய அம்மா தான் எல்லாமே பார்த்துக்கொண்டார் என்று தான் கூறினார் என்று கூறியிருக்கிறார்.

இப்படிப் பேச வேண்டாம்
அதுமட்டுமல்லாமல் இப்போது நாங்கள் கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறோம். எங்களைப் பற்றி பலர் வதந்திகளை பரப்பி வருகிறார்கள். இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு வரைக்கும் நாங்கள் நன்றாக வசதியாக தான் இருந்தோம் ஆனால் துணி கடை நிறுவனத்தில் எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் காரணமாக நாங்கள் இப்போது சுமார் 80 லட்சம் கடனில் தான் இருக்கிறோம் ஆனாலும் என்னுடைய மகளை நான் நன்றாக தான் வளர்த்து வந்தேன் .நகைகளை அடகு வைத்து இந்த நிகழ்ச்சிக்கு வந்ததை குறித்து பிக் பாஸ்க்குள்ளே சொல்ல வேண்டாம், நம்முடைய குடும்ப கதைகளை சொல்லி அனுதாபம் பெறவேண்டாம் என்று சொல்லி தான் அனுப்பினோம் ஆனால் தனலட்சுமி அங்கே ஏதோ ஒரு வேகத்தில் எங்களுடைய கஷ்டங்களை எல்லாம் சொல்லி இருக்கிறாள். ஆனால் அதற்காக தனலட்சுமி இப்படி கண்ட மேணிக்கு எல்லோரும் திட்ட வேண்டாம். உங்கள் வீட்டில் ஒரு பெண் என்று நினைத்து பேசுங்கள் என்று அந்த வீடியோவில் வேண்டுகோள் வைத்து இருக்கிறார்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications