கொத்தடிமையாக்கிட்டாங்க மாமியார்! கெனிஷா பற்றி வேறமாதிரி சொன்னாரே ரவி மோகன்? கணவன் மனைவி போல: பிரபலம்
சென்னை: ஐசரி கணேஷ் மகள் ப்ரீத்தாவின் கல்யாணத்துக்கு, நடிகர் ரவி மோகனும், அவரது தோழி கெனிஷா பிரான்சிஸூம் நேற்றைய தினம் ஜோடியாக வந்திருந்தனர்.. இவர்கள் இருவரையும் பார்த்து பலரும் திகைப்படைந்தனர்.. இவர்கள் இருவரும் ஜோடியாக திருமணத்தில் பங்கேற்ற போட்டோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கின்றன. இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் ஜெயம் ரவி குறித்து சில விஷயங்களை தெரிவித்துள்ளார்.
ஜெயம் ரவியின் மேனேஜராக செயல்பட்டவர் அவரது மாமியார்தான்.. வீட்டு மாப்பிள்ளை என்ற பெயரில் "கிரேட் டவுன்" செய்தவர் அவரது மாமியார்தான்.. ஜெயம் ரவி விவாகரத்து அறிவித்தபோது, பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது நான் அவரை தனியாக சந்தித்து சில கேள்விகளை கேட்டேன்.

கொத்தடிமையாக்கிட்டாங்க
அப்போது என்னிடம், "என்னுடைய மாமியார் என்னை கொத்தடிமையாக்கிட்டாங்க.. சொந்தமாக நான் வாங்கிய வீட்டிலேயே என்னை உள்ளே விடல.. சாவியை எடுத்துட்டு போயிட்டாங்க..
என் மனைவியும், அவரது அம்மா சொல்படிதான் கேட்கிறார்.. வெளிநாடுகளுக்கு சென்றால், என்னுடைய பணத்தை காலி செய்துவிடுகிறார்.. வெளிநாடுகளுக்கு சென்றால் என்னிடம் சொல்லிவிட்டுகூட போவதில்லை. ஆனால், நான் எங்காவது ஷூட்டிங் சென்றால், என்னுடைய உதவியாளர்களிடம் கேட்கக்கூடாத கேள்வியையெல்லாம், கீழ்த்தரமான கேள்விகளை எல்லாம் கேட்டார். அதற்கு பிறகுதான், உன் அம்மாவுடேனேயே இரு, நான் தனியே போகிறேன் என்று சொல்லிவிட்டேன்
என்றார்.
நிலுவையில் விவாகரத்து வழக்கு
பிள்ளைகள் அடிக்கடி ஜெயம் ரவியை சந்தித்துவிட்டு செல்கிறார்கள்.. இவர்களது விவாகரத்து வழக்கும் கோர்ட்டில் உள்ளது.. அப்போதே பாடகியுடன் லிவிங் டூ கெதர் வாழ்க்கை வாழ்வதாக செய்திகள் கசிந்தன. எனவே, இந்த பாடகி பற்றியும் ஜெயம் ரவியிடம் கேட்டேன்..
அதற்கு அவர், "நான் மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன்.. பைத்தியம் பிடிக்கும் நிலைமைக்கு வந்துட்டேன்.. அந்த மன உளைச்சலை நீக்குவதற்கான மனநல சிகிச்சை நிபுணராகத்தான் எனக்கு கெனிஷா அறிமுகமானார்.. அவர் மிகப்பெரிய யோகாசன நிபுணர்.. எனக்கு யோகாசனமும் கற்றுத்தந்து, என்னுடைய மனஉளைச்சலை போக்கியவர் கெனிஷா.. நாங்கள் இருவரும் தியான மண்டபம் கட்டி, தியானத்தை உலகம் முழுவதும் பரப்புகிற நல்ல காரியத்தில் இறங்க போகிறோம்" என்றார் ஜெயம் ரவி.
திருமணமான ஜோடி போல
நேற்று ஐசரி கணேஷ் வீட்டு திருமணம் நடந்தது. இந்த திருமணத்துக்கு பத்திரிகையாளர்கள் யாரையுமே அழைக்கவில்லை... இந்த கல்யாணத்துக்கு முதல் ஆளாக வந்தார்கள் ஜெயம் ரவியும், கெனிஷாவும். மணமகனை போல மஞ்சள் நிற பட்டு சட்டை வேட்டியுடனும், பட்டுவேலை, பட்டு ரவிக்கையுடன் வந்திருந்தார்கள்.
இருவரும் பக்கத்து பக்கத்தில் உட்கார்ந்திருந்தார்கள். பார்ப்பதற்கு திருமணமான ஜோடி போல கணவன் மனைவியாக தெரிந்தார்கள். கெனிஷா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். இவர்கள் திருமணம் நடந்ததா? இல்லையா? என்பதை உறுதிப்படுத்த முடியாது.
கேள்விக்கான மர்மம்
ஆனால் பகிரங்கமாக ரவி மோகன் தன்னுடைய தோழியுடன் வந்ததை பார்த்தபோது, ஒருவேளை இவர்கள் திருமணம் செய்து கொண்டார்களோ என்று பரபரப்பாக பேசப்படுகிறது. ஜோடியாக இவர்கள் இருக்கும் படங்கள் இணையத்தில் வைரலாகிறது. இந்த கேள்விக்கான மர்மத்தை, பதிலை ரவி மோகன் தான் சொல்ல முடியும். எது எப்படியோ மன உளைச்சலிலிருந்து ஜெயம் ரவி மீண்டு வந்து, நிறைய படங்களில் நடித்தால் போதும்" என்றார்.
-
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications