அசீமால் அந்த பிரச்சனை ஏற்பட்டதா? முதல் முறையாக பூவே உனக்காக சீரியல் நடிகை கொடுத்த விளக்கம்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பூவே உனக்காக சீரியலில் நடிகை ராதிகா ப்ரீத்தி நடிக்கும் போது அசீமோடு பிரச்சனை ஏற்பட்டதாக பலர் பேட்டிகளில் கூறி வந்தனர்.
அது குறித்து முதல்முறையாக நடிகை ராதிகா ப்ரீத்தி விளக்கம் கொடுத்திருக்கிறார்.

அதோடு தனக்கு நெருக்கமாக இருந்தவர்கள் கூட பலர் தன்னுடைய முதுகுக்கு பின்னாடி தனக்கு செய்த துரோகங்கள் குறித்தும் அந்த பேட்டியில் ராதிகா ப்ரீத்தி பேசியிருக்கிறார்.
சன் டிவியில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் 2022 ஆம் ஆண்டு வரைக்கும் பூவே உனக்காக சீரியல் ஒளிபரப்பாகி வந்தது. இந்த சீரியல் ஆரம்பத்திலிருந்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. ஆரம்பத்தில் இந்த சீரியலின் கதைப்படி இரண்டு தோழிகளின் நட்பு குறித்து கதை பயணித்து வந்த நிலையில் பிறகு நட்பு, தியாகம், காதல் என கதை வேறு விதமாக பயணத்தை தொடங்கியது.
ஆனால் இந்த சீரியலில் கதாநாயகி பூவரசியாக நடித்து வந்த ராதிகா ப்ரீத்தி திடீரென்று இந்த சீரியலில் இருந்து விலகி இருந்தார். ஆனால் அது குறித்து பல்வேறு வதந்திகளும் கருத்துக்களும் பரவி வந்தது. சீரியலை விட்டு விலகுவதற்கு காரணம் சூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் அசீமோடு நடந்த சண்டைதான் நடிகர் அசீம் ராதிகாவை அடிக்க பாய்ந்தார் என்று ஒரு சிலர் பேட்டியில் பேசிக் கொண்டிருந்தனர்.
ஆனால் முதல்முறையாக தற்போது அது குறித்து விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் உண்மையில் சூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது என்னவென்றால் அசீமுக்கும் எனக்கும் பலமுறை சண்டை வந்திருக்கிறது. ஆனால் அதை நாங்கள் அடுத்த நிமிடமே மறந்து விடுவோம். நானும் அசீமும் காதலித்தோம் நேரில் நன்றாக பேசிக்கொண்டோம். ஆனால் வேறு ஆட்கள் இருக்கும் போது அவரை நான் திட்டினேன் என்றெல்லாம் சிலர் வதந்தி பரப்பினார்கள். ஆனால் அப்படியெல்லாம் எங்களுக்கு எதுவும் கிடையாது.
அசீம் எனக்கு நண்பனும் கிடையாது. எதிரியும் கிடையாது. இப்போது பார்த்தாலும் நான் அசீம் உடன் என்னவென்றால் என்னவென்று பேசிக்கொண்டு போவேன். ஆனால் பலர் இந்த சீரியலில் என்னோடு நடித்தவர்களில் பலர் என் முதுகுக்கு பின்னாடி என்னைப் பற்றி தவறாக பேசியிருக்கிறார்கள். அவர்களுடைய சுய ரூபத்தை தெரிந்து கொள்வதற்கே எனக்கு கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆனது. என்னிடம் நல்ல பிள்ளையாக பேசிக்கொண்டு நான் இல்லாத நேரத்தில் என்ன பற்றி தவறாக பல வதந்திகளை பேசி இருக்கிறார்கள்.
அப்படித்தான் அசீம் விஷயத்திலும் பேட்டிகளில் கூட சிலர் பேசி இருந்தார்கள். நான் அவர்களுக்கு போன் பண்ணி திட்டி இருந்தேன். ஆனால் அவர்கள் செய்த தப்பை நினைத்துப் பார்க்கவே இல்லை. சூட்டிங் ஸ்பாட்டில் நான் ஒன்றரை வருடங்களாக சம்பளம் இல்லாமல் நடித்து வந்தேன். அதுமட்டுமல்லாமல் நான் பல உடல்நல பிரச்சனைகளையும் சந்தித்தேன். எனக்கு அப்ரண்டீஸ் சிகிச்சை செய்தப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு சூட்டிங் ஸ்பாட்டில் நான் உடல் எடை குறைப்பதற்கான அறுவை சிகிச்சை செய்துவிட்டு வந்திருக்கிறேன் என்று சொல்லி பேசி இருக்கிறார்கள்.
என்கிட்ட நீ சம்பளம் தர வரைக்கும் நடிக்க வராத நீ வீட்டில் இருந்தால்தான் அவங்க சம்பளம் தருவாங்க என்று சொல்லிய ஒரு சிலர் சீரியல் தரப்பினரிடம் இந்த பொண்ணு இப்பவே இப்படி எல்லாம் பண்ணுது. இந்த பொண்ணெல்லாம் எப்படித்தான் இண்டஸ்ட்ரியில் தாக்கு பிடிக்க போகுதுன்னு தெரியல. சம்பளம் சம்பளம்னு கேட்டுகிட்டே இருக்கு என்றெல்லாம் பேசி இருக்கிறார்கள். ஒன்றரை வருடங்களாக சம்பளமே தராமல் வேலை பார்த்திருந்த போதும் கூட இந்த மாதிரியும் நான் பேச்சு வாங்கி இருக்கிறேன்.
அதுபோல அவுட்டோர் சூட்டிங் போகும்போது கூட ஒரு ரெஸ்ட் ரூம் எங்கேயும் எங்களுக்கு ரெடி பண்ணி தரது கிடையாது. நாங்களாக அங்கு பக்கத்தில் இருக்கும் ஒவ்வொரு வீடாக கதவைத் தட்டி உங்க வீட்டு ரெஸ்ட் ரூம் யூஸ் பண்ணிக்கலாமா? என்று கேட்டு பாத்ரூம் யூஸ் பண்ணி இருக்கோம். அதனாலேயே எனக்கு அதிகமான பிரச்சனைகளும் வந்தது. அதுபோல சீரியலில் திடீரென்று கதையை சேஞ்ச் பண்ணி விட்டார்கள். கதாநாயகி வில்லியாக எங்கேயாவது இருந்து பார்த்திருக்கிறீர்களா? ஆனால் இந்த சீரியலில் கதையை அப்படி மாற்றி இருந்தார்கள்.
அசீம் வந்த பிறகு ஸ்கிரிப்ட் அதிகமாக மாற்றப்பட்டது. அது அசீமால் மட்டுமல்ல இங்கு நடிக்கும் பலரும் எனக்கு முக்கியத்துவம் தரவில்லை. உனக்கு முக்கியத்துவம் தரவில்லை என்று பலர் ஸ்கிரிப்ட் விஷயத்தில் கை வைத்து கதையை மாற்றிக் கொண்டே இருந்தனர். அதன் விளைவாகத்தான் கதாநாயகி வில்லியாகவும், வில்லியாக நடிக்க கூட்டிட்டு வந்தவர் கதாநாயகியாகவும் மாறி இருந்தார். நான் வெளியே போகும்போது என்னை பலர் திட்டி இருந்தனர். அது என்னை மன உளைச்சலில் ஆழ்த்தி இருந்தது. அதனால் தான் நான் சீரியலை விட்டு விலகி இருந்தேன். ஆனால் நான் விலகியதற்கும் அசீமிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று அந்த வீடியோவில் நடிகை ராதிகா ப்ரீத்தி பேசியிருக்கிறார்.
-
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications