கிஃப்ட் ஆக கொடுத்த லாட்டரியில் விழுந்த ரூ.5 கோடி! கணவரின் செயலால் இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய மனைவி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக அமெரிக்காவை சேர்ந்த ஒருவர், அங்குள்ள லாட்டரியில் இரண்டு டிக்கெட்டுகளை வாங்கி கொடுத்துள்ளார். கணவரின் செயலை பார்த்து பணத்தை வீணடிக்கிறாரே என மனதில் நினைத்துக்கொண்டு லாட்டரியை சுரண்டி பார்த்த மனைவிக்கு ரூ.5 கோடி பரிசு அடித்ததும் அப்படியே இன்ப அதிர்ச்சியில் வாயடைத்துள்ளார்.

கணவன் கொடுத்த பரிசின் மதிப்பு ரூ.5 கோடி என்று தெரிந்ததும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்து இருக்கிறார். அமெரிக்காவில் நடந்த இசம்பவம் பற்றிய தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றன. அதுபற்றி பார்க்கலாம்.

Lottery US Woman Wins Rs 5 Crore Lottery Jackpot After Husband Gifts Her Tickets

மனைவிக்கு பரிசு கொடுத்த கணவன்

அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவிக்கு ஏதாவது பரிசு வாங்கி கொடுக்க வேண்டும் என நினைத்துள்ளார். காஸ்ட்லியாக வாங்கி கொடுக்க வேண்டாம் என நினைத்த அவர், அருகில் இருந்த ஒரு லாட்டரி கடையை பார்த்து அங்கு இரண்டு லாட்டரிகளை வாங்கியுள்ளார். மனைவிக்கு இதை பரிசாக கொடுப்போம்.

பரிசு அடித்தால் லக்.. இல்லாவிட்டால் போகட்டும் என்று லாட்டரியை வாங்கி மனைவியிடம் கொடுத்து இருக்கிறார். வீட்டிற்கு சென்று மனைவியிடம் உனக்கு ஒரு கிஃப்ட் வாங்கி வந்து இருக்கிறேன்.. வெளியில் மேஜையில் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். மனைவியும் ஆர்வமாக வந்து பார்க்க 2 லாட்டரி டிக்கெட்டுகள் இருந்துள்ளன. அட, இதுதானா என்று சலித்துகொண்டே டிக்கெட்டை ஸ்கரட்ச் செய்து பார்த்து இருக்கிறார்.

ரூ.5 கோடி பரிசு

அதில் ஒரு டிக்கெட்டிற்கு $577,777 - பரிசு விழுந்துள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 5 கோடியாகும். கணவர் பரிசாக கொடுத்த லாட்டரியில் 5 கோடி பரிசு விழுந்ததால் இன்ப அதிர்ச்சி அடைந்த அந்த பெண் மகிழ்ச்சியில் துள்ளி குதித்துள்ளார். உடனடியாக லாட்டரி அதிகாரிகளை தொடர்பு கொண்டு நடந்ததை சொல்லியுள்ளார்.

கணவர் எதிர்பாராத விதமாக வாங்கி கொடுத்த லாட்டரிக்கு பரிசி விழுந்ததால், மிகவும் சந்தோஷத்தில் இருக்கும் கூறியதாக அந்தப்பெண், பரிசாக அடித்த பணத்தை வைத்து பல இடங்களுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருக்கிறாராம். அதேநேரத்தில் தனது அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டாராம்.

நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்

கணவர் வாங்கி கொடுத்த லாட்டரியில் பரிசு விழுந்தது குறித்த செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் சிலர் இது பற்றி கூறுகையில், எனக்கே வாங்கினால் கூட பரிசு விழுவது இல்லை. இதில் பரிசாக வாங்கி கொடுத்து பல்ப் தான் வாங்க வேண்டும். கோடியில் ஒருவருக்குதான் இப்படியான அதிர்ஷ்டம் அடிக்கும் என்று கூறியுள்ளார். மற்றொரு நபர் கூறுகையில், உண்மையில் அந்த தம்பதி ரொம்பவே அதிர்ஷ்டசாலிகள்தான் என்று பதிவிட்டு உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+