டெல்லி செல்லும் தனுஷ்.. எல்லாமே பக்கா பிளான் தான் போல! யாரை சந்திக்கிறார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் தனுஷ் திடீரென டெல்லிக்கு புறப்பட்டு சென்றிருப்பது இப்போது கோலிவுட் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கெனவே தனுஷ் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற பேச்சு கடந்த சில நாட்களாகவே பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சூழலில் அவர் டெல்லி சென்றிருப்பதும், அங்கு முக்கிய நபர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருப்பதும் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இது வெறும் தனிப்பட்ட பயணம்தானா? இல்லை அரசியல் தொடர்பான முக்கியமான சந்திப்புகள் ஏதாவது திட்டமிடப்பட்டிருக்கிறதா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

Dhanush

அரசியல் பேச்சுக்கு பிள்ளையார் சுழி

தனுஷ் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி இப்போது எழுந்ததற்கு பின்னால் சில முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன. சமீபத்தில் அகில இந்திய தனுஷ் ரசிகர் மன்றத்தினர் தங்களுடைய நற்பணி இயக்கத்துக்காக சிவப்பு, வெள்ளை நிறங்களை கொண்ட கொடியை பயன்படுத்துவது குறித்து பேசப்பட்டது. அந்த கொடி அரசியல் கட்சியின் கொடியை போல இருப்பதாக சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்தது.

ஆனால், இந்த கொடி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களுடைய மன்றத்தில் பயன்பாட்டில் இருப்பதாக ரசிகர் மன்றத்தினர் தரப்பில் விளக்கம் கொடுத்தனர். இருந்தாலும், தனுஷின் ரசிகர் மன்ற செயல்பாடுகள் இப்போது அரசியல் பார்வையுடன் கவனிக்கப்பட தொடங்கியிருக்கின்றன.

அதற்கு காரணம், திருவள்ளூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில் தனுஷ் பேசிய சில விஷயங்கள்தான். ரசிகர்கள் ஒற்றுமையாக இருப்பதன் பின்னால் ஒரு பெரிய சக்தி இருப்பதாகவும், அந்த சக்திக்கு ஒரு அர்த்தத்தை உருவாக்க வேண்டும் என்றும் அவர் பேசியதாக கூறப்படுகிறது. இந்த பேச்சு, ரசிகர்களை வெறும் ரசிகர் மன்றமாக மட்டும் வைத்திருக்காமல் அடுத்த கட்டத்துக்கு அழைத்து செல்லும் திட்டம் ஏதாவது இருக்கிறதா என்ற கேள்வியை உருவாக்கியது.

பள்ளிக்கு புதிய கட்டடம்

தனுஷ் சமீபத்தில் தான் படித்த சென்னை சாலிகிராமத்தில் உள்ள தாய் சத்யா பள்ளிக்கு மூன்று தளங்களை கொண்ட புதிய கட்டடத்தை கட்டி கொடுத்ததும் கவனம் பெற்றது. இந்த பணியை அவர் சொந்த செலவில் செய்ததாக செய்திகள் வெளியாகின. இதுபோன்ற சமூக நலப் பணிகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, ரசிகர் மன்ற நிர்வாகிகளின் செயல்பாடுகளும் அரசியல் பேச்சுகளும் மறுபுறம் கவனத்தை ஈர்த்துள்ளன. தனுஷை சுற்றி இப்போது நடக்கும் விஷயங்கள் அனைத்தும் ஒன்றாக பார்க்கப்படுவதால், அவருடைய அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

தனுஷ் கட்சியின் பெயர்

இதற்கிடையில், தனுஷின் பெயரில் புதிய அரசியல் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருப்பதாகவும், அந்த கட்சிக்கு 'தமிழக எழுச்சிக் கழகம்' என்று பெயர் வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் பரவின. ஆனால், இந்த தகவல் குறித்து தனுஷ் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. எனவே, கட்சி பதிவு பற்றிய செய்தியை உறுதிப்படுத்தப்பட்ட தகவலாக எடுத்துக்கொள்ள முடியாது.

தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவிடம் அரசியல் வருகை குறித்து பேசப்பட்டபோது, அது தனுஷின் தனிப்பட்ட முடிவு என்ற வகையில் அவர் கருத்து தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகின. இதனால், தனுஷ் அரசியலுக்கு வருவது குறித்த பேச்சு குடும்பத்தினர் அளவிலும் விவாதிக்கப்பட்டிருக்கிறதா என்ற கேள்வியும் எழுந்தது.

டெல்லி பயணம்

இப்படிப்பட்ட சூழலில்தான் தனுஷ் இன்று திடீரென டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு அவர் முக்கிய பிரமுகர்களை சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அரசியல் கட்சி தொடங்குவது குறித்த பேச்சுகள் ஏற்கெனவே பரவி வரும் நிலையில், இந்த பயணம் கூடுதல் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

டெல்லி என்றாலே அரசியல் ரீதியான சந்திப்புகள், கட்சி பதிவு தொடர்பான நடவடிக்கைகள் என பல விஷயங்கள் நினைவுக்கு வருவது இயல்புதான். அதனால்தான் தனுஷின் பயணத்தையும் அரசியல் பேச்சுகளுடன் இணைத்து பலரும் விவாதித்து வருகின்றனர். ஆனால், அவர் யாரை சந்திக்கிறார், அந்த சந்திப்பின் நோக்கம் என்ன, அரசியல் தொடர்பான பேச்சுவார்த்தை ஏதாவது நடைபெறுகிறதா? என்பது குறித்து இதுவரை தெளிவான அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.

தனுஷ் அரசியலுக்கு வருவதற்காக ஒவ்வொரு கட்டமாகத் திட்டமிட்டு நகர்கிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ரசிகர் மன்ற நிர்வாகிகள் நியமனம், நலத்திட்ட உதவிகள், அவர் பேசிய கருத்துகள், கட்சிப் பெயர் குறித்த தகவல்கள் என பல விஷயங்கள் தொடர்ச்சியாக வெளியாகும் நிலையில், டெல்லி பயணம் அடுத்தகட்ட நகர்வாக இருக்குமோ என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+