அருண் விஜய் வாயிலேயே குத்திட்டேன்! ஆனால் அவர் செய்த செயல், நெகிழ்ந்த தனுஷ்.. ஜிவி பிரகாஷ் செய்த சபதம்
சென்னை: நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பன்முகத் திறமையுடன் வலம் வரும் தனுஷ் இயக்கி, நடித்துள்ள இட்லி கடை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (செப்டம்பர் 14) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில், படக்குழுவினரான அருண் விஜய், ராஜ்கிரண், சத்யராஜ், ஷாலினி பாண்டே, நித்யா மேனன், சமுத்திரக்கனி, வடிவுக்கரசி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.

நன்றி மறக்காத தனுஷ்
விழாவில் பேசிய தனுஷ், தனது உடன் நடித்த கலைஞர்கள் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசினார். நடிகர் ராஜ்கிரண் குறித்துப் பேசும்போது, "எங்கள் குடும்பத்துக்கே நன்றி மறக்காத வியாதி இருக்கிறது. ராஜ்கிரண் சார்தான் எங்கள் அப்பாவுக்கு முதல் பட ஹீரோ. எனக்கும் நீங்கள்தான் சார். இந்தப் படத்தில் நீங்கள் இருப்பது எங்களுக்கு ஒரு ஆசிர்வாதம்" என்று கூறினார்.
சத்யராஜ் உடன் நடித்தது குறித்துப் பேசும்போது, "உங்களுடன் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. நீங்கள் ஒரு சீனியர் நடிகர் என்பதால், ஒரு இயக்குநராகச் சின்னச் சின்ன விஷயங்களைச் சொல்லத் தயக்கமாக இருந்தது. ஆனால், நீங்கள் கேரவனில் டைம் கிடைக்கும்போது வாக்கிங், எக்சர்சைஸ் என இருந்த உங்களின் ஒழுக்கம் என்னை ஆச்சரியப்படுத்தியது" என்றார்.
நடிகர் அருண் விஜய் குறித்துப் பேசிய தனுஷ், "அருண் விஜய் சார் ரொம்ப சீக்கிரமாக இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அவர் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறார். அவரைத் தூசிலும், மண்ணிலும் புரட்டி எடுத்திருக்கிறோம். ஆனாலும், கொஞ்சமும் மனசு நோகாமல் நடித்துக் கொடுத்தார். ஒரு சண்டைக் காட்சியில், தவறுதலாக என் கை அவர் வாயில் பட்டு ரத்தம் வந்துவிட்டது. வேறு யாராக இருந்தாலும், குறைந்தது 2 மணி நேரம் ஷூட்டிங் நின்றிருக்கும். ஆனால், அவர் உடனே ஒரு ஐஸ் கட்டியை எடுத்து வைத்துவிட்டு அடுத்த ஷாட் போகலாம் என வந்துவிட்டார்" என்று அருண் விஜயின் அர்ப்பணிப்பைப் பாராட்டினார்.
ஜி.வி. பிரகாஷின் உறுதி
படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குறித்துப் பேசிய தனுஷ், "ஜி.வி. போல ஒரு நண்பன் கிடைத்தது உண்மையான வரம். இந்தப் படத்துடைய கதையைக் கேட்டுவிட்டு, 'நான் ரீல்ஸ் அடிப்படையில இந்தப் படத்துக்குப் பாட்டுப் பண்ண மாட்டேன்' என உறுதியாக இருந்தார். இப்போது பல பாடல்கள், 15 முதல் 30 வினாடிகள் கவனத்தை ஈர்க்கும் வகையில், ரீல்ஸுக்காக வருகின்றன. ஆனால், ஜி.வி.யோ, 'ரீல்ஸ், யூடியூப் வியூஸ் என ஹிட் ஆகும் பாடல்களைப் பண்ண மாட்டேன். படம் வந்த பிறகு பேசப்படும் மெலடிஸ்தான் பண்ணுவேன்' என உறுதியாக இருந்தார். மண் சார்ந்த, கிராமத்து படங்கள் வரும்போது அதற்கு உண்மையாக இருப்பேன் எனச் சொன்னார். அதற்கு ஒரு பெரிய தைரியம் வேண்டும்" என்றார்.
தொடர்ந்து, புதிய தலைமுறை இசையமைப்பாளர்களிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்த தனுஷ், "நமக்கு இன்னும் ஆரோக்கியமான, தரமான இசை வர வேண்டும். ஸ்ட்ராங்கான மெலடீஸ் வர வேண்டும். ஒரு தலைமுறைக்கான மியூசிக் டேஸ்ட்டை செட் செய்யும் கடமை உங்களுக்கு இருக்கிறது. அதைப் புரிந்துகொண்டு, தரமான மெலடிஸ்களைக் கொடுப்பீர்கள் என நம்புகிறேன்" என்று பேசினார்.
விழாவில் பேசிய மற்ற பிரபலங்கள்
விழாவில் பேசிய ராஜ்கிரண், "தனுஷ் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல, ஒரு சிறந்த இயக்குநர். ஒரு நடிகனிடம் இருந்து என்ன வேண்டும் என்பதில் அவருக்குத் தெளிவு உள்ளது" என்று பாராட்டினார். அருண் விஜய் பேசும்போது, "தனுஷ் மீது எனக்கு இருந்த நம்பிக்கைதான் இந்தப் படத்தில் நடிக்க முக்கியக் காரணம். அவர் ஒரு சிறந்த இயக்குநர் என்பது இந்தப் படத்தின் மூலம் நிரூபணமாகும்" என்றார். நடிகைகள் நித்யா மேனன் மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோரும், தனுஷின் அர்ப்பணிப்பையும், தொழில்முறை அணுகுமுறையையும் புகழ்ந்து பேசினர்.
இட்லி கடை இசை வெளியீட்டு விழா, ஒரு திரைப்படத்தைப் பற்றிய கொண்டாட்டம் மட்டுமல்ல, கலைஞர்களுக்கு இடையிலான பரஸ்பர மரியாதை மற்றும் ஆரோக்கியமான விவாதங்களுக்கான தளமாகவும் அமைந்தது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications