விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் கூடாது.. மீறினால் ஆக்‌ஷன்! தனியார் பள்ளிகளுக்கு பறந்த வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு பொது விடுமுறை மற்றும் அரசு அறிவிக்கும் விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு எந்த சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என தனியார் பள்ளிகள் இயக்குநரகம் அறுவுறுத்தியுள்ளது.

நேரடியாகவோ, இணைய வழியிலோ சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது, விதிமீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிக், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகள் இயக்குநரகம் மீண்டும் எச்சரித்துள்ளது.

Private Schools

ஆயுத பூஜை, விஜயதசமி இன்றும் நாளையும் கொண்டாடப்படுகிறது. சனி, ஞாயிறை தொடர்ந்து திங்கள், செவ்வாயில் பண்டிகை வந்ததால் 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது. இந்நிலையில், அரசு விடுமுறை நாட்களில் தடையை மீறி வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் பள்ளிகள் இயக்குநரகம் அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து வகை தனியார் சுயநிதி பள்ளிகளிலும் (மெட்ரிக் / சிபிஎஸ்இ / ஐசிஎஸ்இ / நர்சரி/ மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள்) ஏற்கனவே தெரிவித்துள்ளவாறு அரசு பொது விடுமுறை நாள்கள் / அரசால் அறிவிக்கப்படும் விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு எவ்வித வகுப்புகள்/ சிறப்பு வகுப்புகளும் நேரடியாகவோ, இணையவழி மூலமாகவோ நடத்தக்கூடாது என இவ்வியக்ககம் மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தனியார் பள்ளிகள்) மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்காண் அறிவுரைகளை மீறி எவ்வித பள்ளியும் செயல்படக்கூடாது எனவும், அவ்வாறு மீறி செயல்படும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் இதன் மூலம் திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது என்றும், அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்களும் (தனியார் பள்ளிகள்) இதில் தனிகவனம் செலுத்தி அனைத்து பள்ளிகளின் நிர்வாகங்களுக்கும் உரிய அறிவுரை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+