Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இவ்வளவு நாளா இதைக் காட்டவே இல்லை.. "குஷி"யில் தர்ஷா குப்தா ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு வெள்ளிக்கிழமையும் அதுவுமாக செம ஹேப்பியாக இருக்கிறது. காரணம், வழக்கம் போல அவர்களை வசீகரித்த லேட்டஸ்ட் போட்டோஸ்தான்.

Recommended Video

    Shivani, Darshan, Reshma Trends of Lockdown • Motta Maadi Photoshoot

    இன்ஸ்டாகிராமை திறந்தாலே தர்ஷா குப்தாவின் போஸ்ட்கள் தான் வைரலாக பரவி வருகிறது. அதிலும் அவரது ரசிகர்கள் நாளுக்கு நாள் கூடிக் கொண்டு அவருக்காக ஆர்மி உருவாக்கி வருகிறார்கள்.

    அதில் சில ரசிகர்கள் இவர் எவ்வளவுதான் போட்டோ போட்டாலும் அவருடைய இடுப்பு தான் அதிகமாக தெரிகின்றது அதிலிருக்கும் தொப்புள் தெரியவில்லை என்று ரொம்பக் கவலைப்பட்டு ஏங்கி வந்தனர் (?). இதோ அவர்களின் ஏக்கத்தை தற்போது தர்ஷா நிவர்த்தி செய்து விட்டார்.

    ரசிகர்கள் ஏக்கம்

    ரசிகர்கள் ஏக்கம்

    சிவப்பு பனியனில் எடுப்பாக தொப்புளை காட்டி இவர் கொடுத்திருக்கும் போஸ் வைரலாக பரவி வருகிறது. அதை பார்த்த பல ரசிகர்கள் வடிவேலு பாணியில் பாத்துட்டேன்... நான் பாத்துட்டேன்......என் தேவதையின் தொப்புளை பார்த்துவிட்டேன் என்று கும்மாளம் இடுகிறார்கள். இவர் சீரியலில் நடித்து பிரபலமானதைவிட இன்ஸ்டாகிராமில் மொட்டைமாடி போட்டோ ஷூட் நடத்தி பிரபலமாகி ரசிகர்களை தன் வசம் படுத்தியிருக்கிறார்.

    ரசிகர் கூட்டம்

    ரசிகர் கூட்டம்

    நாளுக்கு நாள் இவருக்கு படை பட்டாளத்தோடு ரசிகர்கள் கூடி கொண்டு வருகிறார்கள். அதை நினைத்து இவர் ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது என்று கூறுகிறார். சீரியல்களில் நான் ரொம்பவும் கஷ்டப்பட்டு நடித்து இருக்கிறேன் ஆனால் அதில் கிடைக்காத பெயரும் புகழும் எனக்கு போட்டோ ஷூட் மூலமாகவும் இணையதளம் மூலமாகவும் கிடைத்திருக்கிறது என்று நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.

    கஷ்டப்பட்டு நடித்தார்

    கஷ்டப்பட்டு நடித்தார்

    அவரது முதல் முள்ளும் மலரும் சீரியலில் காலில் செருப்பில்லாமல் இரவு நேரத்தில் கோவிலில் அங்கப்பிரதட்சணம் பண்ணும்போது ஈரத்துணியோடும் ரொம்பவும் கஷ்டப்பட்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அந்த சீரியலில் இவர் முதன்முதலாக நடிக்கும் போது நடிப்பு என்ன என்று ஒன்றும் தெரியாததால் இவரை இந்த சீரியல் கூட நடித்தவர்கள் ஒதுக்கி வைத்ததாகவும் அவர் கூறியிருக்கிறார்.

    தனிச்சு விடப்பட்டார்

    தனிச்சு விடப்பட்டார்

    அவருடன் நடித்த அனைவரும் ஒன்றாக இருக்கும் போது இவர் மட்டும் தனிமையில் இருப்பது போல ஃபீல் ஆகியிருக்கிறார் . நடிக்க தெரியாத சில இடங்களிலும் இவர் செய்யும் சின்ன சின்ன தவறுகளுக்கு அவர்கள் சிரிப்பது இவருக்கு ரொம்பவும் கஷ்டமாகவும் நமக்கு ஒன்றுமே தெரியாது என்றும் பயப்படவும் வைத்திருந்ததாம்.

    10 நிமிடம் புதை குழியில்

    10 நிமிடம் புதை குழியில்

    முள்ளும் மலரும் சீரியலில் ஒரு காட்சியில், இவருடைய அத்தான் ஒரு முறை தொலைந்து போய் விடுவார்.. அதற்கு பரிகாரமாக இவர் இறந்து போன சடங்கு பண்ணினால் அவர் திரும்பி வந்துவிடுவார் என்றும் சீனுக்காக இவர் மணலில் உயிருடன் புதைக்கப்படுவது போல காட்சியாம். அவரும் சம்மதித்து 10 நிமிடங்கள் அந்த புதைகுழியில் இருந்து இருக்கிறார். இவரது முகம் உள்பட அனைத்து இடங்களிலும் மண்ணால் மூடப்பட்டு 10 நிமிடங்கள் உள்ளே மூச்சை அடக்கி இருந்திருக்கிறார்.

    இப்ப நினைச்சாலும் கஷ்டமா இருக்கு

    இப்ப நினைச்சாலும் கஷ்டமா இருக்கு

    அதை இப்ப நினைச்சாலும் கஷ்டமாக இருக்கிறது. அவ்வளவு கஷ்டப்பட்டு அந்த சீனில் நடித்திருந்தாலும் அந்த சீரியலில் தனக்கான ஒரு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று இவர் ரொம்பவும் பீல் பண்ணி அழுது இருக்கிறாராம். அதுமட்டுமில்லாமல் அந்த சீனில் தான் இவர் பிணமாக படுத்திருக்கும் போது இவரை எல்லாரும் தூக்கிக்கொண்டு போவது போல இருக்குமாம். இவர் சூரியனைப் பார்த்து நேராக படுத்து இருக்கும் போது வெயிலின் தாக்கத்தை வரால் கண்ட்ரோல் பண்ண முடிய வில்லையாம்.

    சூப்பர் நடிப்பு

    சூப்பர் நடிப்பு

    முகம் வறட்சியாகி, ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கிறார். எப்போது கட் சொல்வார்கள் என்று எதிர்பார்த்திருந்தாராம். அந்த அளவு கஷ்டப்படும் நடித்தும் தனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்டிருக்கிறார். ஆனால் அதற்கெல்லாம் சேர்த்து தற்போது இப்போதுதான் இணையதளம் மூலமாக தனது கிடைத்திருக்கிறது என்று சந்தோஷமும் அடைந்திருக்கிறார். முள்ளும் மலரும் சீரியலை விட இப்போ தர்ஷாவுக்குத்தான் செம கிராக்கியாக இருக்கிறது மக்கள் மத்தியில்.

    மேக்கப் சாமான்களை என்ன செய்வது

    மேக்கப் சாமான்களை என்ன செய்வது

    அந்த சீரியலை தொடர்ந்து இவர் விஜய் டிவியில் வேறு சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது இந்த சீரியலுக்கு நிறைய மேக்கப் பொருட்கள் வேண்டும் என்பதற்காக மும்பை போய் எல்லா பொருட்களும் வாங்கி கொண்டு வந்து இருக்கிறார். ஆனால் இவர் சென்னை வந்ததும் இந்த லாக்டோன் டைம் பின் தொடர்ந்து விட்டதால், ஷூட்டிங்கை நிறுத்தி விட்டனர். இதனால் அப்செட்டாகி விட்டாராம். இதனால் கோவைக்கு போய் விட்டார்.

     வீட்டிலேயே போட்டோஷூட்

    வீட்டிலேயே போட்டோஷூட்

    அங்கு தனது வீட்டில் சும்மா இருக்க போரடிக்காமல் போட்டோஷூட் நடத்திப் போட்டோக்களைப் போடப் போக இப்போது அதுவே வாழ்க்கை என்றாகி விட்டது தர்ஷாவுக்கு. போட்டோ ஷூட் நடத்துவதற்கு விதவிதமான பொருட்கள் எல்லாமே சென்னையில் இருப்பதால் இவர் என்ன செய்யலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கும் போதுதான் இவரது அம்மாவின் சேலையை ரொம்பவும் கெஞ்சி வாங்கி தன்னிடமிருந்த பிளவுஸைப் போட்டு போட்டோ எடுக்கலாம் என்று களம் இறங்கினார்.

    கம்மலை மறைக்க பூ

    கம்மலை மறைக்க பூ

    மேலும் கம்மல் போன்ற பொருள்களும் இல்லாததால் பூ எல்லாம் வைச்சு அந்த குட்டியூண்டு கம்மலை மறைப்பதற்காக பூவெல்லாம் முன்னாடி போட்டிருக்கிறார். ஆனால் அது இவ்வளவு பேமஸ் ஆகும் என்று அவர் நினைக்கவில்லை. இன்ஸ்டாகிராமில் எல்லோரும் கிளாமராக போட்டோ ஷூட் நடத்தி கொண்டிருக்கும் போது இவரது ஹோம்லியான போட்டோவை பார்த்து ரசிகர்கள் இவரை புகழ்ந்து தள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்கு பிறகு தான் யார் இவர் என்று எல்லோருக்கும் தெரிய ஆரம்பித்திருக்கிறது. சின்னதா ஆரம்பித்தது இன்று பெரிய மரமாக வளர்ந்து கொண்டிருக்கிறது என்று பெருமையாக கூறி இருக்கிறார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+