Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நேரம் சரியில்லை பெண் சாமியாருக்கு.. ஆரம்பித்த ஆட்டம்.. சென்னையில் வீட்டு வாடகை தந்தாரா அரசு டாக்டர்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அடுக்குமாடி குடியிருப்பு இரட்டை மரணம் தொடர்பாக, மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறார். இதில், வீட்டு உரிமையாளர் பெண் சாமியார் குறித்தும் சில சந்தேகங்களை கேட்டுள்ளார்.

AG Modern Media யூடியூப் சேனலுக்கு பயில்வான் ரங்கநாதன் தந்துள்ள பேட்டியில், "தினசரி ரத்தத்திலுள்ள சர்க்கரையை எந்திரம் மூலம் அகற்றுவதுதான் டயாலிசிஸ்.. முன்பெல்லாம் டயாலிசிஸ் செய்ய வேண்டுமானால், நிறைய பணம் செலவானது. ஆனால், இப்போது அரசு மருத்துவமனைகளிலேயே டயாலிசிஸ் செய்யும் எந்திரம் வந்துவிட்டது.

television

எபிநேசர் என்பவர் சுகர் பேஷன்ட்.. சிறுநீரக செயலிழப்பு காரணமாக, டயாலிசிஸ் சிகிச்சை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.. எனவே, ஓஎம்ஆர் மருத்துவமனையில் பணிபுரியும் அரசு டாக்டர் சாமுவேல் என்பவரிடம் சிகிச்சைக்காக தன்னுடைய அப்பாவை அழைத்து வந்துள்ளார் சிந்தியா. ஏற்கனவே திருமணமாகி டைவர்ஸ் ஆனவர் சிந்தியா.

பெண் சாமியாரின் திருமுல்லைவாயலிலுள்ள வாடகை வீட்டில், இவர்கள் குடியிருந்து வந்துள்ளனர். இந்த அப்பார்ட்மென்ட் வீட்டில்தான் பெண் சாமியாரின் முன்னாள் கணவர் வாழ்ந்து வந்திருக்கிறார்.. இந்த வீட்டில்தான் அவர் மர்மமான முறையில் இறந்துபோயிருக்கிறார். அவருக்கு இந்த பெண் சாமியார், தன்னுடைய ஆசிரமத்தில் சிலை வைத்து கொண்டாடினார்.

கணவர் மரணம்: மர்மமான முறையில் ஒருவர் இறந்துவிட்டால், அந்த வீட்டிற்கு யாருமே குடிபோக மாட்டார்கள். அந்தவகையில் பெண் சாமியாரின் கணவர் இறந்தபிறகு, அந்த வீட்டுக்கு யாருமே குடிபோகவில்லை.. நீண்ட மாத இடைவெளிக்கு பிறகு, அந்த வீட்டிற்கு சாமுவேல் எபிநேசரும், சிந்தியாயாவும் குடிவந்துள்ளனர். இந்த வீட்டுக்கு சாமுவேல் டாக்டர் வந்து சிகிச்சை அளித்துவிட்டு செல்வதாக சொல்கிறார்கள்.

என்னுடைய கேள்விகள் என்னவென்றால், "டயாலிசிஸ் சிகிச்சை தர வேண்டுமானால், வீட்டில் எப்படி வைத்து வைத்தியம் பார்க்க முடியும்? வாடகை வீட்டில் டயாசிலிஸ் வசதி கிடையாது.. அப்படியானால், தினமும் தன்னுடைய தந்தையை அழைத்து கொண்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்க வேண்டும்.

அரசு மருத்துவமனை: எபிசேநர் என்ற டாக்டர் அரசு மருத்துவமனையில் வேலை செய்வதாக சொல்கிறார்கள்.. அவர் ஒரிஜினல் டாக்டரா? அவரது ஓஎம்ஆர் மருத்துவமனைக்கு, திருமுல்லைவாயலில் உள்ளவர்கள் சென்றிருக்க முடியுமா? அப்படி செல்வதானால், அங்கு செல்வதற்கே ஒருநாள் ஆகிவிடும்.

கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் எதுக்காக, பெண் சாமியார் வீட்டுக்கு குடிபோனார்கள் என்பது விடைதெரியாத கேள்வியாக உள்ளது. பெண் சாமியாரிடம் சென்று, அருள்வாக்கு சொல்லி தந்தையை காப்பாற்றுங்கள் என்று சிந்தியா சொன்னாரா?

மரண சான்றிதழ்: சிகிச்சை பலனளிக்காமல் எபிநேசர் இறந்துவிட்டபிறகு, இன்னொரு டாக்டரை வைத்தாவது மரண சான்றிதழை, சாமுவேல் வாங்கியிருக்கலாமே? டாக்டருக்கும் சிந்தியாவுக்கும் அடிதடி மோதல் ஏற்பட்டதாகவும், இதில் தலையில் காயம் ஏற்பட்டு சிந்தியா இறந்ததாகவும் சொல்கிறார்கள். அடுக்குமாடி குடியிருப்பு என்றால், 2 பேர் சண்டை போட்டால், வெளியில் சத்தம் வந்திருக்குமே? யாருக்கும் சந்தேகம் வரலையா?

சிந்தியாவுக்கு டாக்டருடன் கள்ளத்தொடர்பு இருந்ததா? கர்ப்பிணியாக இருந்திருப்பாரா? கர்ப்பிணியாக இருந்தால், திருமணத்துக்கு வற்புறுத்தி, அதனால் டாக்டருடன் தகராறு ஏற்பட்டதா? இதனால், கொலை வரை சென்றதா? இது இயற்கை மரணமா? கொலையா? ஓஎம்ஆர் சாலையில் இருக்கிற டாக்டர், திருமுல்லைவாயலிலுள்ள பேஷன்ட்டை, வாடகைக்கு அமர்த்திய காரணம் என்ன?

வீட்டு வாடகை: வீட்டு வாடகையை தந்து வருவது டாக்டரா? சிந்தியாவா? இதற்கான ஆதாரங்கள் எங்கே? டாக்டர் வாடகையை தந்திருந்தால், அவரை விசாரிக்க வேண்டும்.. சிந்தியா வாடகையை தந்து வருபவராக இருந்தால், கடந்த 6 மாதம் வாடகை சென்றிருக்காதே? இதற்கு பெண் சாமியார் என்ன நடவடிக்கை எடுத்தார்? அப்பார்ட்மென்ட் என்றாலே மெயின்டனன்ஸ் வாங்குவார்கள்.. இங்கு 6 மாதம் மெயின்டனன்ஸ் தராமல் இருந்தால், அதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதா?

இத்தனை சந்தேகங்களும் இந்த சம்பவத்தில் எழுகின்றன.. எது எப்படியோ, பெண் சாமியார் வாழ்க்கையில் ஏழரை சனி ஆரம்பித்துவிட்டது. தெய்வம் நின்றுகொல்லும்" என்றெல்லாம் கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+