காதோரம் சுருட்டை முடி.. நிமிர்ந்து பார்த்தால்.. மூச்சு முட்டுதே.. கிறங்கடிக்கும் தர்ஷா

Subscribe to Oneindia Tamil

சென்னை: பார்ப்பவர்களை கவிதை பாட வைக்கும் பேரழகால் காதோரத்தில் சுருட்டை முடி கதை பேச காலை மடக்கி குத்துக்காலிட்டு மாஸ் காட்டுகிறார் தர்ஷா குப்தா.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செந்தூரப்பூவே சீரியலில் நெகட்டிவ் ரோலில் நடித்துக் கொண்டிருக்கும் தர்ஷா குப்தா முதல் முதலில் அறிமுகமானது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த முள்ளும் மலரும் சீரியலில் தான்.

இந்த சீரியலுக்கு பிறகு இவருக்கு வந்த வாய்ப்புகள் எல்லாமே நெகட்டிவ் ரோல் ஆகவே இருந்து வருகிறது. ஆனால் அதையும் மிகவும் சந்தோஷத்தோடும் ஜாலியாக செய்து கொண்டிருக்கிறார்.

ரசிகர்கள் அதிகம்தான்

ரசிகர்கள் அதிகம்தான்

சீரியலில் இருந்த ரசிகர்களை விடவும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாகதான் அதிகமான ரசிகர்கள் கிடைத்திருக்கின்றனர். இவர் சீரியல்களிலும் சின்னத்திரையிலும் மட்டுமல்லாமல் வெப் சீரியல்களிலும் நடித்துக்கொண்டிருக்கிறார் .இவற்றையெல்லாம் தாண்டி சமூக வலைதளங்களிலும் அதிகமாக ஆக்டிவாக இருந்து வருகிறார் .

டிக்டாக் வீடியோக்கள்

டிக்டாக் வீடியோக்கள்

பிரபலமாக இருந்த டிக்டாக்கில் விதவிதமாக ஆடையில் பல வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களிடம் நன்றாக பிரபலம் அடைந்து விட்டார் .திடீரென இந்த டிக்டாக் நிறுத்தப்பட்டதும் மிகவும் வருத்திலிருந்த இவருக்கு போட்டோ ஷூட் தான் ஆறுதலாக இருந்திருக்கிறது. அதனால் தான் போட்டோஷூட்டில் தனது திறமையை நிரூபிக்க கேமராவும் கையுமாக வயல் வரப்பு என கிராமம் கிராமமாக சுற்றித்திரிந்து போட்டோக்களை குவிக்க ஆரம்பித்துவிட்டார்.

அதிக விசிறிகள்

அதிக விசிறிகள்

போட்டோ சூட்டில் எடுக்கும் போட்டோஸ்க்களை இன்ஸ்டாகிராம் டுவிட்டரில் பதிவிட்டு அதிலேயும் பெரும் ரசிகர்களை பெற்றுவிட்டார் .தற்போது இவருக்கு சீரியல்களை தாண்டியும் இன்ஸ்டாகிராமில் தான் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதனால் தான் இவர்களுடைய ரசிகர்கள் இவருக்கு பல பேன்ஸ் பேஜ்களையும் வைத்திருக்கின்றனர் .

என்ஜாய் செய்யும் ரசிகர்கள்

என்ஜாய் செய்யும் ரசிகர்கள்

அதுமட்டுமல்லாமல் ஃபேன்ஸ் பேஜ் வைத்து இருக்கும் இவருடைய தீவிர ரசிகர்களிடமும் இவர் நன்றாக பழகி வருகிறார் .அதனால்தான் இவருடைய பிறந்த நாளுக்கு ரசிகர்கள் அனைவரையும் வரவேற்று அனைவருக்கும் பார்ட்டி கொடுத்து என்ஜாய் பண்ணி விட்டார். அதுவுமில்லாமல் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி லைவில் வந்து ரசிகர்களின் கேள்விகளுக்கும் அவர்களுடைய ஆசைகளையும் தீர்த்து வருகிறார் .

பரவசத்தில் ரசிகர்கள்

பரவசத்தில் ரசிகர்கள்

தன்னுடைய ஒவ்வொரு போஸ்ட்க்கும் தனக்கு கமெண்ட் போடும் ரசிகர்களுக்கு லைக்குகளை வழங்கி வந்த இவர் தற்போது எந்த ரசிகர்களையும் கண்டுகொள்ளவில்லை என குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் இவர் நேற்று போட்ட போட்டோஸ்களுக்கு கமெண்ட் போட்ட ரசிகர்களுக்கு மட்டும் பதிலளித்திருக்கிறார் .ஆனால் மீண்டும் இன்று காலையில் போட்டோஸ் வெளியிட்டு ரசிகர்களுக்கு பரவசத்தை ஏற்படுத்தி விட்டு அவர்கள் போட்ட கமெண்டுகளை மட்டும் கண்டு கொள்ளவில்லை.

மஞ்சள் உடை தேவதை

மஞ்சள் உடை தேவதை

இவருக்கு அதிகமாக பிடித்த கலர் மஞ்சள் நிறம் என்பதால் தற்போது மஞ்சள் கலர் உடையில் மங்களகரமாக உட்கார்ந்தபடி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் வைத்திருந்த அதே கர்லிங் ஹேர் ஸ்டைல்லோடு பார்ப்பவர்களை சுண்டி இழக்கும் காந்த பார்வையால் கவர்ந்து இழுத்து வருகிறார். மஞ்சள் நிற உடையில் ஒரு மாலை நேரத்து சூரிய தேவதை போல ஜிவ்வுன்னு இழுக்கிறார் தர்ஷா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+