Pandian Stores Serial: எடுடா வண்டியை.. விடுடா வீட்டுக்கு... யாருகிட்ட?
சென்னை:விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில்... வீட்டில் கடைக்கு போறேன்னு பொய் சொல்லிட்டு செயின் பாலீஷ் பண்றவன் ஏமாத்திட்டு போனான் பாருங்க... அவனைத் தேடி போகிறாள் தனம்.
மூர்த்தி மாமா வீட்டுக்கு வந்து தனம் எங்கேன்னு கேட்க, கடைக்கு போயிருக்காங்க அக்கான்னு சொல்றாங்க முல்லையும், மீனாவும். கடையிலேர்ந்துதான் வரேன்னு மாமா சொல்ல,
பொய் சொல்லிட்டு வந்துட்டோமேன்னு தனம் பதற.. ஒரு வழியா போனில் சமாளிச்சுட்டு கெத்து காட்டும் தனம், இப்போ வண்டியை எடுடா கதிர்.. யாருகிட்டேன்னு தன்னைத் தானே பாராட்டிக்கறா.

ஒளிஞ்சு நின்னு
கடைக்கு போறேன்னு சொல்லிட்டு, செயின் பாலீஷ் போட்டவன் ஏமாத்திட்டான்னு அவனைத் தேடித் போகிறாள் தனம். வீட்டில் சொன்னால் முல்லையும், மீனாவும் இப்படி ஏமாந்துட்டீகளே அக்கான்னு சொல்லுவாங்க. அதனால், அவங்களுக்கு தெரியாம கடைக்கு போறேன்னு சொல்லிட்டு கிளம்பும் வழியில் மாமா.பைக்கில் வீட்டுக்கு வர்றார்.. உடனே தனம் ஒளிஞ்சுக்கிட்டா...

பார்த்தால் அவ்ளோதான்
ஐயையோ மாமா பார்த்துட்டாக அவ்ளோதான்னு ஒளிஞ்சுக்கிட்டு, மூர்த்தி போனவுடன்.. கடைக்கு போன் பண்றா. கதிரு ஒரு பிரச்சனைடா.. உடனே வான்னு சொல்லி. அவனும் யாருக்கும் சொல்லாமல் வர.. செயினை பாலீஷ் போடறேன்னு சொல்லி ஏமாத்தினவனை பிடிக்கனும்டா.. என் செயின் போச்சுன்னு சொல்றா..

அடி பார்க்கறேன்
என்ன அண்ணி.. இப்படியா இருப்பீங்கன்னு சொன்ன கதிர்.. தனத்தை வண்டியில் அழைச்சுக்கிட்டு செயின் பாலீஷ் போடறவனைத் தேடிப் போறான். கடைசியில் அவனை கண்டும் பிடிச்சாச்சு. அண்ணி நீங்க அந்தப் பக்கம் போங்க.. நான் இவனைன்னு கதிர் சொல்ல... அப்படி எல்லாம் ஒன்னும் வேணாம்.. நீ இவனை அடி.. நான் பார்க்கறேன்னு தனம் ஜெயம் பட சதா மாதிரி சொல்ல, கதிரும் அவனை அடிச்சு போலீசில் ஒப்படைக்கிறான்.

எடுடா வண்டியை
இந்த நேரத்தில் மூர்த்தி மாமா போன் பண்றார்... கதிர் மாமா போன் பன்றாருடா..என்று சொல்ல, எடுத்து பேசுங்கன்னு கதிர் சொல்றான். என்னத்தை சொல்றதுன்னு தனம் கேட்க, நடந்ததை சொல்லுங்கன்னு கதிர் சொல்றான். நான்தான் கடைக்கு போறேன்னு வீட்டில் சொல்லிட்டு வந்துட்டேனே..அவங்க அப்படித்தான் மாமாகிட்டே சொல்லி இருப்பாங்கன்னு தனம் சொல்றா. இது வேறயா என்று சலிச்சுக்கறான் கதிர்.

பொய் சொல்லலாமா
எங்களை பொய் சொல்லக் கூடாதுன்னு சொல்லிட்டு நீங்க மட்டும் பொய் சொல்லலாமா அண்ணின்னு கதிர் கேட்க, என்னடா குத்தி காண்பிக்கறியான்னு தனம் கேட்கிறாள். இப்படி பேசிக்கொண்டு இருக்கும்போதே முல்லை போன் செய்யறா. அப்போது அண்ணி கடைக்குத்தான் வந்தாங்கன்னு அவன் சொல்லிட்டான். உடனே அக்காகிட்ட கொடுங்க நான் பேசறேன்னு சொல்ல, தனம் போனை வாங்கி..என்ன கடலை பருப்பா.. ஒரு கிலோவா என்று கடையில் இருப்பது போல ஆக்டிங் போடறா. அக்கா கடையில இருக்கீகளா.. சரி சரி நான் மாமாகிட்டே சொல்லிடறேன்னு முல்லை போனை வச்சுட.. பெரு மூச்சு விட்ட தனம் எடுடா வண்டியை விடுடா வீட்டுக்கு.. யாருகிட்ட என்று தானே தன்னை பாராட்டிக்கிறாள்.
ஒரு சின்ன பொய்யை மறைக்க எப்படி எல்லாம் கிளை பொய் சொல்ல வேண்டி இருக்கிறது பாருங்கள்...
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications